ஆளுநர் அவர்களே!
28 ஆண்டுகள் போதாதா?
எப்போது எம் மக்களை விடுவிப்பீர்கள்?
இராஜீவ் காந்தி கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், இரவிச்சந்திரன், ஜெயக்குமார், இராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரும் வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் வாடிவதங்குகிறார்கள்.
அவர்கள் தாங்கள் சிறை புகுந்த நாளிலி ருந்து, தங்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள் வதிலும், நன்னடத்தை மூலம் நல்ல பெயர் வாங்கு வதிலும் குறியாக இருக் கிறார்கள்.
தில்லி உச்சநீதிமன்றம், ஓராண்டுக்கு முன், தமிழக ஆளுநர் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, அவர் களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறிவிட்டது. அதன்படி தமிழக அரசும் ஆளுநருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. ஆனாலும் தமிழக ஆளுநர் அவர்கள் இந்த ஏழு பேரையும் இன்னும் விடுதலை செய்யவில்லை. இது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானதாகும்.
வெள்ளையன் காலத்தில் கொலைக் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டால்-தண்டனை பெற்ற வர்கள் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த பிற்பாடு, அந்தக் குற்றவாளிகளின் நன்னடத்தை பற்றி ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்வார்கள். அவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாக மாறியிருந்தால், அக்குற்றவாளிகளை 14 ஆண்டுகள் முடிந்த உடனே விடுதலை செய்வார்கள்.
மன்மோகன் சிங் காலத்திய காங்கிரசு அரசாங்கமும், இன்றைய மோடி காலத்து பாரதிய சனதா அரசாங்கமும் 28 ஆண்டுகள் சிறையிலிருந்த இவர்களை விடுதலை செய்யாதது அநீதி ஆகும்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, சிறையில் உள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் அவர்கள் நீதி கேட்டு, கோவையிலிருந்து 24.1.2019 வியாழன் அன்று பரப்புரைக்காகப் பயணம் புறப்பட்டுள்ளார்.
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலை வர் கு. இராமக்கிருட்டிணன், வழக்குரைஞர் சிவக்குமார், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் அற்புதம் அம்மாளுக்கு ஊக்கமளித்து அந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.
அற்புதம் அம்மாள் நீதி கேட்கும் பயணத்தை - திருப்பூர், ஈரோடு, சேலம், கிருட்டிணகிரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி முதலான இடங்களுக்குச் சென்று, எல்லா இடங்களிலும் பொது மக்களைக் கூட்டி நீதி கேட்டுப் பரப்புரைப் பயணம் செய்ய உள்ளார்.
செய்தி -“The Hindu”, 25.1.2019