இந்தியாவில் இந்துமதக் கொள்கைப்படி கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு கொடுக்கக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி முகாம் நடத்தும் ஒன்றிய மாநில அரசுகள் ஏன் உழவுத் தொழிலாளிகளைக் காப்பாற்ற தயங்குகின்றன? இவற்றைப் பராமரிப்பதால் மக்களுக்கு என்ன பலன்? இறந்தால் மட்டுமே எலும்பும் தந்தமும் கைவினைப் பொருள்கள் செய்யப் பயன்படுகின்றன. யானைகள் வண்டி இழுப்பதில்லை. உழவனுக்குப் பயன்படுவதில்லை. பிச்சை எடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இப்பொழுது அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்கள் பயன்படுகின்றன. விவசாயமும் எந்திர மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் பசுக்களைக் குளிரிலிருந்து பாதுகாக்க அரசு போர்வைக்கு நிதி ஒதுக்கி பாதுகாக்கிறது. இவற்றுக்கு மட்டும் கரிசனம் காட்டக் காரணம் கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேரி ஆரியர்கள் பிச்சை எடுக்க இவை அதிகம் பயன்படுகின்றன. அதனால்தான் இந்து என்ற போர்வையை நம் மீது போர்த்தி அவர்கள் மட்டும் பாதிக்கப்படாமல் இருக்க நம்மைப் பயன்படுத்துகிறார்கள்.

உழவனின் நலனுக்கோ உழவனுடன் வாழும் ஆடு, எருமை, பன்றி, எருது, கழுதை, நாய், ஒட்டகம், வாத்து, கோழி போன்ற பல உயினிரினங்களுக்குப் புத்துணர்வு முகாம் நடத்தவில்லை.

உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரம், உரம் மற்றும் இடுபொருள்களில் விலையை உயர்த்தி விட்டு விளை பொருள்களின் விலையைக் குறைத்து உழவுத் தொழிலுக்கு உலை வைத்து விட்டனர்.

“நீர் இன்றி அமையாது உலகு” அதுபோல் நீர் இன்றி விளையாது பயிர்கள். ஆனால் நீர் ஆதாரங்களைப் பெருக்கி பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர்.

கரும்பிலிருந்து எடுக்கும் எத்தனாலை மாற்றி எரி பொருளாகப் பயன்படுத்தலாம். பிற நாடுகளிடம் எரி பொருளை எதிர்பார்க்கத் தேவையில்லை. விவசாய வருமானத்தைப் பெருக்குவோம் என்று ஜீரோ பட்ஜெட்டை அறிவித்து இயற்கை வேளாண்மை முறையை ஊக்கப்படுத்துவோம் என்றும் அறிவித்துவிட்டு எதையும் செயல்படுத்தவில்லை. இது எப்படி இருக்கு என்றால் “கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது” போல் உள்ளது. விவசாய தொழில் நலிந்து வருவதற்கு யார் பொறுப்பு? வேளாண் விளைபொருள்கள் உற்பத்தியாளர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

- உழவர் மகன் ப.வ.வடிவேலு

Pin It