ஓவியர் வீரசந்தானம் 13.7.2017 வியாழன் அன்று மறைந்தார். ஓவியர் வீர சந்தானம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப் பன் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1947ஆம் ஆண்டு பிறந்தார்.
ஓவிய ஆர்வம் காரணமாக கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் ஓவியக்கலைப் பட்டயப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
1972இல் சென்னை ஓவியக் கல்லூரியில் தொழில் துறை ஆடை வடிவமைப்பில் பட்டய மேற்படிப்பை முடித்தார். சென்னை ஓவியக் கல்லூரியிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் இராஜஸ்தானில் பனஸ்தலி வித்யா பீடம் என்ற பல்கலைக்கழகத்தில் (ஃப்ரெஸ்கோ) சிறப்பு சுவரோவியக் கலைப் பயிற்சி முடித்தார்.
சென்னை, மும்பை, பெங்களூரு, காஞ்சிபுரம், திரிபுரா, நாக்பூர், மிசோராம் என இந்தியாவின் பல பகுதிகளில் நெசவுத் தொழில் ஓவியத்தைப் பயன்படுத் தும் வரைகலையைப் பயிற்றுவித்தார்.
சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சந்தியா ராகம், அவள் பெயர் தமிழரசி, பீட்சா, மகிழ்ச்சி, அரவான், கத்தி, அநேகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். இவருடைய ஓவியங் களைப் மய்யப்படுத்தியே தஞ்சாவூரில் முள்ளிவாய்க் கால் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய விடுதலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அமைப்பு வேறுபாடுகளைக் கருதாமல் எந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினாலும் அதில் கலந்துகொள்வார்.
14.7.2017 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு ம.பெ.பொ.க. சார்பில் வே. ஆனைமுத்து, கலச. இராம லிங்கம், வாலாசா வல்லவன், தாம்பரம் மா.சுப்பிர மணி, கு.கிருஷ்ணமூர்த்தி, சோனலை மாசிலாபாரி, ப.வடிவேலு ஆகியோர் நேரில் சென்று தேனாம் பேட்டையில் அவருடைய இல்லத்தில் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
வளர்க வீரசந்தானத்தின் புகழ்!