சதிவழக்குகள் :

சௌரி சௌரா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 1923 சனவரியில், 21 காவல்துறையினர் மாண்டதற்காக, 172 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்தக் கொடுமையான தீர்ப்பை எதிர்த்து, தேசிய காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை. காந்தியோ சௌரி சௌரா வன்முறை நிகழ்ச்சியைக் காரணமாகக் காட்டி, ஒத்துழையாமை இயக்கத்தையே திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும் ‘தவறு புரிந்தவர்கள் தண்டனைக்குள்ளாவதுதான் நியாயம்’ என்றும் உபதேசம் செய்தார்.

சௌரிசௌரா தீர்ப்பினை எதிர்த்து 1923இல் எம்.என். ராய் இநதியத் தொழிலாளர் சங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார், கம்யூனிஸ்டு அகிலமும் ஓர் அறிக்கையை விடுத்தது. அதில், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்புமாறு உலகம் முழுவதிலுமுள்ள உழைப்பாளி மக்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டிருந்தது. சௌரி சௌரா தீர்ப்பினை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்யப்பட்டது, அவ்விசாரணையின் முடிவில், 19 பேருக்கு மரண தண்டனையும், 113 பேருக்கு மூன் றாண்டுச் சிறைத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்ட னை வரையிலும் வழங்கப்பட்டது. 38 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டனர்.

சென்னை நகரத்தில் பக்கிங்ஹாம் கர்நாடிக் ஆலையில் மட்டும் 1922-23இல் நான்கு வேலை நிறுத்தங்கள் நடந்தன. அப்போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தொழிலாளர்கள் இருவர் பலியாயினர். பஞ்சாலைத் தொழிலாளர்கள் மட்டுமல் லாது, இரயில்வே தொழிலாளர்களும் இக்காலத்தில் போராட்டக் களத்தில் குதித்தனர். இந்தப் பின்னணி யில்தான், 1923ஆம் ஆண்டு சென்னையில் சிங்கார வேலரின் முன்முயற்சியால் மே தினம் கொண்டாடப் பட்டது. இக்கூட்டம் பற்றி ‘ஹிந்து’, ‘சுதேசமித்திரன்’ நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டன.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, சட்டபூர்வமாக இயங்கவியலாத அன்றைய சூழ்நிலையில் - பெஷாவர் சதிவழக்குகள் நடைபெற்ற அந்தக் காலக்கட்டத்தில், சட்டப்பூர்வமாக இயங்கக்கூடியதொரு அரசியல் கட்சி யினை அமைக்க வேண்டியதன் முதன்மையை 1921ஆம் ஆண்டின் இறுதியில் எம்.என். ராய் உணர்ந் திருந்தார். இக்கருத்தைத் தமது ‘வேன்கார்டு’ ஏட்டில் எம்.என். ராய் குறிப்பிட்டிருந்தார். 1922 திசம்பர் 19 அன்று டாங்கேவுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவில் இயங்கி வந்த அய்ந்து குழுக்களை இணைப்பதற்காக, அய்ரோப்பாவில் ஒரு மாநாடு நடக்கவிருப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவ்வாறு ஒரு மாநாடு அய்ரோப்பாவில் நடைபெறவில்லை. அன்று டாங் கேயும், சிங்காரவேலரும் அப்படியொரு மாநாட்டை நடத்தலாம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப் பினும், சிங்காரவேலர் இந்தியாவிலேயே ஒரு சட்ட பூர்வ வெகுஜனக் கட்சியை அமைத்திட முயற்சிகளை மேற்கொண்டார்.

பெஷாவரில் தாஷ்கண்ட்-மாஸ்கோ சதிவழக்குகள் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே, இந்தியா விலிருந்த கம்யூனிஸ்டுகளைக் கைது செய்யும் படலம் தொடங்கிவிட்டது. சவுகத் உஸ்மானி, முசாபர் அகமது, குலாம் உசேன் ஆகியோர் 1923 மே மாதத்தில் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் தொழிலாளர்-விவ சாயிகள் கட்சியை அமைக்கும் முயற்சிக்குப் பலன் கிடைப்பதைப் பொறுக்க முடியாத ஆங்கிலேய ஆட்சியாளர்கள், இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்டுகள் மீது ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். இதற்கிடை யில், குலாம் உசேன் மனம் தளர்ந்து, “திருப்திகர மான விளக்கம் தருவதாக” ஆட்சியாளர்களுக்குக் கடிதம் எழுதினார். நளினி குப்தா, பிரிட்டிஷ் உளவாளி யாக இருக்க ஒப்புக்கொண்டார். தாஷ்கண்ட்-மாஸ்கோ சதிவழக்கு முடியுந்தறுவாயில் இருந்ததால், புதிய வழக்கினை ஜோடிப்பது என்று ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சி முடிவெடுத்தது. 1924இல் கான்பூர் சதிவழக்கு ஆரம்பமானது.

முசாபர் அகமது, சவுகத் உசுமானி, எஸ்.ஏ. டாங்கே, நளினி குப்தா ஆகிய நால்வர் மீதும் சதி வழக்கு நடைபெற்றது. செயலில் அடிப்படையில்லாமல், நினைத்த எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட இந்தச் சதிவழக்கின் விசாரணை கான்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், சௌரி சௌரா வழக்குப் புகழ் நீதிபிதி எச்.இ. ஹோம் முன்னிலையில் நான்கு வாரங்கள் நடைபெற்றது. 1924 மே 20 அன்று வழங் கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் “ரஷ்ய போல்ஷ்விக் உளவாளிகள்” என்று நிரூபிக்கப் பட்டதாகக் கூறி, அவர்களுக்கு நான்காண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

1924ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இங்கிலாந்தில், “தொழிலாளர் கட்சி” (Labour Party) ஆட்சிக்கு வந்திருந்தது. இங்கிலாந்திலிருந்த இடதுசாரித் தொழி லாளர் பிரிவினர், “எப்படி ஒரு தொழிலாளர் கட்சியின் ஆட்சி, இந்தியாவில் தொழிலாளர்-விவசாயிகள் கட்சி யினை அமைக்க முயன்றதற்காகச் சிலர் மீது சதிவழக் கைத் தொடரலாம்?” எனக் கேள்விக்கணை தொடுத்த னர். இங்கிலாந்தில் பல தொழிற்சங்கங்கள் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றின. வழக்குக்கு நிதி திரட்ட இங்கிலாந்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சி வழக்கு நிதி அனுப்பியது. இந்தியாவில் செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, அதற்கென “இந்தியக் கம்யூனிஸ்ட் பாதுகாப்புக் குழு” ஒன்று அமைக்கப்பட்டது. மறுபக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.என். ராய் இச்சதி வழக்குக்காகக் குரல் கொடுத்து வந்தார். அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது :

“கான்பூர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்கள் நாங்கள் எண்மர் மட்டுமல்ல; இந்தியத் தொழிலாளர் வர்க்கம் முழுமையும், அதற்குள்ள அரசியல் ஸ்தாபனம் அமைக்கும் உரிமையும், அரசியல் போராட்டம் நடத்தும் உரிமையும் இன்றைக்கு விசார ணைக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்காக இந்தியாவில் வளர்ந்து வரும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தினை சட்டப்பூர்வ மற்றது என்று அறிவிப்பதற்காக எட்டு தனி நபர்கள் மீது, காலம்காலமாகச் சொல்லப்பட்டுவரும் அதே புளித்துப்போன வார்த்தையாகிய, ‘சதி செய்த குற்றம்’ சுமத்தப்பட்டுள்ளது. சமதர்ம கம்யூனிசப் பிரச்சாரம் அதாவது தொழிலாளர்வர்க்கப் பிரச்சாரம் பிரிட்டனில் தடைசெய்யப்பட்டுள்ளதா? அப்படியில்லாத போது, இந்திய மக்களுக்கு மட்டும் ஏன் அந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்? சமதர்ம கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எப்பகுதியிலேனும் தடை செய்யப்பட்டுள்ளதா? அப்படியெனில் இந்திய மக்களுக்கு மட்டும் ஏன் அந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்த வரையில் அவை மூன்றாவது அகிலத்தின் உறுப்பினர்களாக இருப்பது குற்றமாகச் சொல்லப்பட்டுள்ளதா? அவ்வாறு இல்லாத நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அப்படி அகிலத்தில் அங்கம் வகிப்பதனை மட்டும் ஏன் சதித்திட்டம் என்று கூற வேண்டும்?”

இந்தக் கான்பூர் சதி வழக்கின் காரணமாய் சிறையிலிருந்த போதுதான், தன்னை விடுவிக்கும் படியும், அப்படி விடுவித்தால், ஆங்கிலேய அரசுக்குப் ‘பணிபுரிய’ சித்தமாயிருப்பதாகவும் டாங்கே ஏகாதி பத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதினார் என்கிறார் முசாபர் அகமது. ஆனாலும் டாங்கே அப்போது விடுதலை செய்யப்படவில்லை. டாங்கேயின் கடிதங் கள் இன்று தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இவை 1964ஆம் ஆண்டில்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தன.

- தொடரும்

Pin It