(சமயத்தை வருங்காலத்திற்கெல்லாம் மேலும் வளர்ச்சியடையும் திறனற்றதாக வைத்துக் கொள்ள முடியாது)

மாதவிலக்கு அகவையிலுள்ள பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பாலின வேறுபாடின்றி கேரள அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபடலாம் என்று உச்சநீதி மன்ற அய்ந்து நீதிபதி அமர்வு இவ்வாண்டு செப்டம்பர் 9ஆம் நாளன்று பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கி யுள்ளது. இந்த அமர்வில் மாறுபட்ட எதிர்க்கருத்து டைய ஒரு பெண் நீதிபதி இருந்தார் என்பது ஒரு வேளை நகை முரணாகலாம்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஆர்.எம். நாரிமன், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் உடற்கூறு வேறுபாடு கருதி எவ்வகை யிலும் விதிவிலக்களிப்பது அனைவருக்கும் சமஉரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்ட விதி 14-யும் எந்தச் சமயத் திற்கும் தடையற்ற உரிமை வழங்கும் விதி 25யும் மீறுவதாகிவிடும் என ஆணையிட்டுள்ளனர். இவ்விரு விதிகளும் அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளு மாகும். இந்த அமர்வில் இருந்த நீதிபதி இந்து மல் கோத்திரா மறுப்புரை தந்துள்ளார். இவ்வழிமுறை தருக்கம் அல்லது பகுத்தறிவற்ற தன்மைத்தாயினும் இதுபோன்ற தேர்வுகளில் நீதிமன்றங்கள் முடிவெடுத் திடலாகாது என்பது என் அடிப்படைக் கருத்தாகும்.

இது ஒரு நிலையில் ஏற்புடைய கருத்துத்தான். சமயம் என்பது கடவுள் பற்றுப் பற்றியதாகும். அது நம்பிக்கையை அடிப்படையைக் கொண்டது. இதைப் பகுத்தறிவு ஆய்வுக்குட்படுத்திட இயலாது. ஒவ்வொரு சமயத்திற்கும் சில வழிமுறைகள் இருக்கும். அவற்றை மறுப்பவர்களால் தருக்கம் அல்லது தேவை கருதும் அடிப்படையில் அவை கேள்விக்குள்ளாக்கப்படும். ஆனால் அதற்கு நம்பிக்கை யாளர் பதிலிறுக்க வேண்டியதில்லை. ஆனால் இதுபோன்ற மெய்ப்பாட்டிலிருந்து மூன்று கேள்விகள் எழக்கூடும்.

சமயத்தைப் பின்பற்றும் முறை நியாயமில்லாத தாக அல்லது விரும்பும்படியாக விலக்குகின்றதாக அல்லது ஏற்கவியலாத கொடுமையானதாக இருப்பது என்பது எப்படி? இரண்டாவதாக சமயத்தின் அனுமதியைப் பெற்ற வழிமுறை எது? பிறரின் நலன்களைப் புறக் கணி துத் தன் நலன் காக்கப்படுவதற்காகச் சிலரால் திட்டமிட்டுப் புகுத்தப்பட்ட வழிமுறை எது? மேலும் மூன்றா வதாக சமய மரபுகள் கட்டாயமாக எவ்வித மாற்றத்திற் குள்ளாகாதவாறு தடுப்பு முலாமிட்டுப் புதைப்படிவமாக் கப்பட்டு, வரும் காலத்திற்கெல்லாம் பின்பற்றத்தக்க தானது எனப் பொருள்படுமா?

கடந்த காலங்களிலும் சட்டம் மரபுகளுக்கு முரண்பட்டுள்ளது. ஆங்கிலேயரின் குடியேற்ற ஆட்சிக்காலத் தில் 1829இல் ஜெனரல் வில்லியம் பென்டின்ங்கால், கணவன் மறைவை அடுத்து அவனுடைய சிதையில் அவன் மனைவியும் சிதையூட்டப்படும் கொடும் பழக்க மான ‘சதி’ ஒழிக்கப்பட்ட போது இந்தக் காட்டுமிராண்டி நடைமுறை மத அங்கீகாரம் பெற்றுள்ளது என வலி யுறுத்திய இந்துக் குழுக்கள் அந்த முடிவைக் கடுமை யாக எதிர்த்தனர். இது ஒரு சமூகச் சீர்திருத்தம் என்ப தால் இந்த மரபு ஒழிக்கப்பட வேண்டுமென இராசா ராம் மோகன்ராய் போராடிய போது அது அவருடைய உயிருக்கே ஊறு விளைவிக்கும் அளவுக்கு அவருடைய இந்துச் சகோதரர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாததால் இது மக்களிடம் எதிர்க்கும் போராட்டத்தைத் தூண்டும் என பென்டின்ங்கின் முதன்மை ஆலோசகராக இருந்த சார்லசு மெட்கால்ப் அஞ்சினார். இருப்பினும் அச்சட்டம் திருத்தப்படவில்லை.

அருவெறுக்கத்தக்கத் தீண்டாமையை ஒழிப்பதற்கு அரசமைப்புச் சட்டம் விதி 17 இயற்றப்பட்ட போதும் சமயம் சார்ந்த தனிப்பட்ட பழக்கவழக்கங்களில் அரசு தலையிடக்கூடாது என வெறுத்த இந்துக் குழுக்கள் எதிர்த்தன. ‘இந்து சட்டம்’ வரைவு 1955-56இல் அரச மைப்புச் சட்ட அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள் ளப்பட்டபோதும், குறிப்பாக இந்துத் திருமணச் சட்டத்தை எதிர்த்து ஊர்வலமும் போராட்டமும் நடத்தப்பட்டன. அவர்கள் இந்துச் சமயப்படி திருமணம் புனிதமானது என்றும், எனவே அது கலைக்க முடியாதது எனக் கருதினர். பெரும்பாலான இந்துக்கள் இவற்றிற்கு எதிரானவர் களாக இருந்தனர் எனத் தெளிவாகத் தெரிவித்தது. எனினும் நேரு அதனை நிறைவேற்றினார்.

மரபின் ஈர்ப்பும் தவிர்க்கவியலாத புதுமையும் ஒன்றுக்கொன்று முரணனானவை. மாற்ற முடியாத சமய வழக்கைப் புனிதம் பெறச் செய்வதை கைக்கொள் ளும் மரபை உருவாக்குவது எது என்பது ஒரு முக்கிய மான வினாவாகும். சபரிமலைத் தலைமைத் தெய்வ மான அய்யப்பன் மணமாகாதவர் என நம்பப்படுபவர். கதைகளின்படி கொடியவன் மகிசாகப்புரியைத் தோற் கடித்த பின் அவரை மணந்துகொள்ள அவள்முன் வரு கிறாள். ஆனால் பக்தர்களைக் காப்பதுதான் தன் ஒரே கடமை எனச் சொல்லித் துறவறம் பூண்டார். அந்த அறிவிப்பு ஒன்றே அவரைத் துதிக்க விழையும் மாத விலக்கு அகவை பெண்களைத் தடைசெய்வதற்குப் போதுமான அடிப்படையாகிவிடுமா?

இதில் வியப்ப என்னவென்றால், 1991 வரை மாத விலக்கு அகவைப் பெண்களும் அய்யப்பன் கோவி லுக்குள் செல்ல முடியும்; சென்று வந்தனர். திருவிதாங்கூர் மகாராணி 1940இலும் தற்போதைய கன்னட அமைச்சர் செயமாலா 1986இலும் கோவிலுக்குள் சென்றவர் களுள் நன்கு அறியப்பட்டவர்களாவர். ஆனால் கேரள உயர்நீதிமன்றம், நெடுங்காலம் தொட்டு நடப்பில் உள்ள பழக்கவழக்கத்தின்படி இதுபோன்ற தடைகள் இருந்த தாகச் சொல்லி, அதன் அடிப்படையில் 1991இல் மாத விடாய் அகவைப் பெண்கள் கோவிலுக்குள் நுழையத் தடை விதித்தது. அப்படியெனில் 1991க்குமுன் நுழைவ தற்கான தடைமீறல்கள் எப்படி நிகழ்ந்தன?

இத்தடையின் ஆதரவாளர்களான நம்பிக்கை யுடையவர்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கும் எண்ணமின்றி சமநிலை நீதிப்படியான நடுநிலை, நேர்மை அடிப்படையில் கோவில் நுழைவுக்கான தடையை நீக்குவதற்கு ஏதுவாக அமையுமென நான் நம்புகிறேன். அரசமைப்புச் சட்ட விதி 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு என அறுதியிட்டுக் கூறியுள்ளதை அரசு எவருக்கும் மறுக்கக்கூடாது. அனைவரும் மனச்சான்று டனான உரிமை மற்றும் சுதந்தரமாக எச்சமயத் தையும் தழுவவும், பின்பற்றுவதற்கான உரிமையை யும் சமமாக எவரும் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என்று விதி 25 தெளிவாக வரையறுக்கிறது.

விதிகளுக்கு முரணான நடைமுறைக்கு அல்லது சமய நம்பிக்கைக்கு எதிராக இதுபோன்ற அரசமைப்பு விதிகளைப் பயன்படுத்தும் போது எதிர்ப்பு இருக்கும். அனைத்துச் சமயங்களும் அப்படித்தான். அண்மை யில் 2018இல் உச்சநீதிமன்றம், பெண்கள் மசூதிக்குள் செல்வதற்கிருந்த தடையை நீக்கியது. இதைத் தருக்கா அறக்கட்டளை, பெண்கள் உள்ளிட்ட எல்லா இசுலாமி யர்களும் பொதுவாக எதிர்த்தனர். ஆனால் மசூதியின் புனிதமெனக் கருதப்படும் பகுதிக்குள்ளும் பெண்கள் சுதந்தரமாகச் சென்றனர்.

2019 சனவரி 22இல் சபரிமலை தொடர்பான மறு ஆய்வு வழக்கை உச்சநீதிமன்றக் கூடத்தில் வெளிப் படை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இருக்கிறது. முடிவு எதுவாயினும் இந்தச் சிக்கலுக்கு அமைதியான தீர்வு எட்டப்படும் என நம்பலாம். சமய மரபு விளக்கப் படும் நிலையில் அவரின் 1600 காவிய மனைவிகள் மற்றும் அவரின் களியாட்டக் கோபியர்களுடன் இருக்கும் கிருஷ்ணனைப் பல பக்திப் பாடல்கள், என்றும் திருமண மாகாதவராகக் காட்டுவது எப்படி என்பதை அடிக்குறிப் பாகச் சேர்க்கிறேன்.

நன்றி : Times of India, 8-12-18

தமிழில் : இரா. பச்சமலை

Pin It