தமிழில் : சா.ஜெயராஜ்

சிங்கள மொழியை மட்டும் முஸ்லிம்கள் தேர்வு செய்தது முன்னேற்றமான சான்றானது.  இவ்வாறு சிங்கள போதனா முறையைத் தேர்வு செய்ததில் அய்யத்துக்கிடமின்றிக் கிழக்கு மற்றும் மன்னார் பகுதி முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டனர்.  மேற்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் ஆங்காங்கே உதிரியாக வசித்த முஸ்லிம்களுடைய தாகவே இருந்தது இந்தத் தேர்வு.  தமிழர்களிட மிருந்து முஸ்லிம்கள் மிகவும் எளிமையாகப் பிரிந்து சென்றுவிடக்கூடும் என்று தமிழர்கள் எண்ணினர்.  ஆனால், இந்த எண்ணம் ஏகஅளவில் தமிழ் பேசும் பகுதிகளான மட்டக்களப்பு, மன்னார் பகுதிகளில் காணப்படவில்லை.  அது, கொழும்பைப் பூர்விகமாகக் கொண்ட முஸ்லிம் தலைவர்களின் முயற்சியின் விளைவாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

1956-க்குப் பிற்பட்ட அரசாங்கங்கள், குறிப்பாக பண்டாரநாயகா அரசாங்கங்கள் தமிழர் எதிர்ப்புக்கு ஒரு பொறியாக முஸ்லிம்களைப் பயன்படுத்தத் தொடங்கின.  “மொழி விவகாரம்” மெள்ள மெள்ள இனப்பகைமையாக மாறியபோது, நாட்டில் உள்ள இரண்டாவது, பெரிய சிறுபான்மைக் குழுவின் நிலைப்பாடானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

கே.எம்.டி.சில்வா பின்வருமாறு கருத்துரைத்தார்: “ஒன்றுக்கு மேற்பட்ட சமூகங்கள் வாழும் ஒரு சமுதாயத்தில் அரசுச் செயல்பாட்டில் உள்ள ஓர் அடிப்படைக் கூறாக விளங்கும் சமநிலைப்படுத்தலில் தமிழர்களுக்கு எதிரான கருவியாக முஸ்லிம்களை வளர்ப்பதற்கு அரசு எந்திரத்தின் வகைமுறை வாய்ப்பு களை சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்து பயன் படுத்தியிருக்கின்றனர் என்று ஒருவர் நினைக்கக் கூடும்.

இது எப்படி முஸ்லிம் அரசியல் போக்கை நிர்ணயித்தது என்று அமீர் அலி விளக்குகிறார் :

“முஸ்லிம் சமூகத்திடம் அரசாங்கம் இவ்வளவு இரக்கமனத்துடன் நடந்துகொண்டதற்கும் ஓர் அரசியல் காரணம் உண்டு.  இது சிங்களவர் களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே யான இனமோதலிலிருந்து எழுகிறது.  தாய் மொழியாகத் தமிழைப் பேசி வருபவர் களையும் தன்வசம் கொண்ட முஸ்லிம் சமூகம் அரசியல் கட்சிகளில் பங்குகொள்ள மறுதலிப்பதால் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் ஆதரவான சமஷ்டிக் கட்சியின் நிலைப்பாட்டில் பொது வாக அய்யம் எழுகிறது.  கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்களும், இலங்கைத் தீவில் உள்ள மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினரும் சமஷ்டிக் கட்சியில் இணைய முடியும் என்றால், சமஷ்டிக் கட்சியின் வலிமை பெரிய அளவில் உயரும்.  இவ்வாறாக, சிங்கள அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை சிங்களப் பாசறைக் குள்ளேயே வைத்துக்கொள்ள முனைகிற வேளையில், இரண்டு பேரினங்களுக்கிடை யேயும், இரண்டு பெரிய கட்சிகளுக்கிடை யேயும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதன் மூலம் அதிகபட்ச பலனை அனுபவிக்கலாம் என்று முஸ்லிம்களும் உணரத் தலைப் பட்டனர்.”

தமிழர்களின் நோக்குநிலையில் பார்த்தால், கல்வித்துறை அமைச்சர் என்ற வகையில் பதியுதின் மஹமது கூறிய கூற்று இந்த அரசியல் தந்திரத்தின் உச்சத்தின் வெளிப்பாடு.  இவர் இரண்டாவது முறையாக (1970-77) கல்வி அமைச்சராகப் பதவி வகித்தபோதுதான் பல்கலைக்கழகச் சேர்க்கை களில் தர அளவுப்படுத்தும் முறை கொண்டுவரப் பட்டது.  இந்தத் தர அளவுப்படுத்தும் வகைமுறை பல்கலைக்கழகங்களில் பொறியியல், மருத்துவம் போன்ற உயர் தொழிற்கல்விப் பிரிவுகளில் தமிழர்கள் சேர்வதற்கான வாய்ப்பைத் தகர்த்தது.  அந்தக் கால கட்டம்தான் தமிழர்களின் அரசியலில் இளைஞர் களின் வன்முறை தோன்ற விதை போட்டது.  பதியுதின் மஹமது கல்வித்துறை அமைச்சராக இருந்த காலமும், சிங்கள, தமிழ்ப் பள்ளிகளுக்கு எதிராக முஸ்லிம் பள்ளிகளை உருவாக்கியதைக் குறித்தது.  இது, முஸ்லிம்கள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட சிறப்புச் சலுகை என்று கருதப்பட்டது.  இந்த நடவடிக்கைகள் சில சிங்கள வர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தின.

பதியுதின் மஹமதுவின் கல்வித் தந்திரம் முஸ்லிம்கள் தங்கள் சமய - பண்பாட்டு அடை யாளத்தைப் பேணிக் கொள்ளும்படி செய்து கல்வித் துறை மூலமாக முஸ்லிம்களுக்குச் செய்யப்பட்ட அனுகூலமான நடவடிக்கைகள் பற்றிய குற்றச் சாட்டுகள் சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம் களுக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றிய போது, 1970-களின் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடித்தன.  அப்போது முஸ்லிம் கல்வித்துறைக் கட்டமைப்பால் எந்த இடையூறோ குறுக்கீடோ இல்லாமல் சிங்கள போதனா முறையிலிருந்து தமிழ் போதனா முறைக்கு மாற்றிக்கொள்ள முடிந்தது.  அப்போதுதான் பதியுதின் மகமதுவின் அரசியல் விவேகத்தை அனைவரும் கண்டறிய முடிந்தது.  இவ்வாறு, அரசியல் உணர்வின் ஒரு கட்டத்தில் தமிழர்கள் தங்கள் செலவில் முஸ்லிம்கள் இலாபம் பெறுகின்றனர் என்று எண்ணத் தொடங்கினர்; பின்னர் வேறொரு உணர்வுநிலையில் இரு குழுக்களும் சிங்கள தேசிய உரிமைகளைப் பெறுவது முடிவுக்கு வருகிறது என்று உணர்கின்றனர்.

முஸ்லிம் - சிங்கள நல்லுறவுகள்

சிங்களவர்களுடன் முஸ்லிம்கள் கொண்டிருந்த நல்லுறவு, குறிப்பாக, எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளிலும் மிக நுண்ணியதாக இருந்து

வந்தது.  அரசியல் செயல்பாட்டில் இன்று ஆதிக்கம் செலுத்தும் கருத்துநிலை அடிப்படைக் கூறானது - சிங்கள பௌத்தத் தேசியம் - அது தமிழர்களுக்கு எதிரானதாக இருப்பதைப் போல் பின்னாளில் அதை முஸ்லிம்களுக்கு எதிரானதாக மாற்றும்.  சிங்கள - பௌத்தக் கருத்துநிலையைக் கொண்ட சிங்களச் சமூகம் அனுபவிக்கும் பலனும், சிறுபான்மையினர் (தமிழர்கள் / முஸ்லிம்கள்) வசிக்கும் பகுதிகளில் தங்களை மீண்டும் நிலைப் படுத்திக் கொள்ளும் பொருட்டுப் பயன்படுத்தப் பட்ட வரலாற்றுப் புனைந்துரைகளும் தவிர்க்க இயலாத நிலையில் முஸ்லிம்களுடன் பகைமை கொள்ளுகிற நிலைக்கு இட்டுச் சென்றுவிடும்.

நாம் முன்பே பார்த்தவாறு, அவர்களுடைய புவிசார், அரசியல் இருப்பின் குறிப்பிட்ட உள்ளார்ந்த பண்புத்திறமானது, சிங்களவர்களுக்கு எதிரான வெளிப்படையான முரண் கொள்ளும் முஸ்லிம்களின் திறனைக் கட்டுக்குள் கொண்டுவருகிறது.  ஆனால், அம்பாறையில் அவர்கள் செல்வாக்கு செலுத்தும் வழிவகை - முஸ்லிம்களின் ஒரே பலம் என்றிருந்தது - முஸ்லிம்கள் வெளிப்படையாகவே தங்கள் அச்சத்தைக் காட்டுகிற அளவுக்கு நெருக்கடி கொடுத்த திடீர் சிங்களக் குடியேற்றத் தீவிரத்தின் காரணமாக நீர்த்துப் போனது.  இந்த வகையில் “இலங்கையில் முஸ்லிம்கள் ஒதுக்கித் தள்ளப் படுகிறார்களா? - சில உண்மைகளும், சிறப்புக் கூறுகளும்” என்ற தலைப்பில் எம்.ஐ.எச். மொஹைதீன் எழுதிய ஆவணக் கட்டுரையானது பின்வருமாறு மிகவும் வெளிப்படையாகக் கூறுகிறது:

“விடுதலைக்குப் பிறகு, முஸ்லிம்கள் சமுதாய உறவில் தங்களுடன் சிங்களப் பௌத்தர்கள் பரந்த மனப்பான்மையுடன் விளங்குவர் என்று எதிர்பார்த்தனர்.  முஸ்லிம்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் சிங்கள வர்கள் பகுதிகளிலும், மூன்றில் ஒரு பங்கினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.  சமூகத்தில் பாதிக்கு மேற்பட்டோர் வணிகத்தைச் சார்ந் துள்ளனர்; மற்றையோர் வேளாண் நிலத்தைச் சார்ந்துள்ளனர்.

விடுதலைக்கு அடுத்து வந்த அரசாங்கங்கள் நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவியுள்ளன.  கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம், ஜவுளிக் கழகம், வன்பொருள் கழகம், பெட்ரோலியக் கழகம், உரக் கழகம், உப்புக் கழகம், நெல் விற்பனைக் குழுமம், ஜெம் கழகம் போன்றவை உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, தேசிய வணிக விநியோகம் ஆகியவற்றில் 70 விழுக்காட்டைத் தம்வசம் வைத்திருந்தன.  எஞ்சியுள்ளதில் 25% சிங்கள ஆதிக்கத்தில் உள்ள அரசு வங்கிகள், வர்த்தக மையங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  இன்று, முஸ்லிம் சமூகத்திடம் வணிகத்தில் 5% கூட இல்லை.”

முகைதீன் தொடர்ந்து, முஸ்லிம் மசூதிகளும், புனிதத் தலங்களும் தாக்கப்பட்ட இடங்களைப் பற்றி (மாஹியங்கான, கோடவேலா, புத்தளம், கண்டி) எடுத்துச் சொல்கிறார்.  மேலும், முஸ்லிம் களுக்கு எதிராக நடந்த வன்முறைச் செயல்களையும் (காலி, ஆடுலுகாமா, பாணாத்துறை, நிக்கெவெ ராத்தியா) குறிப்பிடுகிறார்.  பயிற்று மொழியாக சிங்களத்தை முஸ்லிம்கள் தேர்வு செய்வது ஒருபுற மிருக்க, முஸ்லிம் குழந்தைகள் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுள்ளனர் என்றும் சிங்கள மொழியின் மூலம் பௌத்தத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறுவதற்கு, அவர் காட்டும் புள்ளிவிவரமும் முக்கிய மான ஒன்று.  முஸ்லிம்களின் பொருளாதாரச் சிதைவு - குறிப்பாக, அவர்கள் நிலத்தை இழப்பது தொடர்பான விவரங்கள் மிகவும் முக்கியமானவை.  முஸ்லிம்கள் பயிர் செய்துகொண்டிருந்த விளை நிலங்களை கந்தளை ஷுகர் கார்ப்பரேஷன் கையகப் படுத்திக்கொண்டது என்று அவர் குறிப்பிடுகிறார்.  இப்போது அம்பாறையில் நிலம் வைத்திருப்பவர்கள் 76% சிங்களவர்கள், 15% முஸ்லிம்கள், 9% தமிழர்கள் என்று விவரமளிக்கிறார்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பின்பற்றியும், குடியுரிமைச் சட்டங்களினால் பொதுவாக முஸ்லிம்கள் சந்திக்கும் பல்வேறுபட்ட இன்னல்களைப் பற்றியும் கூட அவர் தகவல் அளிக்கிறார்.  அமைச்சர் பதவி களில் அரசு உயர் பொறுப்புகளில், மாநகர சபைகளில் முஸ்லிம்களை நியமிப்பது என்பது நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு வருவாயில் இரண்டாவது மிகப் பெரிய ஆதாரத்தைக் கொண்டு மத்திய கிழக்கு வேலைவாய்ப்பைத் தடையின்றிப் பெறுவதற்கு அராபிய முஸ்லிம் நாடுகளை வளைத்துப்போடும் தந்திரம்தான் என்று அவர் வாதிடுகிறார்; தேயிலை மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்வதும், எளிய வழிமுறைகளில் எண்ணெய் இறக்குமதி செய்வதும் முஸ்லிம் நாடுகளின், அணிசேரா இயக்கத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்குத்தான் என்றும் குறிப்பிடுகிறார்.  இந்த நுணுக்கமான விவரங்களைப் பார்க்கும்போது, முஸ்லிம்களாகிய நாம் புதுத்திசையில் சென்று ‘திட்டமிட்டு ஓரங் கட்டப்பட்டு விட்டோம்’ என்று ஒருமித்த குரலில் கத்தலாம் என்று கூறி முடிக்கிறார் முகைதீன்.

இவற்றைப் போன்ற கூற்றுகள் சிங்களவர் களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவில் இருப்புகொள்ளும் முரணை வெளிப் படுத்துவதுடன், சிக்கலைக் கொண்டுள்ள எல்லா இனக்குழுக்களிடையேயும் நிலவிவரும் தவிர்க்க வியலாத அவநம்பிக்கையையும் சுட்டிக்காட்டு கின்றன.

அநேகமாக இந்நிலையில், ஒருவர் முஸ்லிம் தலைமையின் வர்க்க அடிப்படையை வெளிப்படுத்த வேண்டும்.  முஸ்லிம் தலைமையின் இருப்புக்குக் கொழும்பு நகரம் அடித்தளம்.  அங்கே அரசியல் நிலைப்பாடு எடுத்து வாய்ப்புகள் பெற்றதற்கு, மேற்கு, மத்திய மாகாணங் களைச் சேர்ந்த முஸ்லிம் களின் செல்வாக்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.  கிழக்கு மாகாணம் கூட இந்தத் தலைமையின் செல் வாக்கு வட்டத்துக்குள்தான் இருக்கிறது.  முக்கிய மான முஸ்லிம் தலைவர்கள் பெரும்பாலானோர் கிழக்குப் பிரதேசங்களிலுள்ள தொகுதிகளுக் கான பிரதிநிதிகளாகியுள்ளனர் அல்லது அப்படி பிரதிநிதி களாக முயன்றுள்ளனர்.

சமய ஒருமைப்பாட்டு உணர்வைக் கவனத்திற்கொள்ளும்போது, முஸ்லிம் தலைமையை எதிர்க்கிற அளவுக்குக் கிழக்கு மாகாணத்தில் பிரமுகர்கள் யாரும் தோன்று வதற்கான வாய்ப்பு ஒருபோதும் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.  அவர்கள் கொழும்பு என்ற வட்டத்துக்குள் ஈர்க்கப்படுகின்றனர் அல்லது தனித்தனியே குரல் கொடுக்கின்றனர்.  ஆனால், இந்த நிலைமை இப்போது மாறி வருகிறது; பிரதேசத்தின் சமுதாய அரசியல் எதார்த்தங்களைக் கவனத்திற் கொண்ட, அரசியல் கடப்பாடுகளை உணர்ந்த உள்ளூர் முஸ்லிம் தலைமை கிழக்கு மாகாணத்தில் இப்போது மலர்ந்து வருகிறது.

முஸ்லிம்களும், தமிழர் அரசியல் கட்சிகளும்

தமிழர்கள் செல்வாக்கு செலுத்தும் பகுதியில் முஸ்லிம்களின் அரசியல் அமைவுக்கு இசைவான சூழ்நிலை இருப்பதாக, தமிழர் அரசியல் கட்சிகள் தெளிவாக, திருத்தமாகக் குறிப்பிடாதது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் பிரதான காரணிகளுள் ஒன்று.  ஜீ.ஜீ.பொன்னம்பலமும், அவரது அனைத்திலங்கை தமிழ் காங்கிரசும் விடுத்த ஐம்பது - ஐம்பது கோரிக்கை எல்லாச் சிறுபான்மை யினருக்குமான கோரிக்கைப் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்களையும் உள்ளடக்கியது என்பதில் ஐயமில்லை; ஆனால் டி.எஸ்.செனநாயக அமைச்சர வையில் சேர வேண்டும் என்று பொன்னம்பலம் முடிவெடுத்த பிறகு, முஸ்லிம்கள் மீது அனைத் திலங்கைத் தமிழ் காங்கிரஸ் கொண்ட அக்கறை ஒருபோதும் நம்பிக்கைக் குரியதாக இல்லை.

இலங்கைத் தமிழ் அரசு கட்சி முஸ்லிம்களின் இலங்கைத் தமிழர் அரசியல் அடையாளப் பரப்பில் ஒரு தனிப்போக்கைப் பதிவு செய்தது.  அது இலங்கை அரசியல் சொல்லகராதியில் “தமிழ் பேசும் மக்கள்” என்ற கருத்துருவாக்கத்தைக் கொண்டு வந்தது.  தமிழர் அரசியல் கட்டமைப்புக் குள்ளே முஸ்லிம்களைக் கொண்டுவருவதற்காகவே வெளிப்படையாக இந்தச் சொல்லாக்கம் உருவாக்கப் பட்டது.  இந்த நிலைப்பாடு தமிழர்களின் அரசியல் சிந்திப்பில் ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தை நிறுவியதுடன், அதன் விளைவாக உடனடியாக சமஷ்டிக் கட்சியில் முஸ்லிம்களின் பங்கேற்புக்கும் வித்திட்டது. 

எம்.எஸ்.காரியப்பர், எம்.எம்.முஸ்தபா, எம்.சி.அகமது ஆகியோர் கிழக்கு மாகாணத் தொகுதி களிலிருந்து சமஷ்டிக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்துக்குச் சென்றனர்.  என்றாலும், பிறகு அவர்கள் எல்லோரும் அன்றைய அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.  அரசியல் கடப்பாட்டில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் முற்றிலும் கருத்துநிலை மாற்றங்களின் விளைவு அல்ல;  இந்நாட்டின் பாராளுமன்ற முறைமை உருவாக்கியுள்ள ஆரோக்கியமற்ற அரசியல் ஆதரவின் முறைமைக் கூறாகவும் இவற்றைப் பார்க்க வேண்டும்.  எந்த அளவுக்கு அரசியல் ஆதரவுக்கான தேவை உள்ளதோ அந்த அளவுக்கு அரசியல் பற்றுறுதிகளில் மாற்றங்கள் இருக்கும்.

தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்துருவாக்கம் இருந்தபோதிலும், தமிழ் மாகாணங்களில் முஸ்லிம் மக்களின் தெளிவான அரசியலமைவு நிலைப்பாடு என்ன என்பதை அவர்களிடம் (முஸ்லிம்களிடம்) சமஷ்டிக் கட்சியால் விளக்க இயலவில்லை.  புதிய அரசியலமைப்பைப் பற்றி 1972-இல் நடைபெற்ற பாராளுமன்ற விவாதங்களின்போது, அவர்கள் எதிர்நோக்கியிருந்த கூட்டாட்சியில் அம்பாறை முஸ்லிம் மாகாணமாக அமையும் என்று வி.தர்மலிங்கம் கூறியது உண்மையே! அதேபோன்று, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் சமஷ்டிக் கட்சியின்

9-ஆவது தேசிய கலந்தாய்வுக் கூட்டத்தில் (22, ஆகஸ்ட், 1964) நிகழ்த்திய தலைமையுரையில் சிங்களவர்களின் கரங்களில் சிக்கித் துன்புறும் முஸ்லிம்களின் புறக்கணிக்கப்பட்ட நிலையைக் குறிப்பிட்டு, தமிழர்களுடன் இணைந்து போராடு மாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததும் உண்மையே! எனினும், தமிழர்களுடன் நல்லுறவு கொள்வதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு எப்படி யிருக்கும் என்பதைப்பற்றிக் கொள்கையளவில் எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. 

முஸ்லிம்களின் எதிர்பார்த்த அரசியல் சூழலில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதைத் திட்டமாகத் தெரிவிக்கவேண்டும் என்பதைத் தமிழர் அரசியல் கட்சிகளும் குழுக்களும் உணரவே யில்லை.  போராளிக் குழுக்களுள் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி (Eelam People’s Revolutionary

Liberation Front), தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam) ஆகிய இரு அமைப்பு களும் தமிழர்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் முஸ்லிம்களின் நிலையைப்பற்றி அண்மையில் தெளிவாகக் கருத்துரைத்துள்ளன.  இந்த இரண்டு அமைப்புகளின் கூற்றுகளும் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்கள் - தமிழர்கள் இணையவேண்டிய இன்றைய தேவையை வலியுறுத்துகின்றன; அத்துடன், அரசியல் இலக்கை அடைந்த பிறகு இரண்டு குழுக்களுக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இந்த நிலையில் இன்னொன்றையும் குறிப் பிடுவது மிகவும் அவசியம்.  முஸ்லிம்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF)யும் பிரதேச சுய ஆட்சிக்கென்று திட்டம் தீட்டியிருந்த எல்லைப் பகுதிக்குள் மட்டக்களப்பு, திருகோணமலையுடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த ஒரே மாவட்டமான அம்பாறை மாவட்டத்தை உள்ளி ணைக்கத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வலியுறுத்தாததால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தங்களைக் கைவிட்டுவிட்டதாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கருதத் தொடங்கினர்.  அம்பாறை மாவட்டம் சிங்களமயமாவதில் யூ,என்.பி.க்கு ஆதரவு கொடுப்பதாகத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீது குற்றம் சாட்டப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்

முஸ்லிம்களின் இருப்பைப்பற்றிப் பேசும் போது, கிழக்கு மாகாணத்தை மட்டுமே குறிப்பிடும் ஒருபோக்கு தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரு இனங்களிலும் உள்ளது.  வடக்கிலும் முஸ்லிம் மக்கள்தொகை கணிசமாக உள்ளது என்பதும், வெறும் 24% (முஸ்லிம்கள்) மக்கள் தொகையைத் தன்னகத்தே கொண்டு முஸ்லிம் மாவட்டம் என்று பெயர்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொகையைவிட ஒரு சதவிகிதம் கூடுதலாக இருக்கும் மன்னார் மாவட்டத்தில் நாம் ஏற்கெனவே பார்த்த படி 26.6% முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.

ரோமன் கத்தோலிக்கத் தமிழர்கள், முஸ்லிம்கள், இந்துத் தமிழர்கள் போன்ற அடிப்படையிலான சமய வகைப் பிரிவுகளை வெளிப்படுத்தும் சமுதாய - அரசியல் நெருக்கடிகள் நிகழும் மன்னாரில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான ஒரு வரலாற்றுப் புரிதல் எப்போதும் நிலையாக இருந்து வருகிறது.  அங்கே முஸ்லிம்கள் - தமிழர்கள் உறவு எப்போதும் இணக்கமாக இருந்துள்ளது என்று நிறைவுற முடியாவிட்டாலும் கிழக்கு மாகாணத்தின் நிலைமையைக் காட்டிலும் நல்ல நிலையில்தான் இருந்துள்ளது.  தமிழர்களின் பெரியதொரு பிரிவினரின் நம்பிக்கையைப் பெற்ற ரஹிமால் மன்னார் பகுதி ஒருமுறை பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டது.

முஸ்லிம்கள் இங்குத் தொடர்ந்து விவசாயத் தொழில் புரிவோராகவே இருக்கின்றனர்.  அவர்கள் தமிழர்களுடன் கொண்ட பொருளாதார உறவு எந்த வன்முறையான முரண்பாட்டுப் பிரச்சினைகளையும் உருவாக்கியிருக்கவில்லை.  எருக்களம்பிட்டி, விடத்தல்தீவு, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் களின் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பில் புகழ்பெற்றவர்கள்.

மாவட்டங்களின் பூர்வீக மக்கள் என்று சொல்லத்தக்க வகையில் வவுனியா, முல்லைத் தீவு மாவட்டங்களில் (முறையே 6.9%; 4.8%) முஸ்லிம் விவசாயிகள் கணிசமான சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்க யாழ்ப்பாணம் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், யாழ்ப்பாணம் நகரில் முஸ்லிம் மக்கள்தொகை எண்ணிக்கையளவில் சிறிதாக இருந்தாலும் வரலாற்று முக்கியத்துவத்தை உடையது.

ஆகவே, கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி, தமிழர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பாக நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு கொள்கையை முன்னணித் தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்துச் செல்வது என்பது மிகவும் இன்றியமையாதது.

திட்டவட்டமான ஒரு கொள்கைக்கான தேவை

தமிழ் பேசும் பகுதிகளின் அரசியல், நிர்வாக அமைவில் முஸ்லிம்களுக்கான இடத்தைப்பற்றி நன்னோக்கமுள்ள, தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு கொள்கை இல்லாமைதான் மட்டக்களப்பில் முஸ்லிம் அரசியலைக் கொழும்பு முஸ்லிம் தலை வர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வகை செய்தது.  கிழக்கு மாகாண முஸ்லிம் தொகுதிகள் எப்போதும் கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குத் தேர் தலுக்குரிய சிறுதொகுதிகள் என்றே கருதப்பட்டு வந்துள்ளன.  இது எப்போதும் உண்மையாக இருந்தது என்று கூற முடியாது என பொத்து வில்லில் சர் ரசிக் ஃபரீதும், மட்டக்களப்பில் பதியுதின் மகமதுவும் கண்டறிந்தனர்; ஆனால், இத்தகைய பின்னடைவு ஒருபுறமிருந்தாலும், அவர் களின் செல்வாக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

கொழும்புத் தலைமையின் பொருளாதாரப் பரிமாணங்கள் முக்கியமானவை.  முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே விலக்கிக்கொள்ள முடிந்த வணிகம், வேலைவாய்ப்பு போன்ற வற்றில்தான் அவர்களின் கவனம் இருந்ததே தவிர மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களின் மொத்த முஸ்லிம் மக்கள்தொகையின் மூல ஆதாரமான விவசாயத் தொழிலில் அல்ல.  கொழும்பைச் சேர்ந்த தலைமை முஸ்லிம்களின் நிலங்கள் - குறிப்பாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள நிலங்கள் இழப்புக்குள்ளாகும் நிலையின் தீவிரத்தை உணரத் தவறிவிட்டது.  மற்ற எந்தக் காரணியையும்விட, இந்தக் காரணிதான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பற்றுறுதிக் கான அவசியத்தை இப்போது முன்னெடுத்துச் சென்றுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் புதிதாக உருவான முஸ்லிம் சங்கம், நிலம், குடியேற்றம் தொடர்பான விவகாரங்களில் கொழும்பு முஸ்லிம் தலைமையின் அரைகுறைச் செயல்பாட்டை அடிக்கடி விமர்சனம் செய்தது.

சிங்கள போதனாமுறை அல்லது ‘சிங்களம் மட்டும்’ தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கொழும்புத் தலைமையின் முடிவு தமிழ் போதனா முறையைக் கடைப்பிடிக்கும் மட்டக்களப்பு, மன்னார் முஸ்லிம்கள் மேற்கு, தெற்கு மாகாணங்களிலுள்ள சிங்கள போதனாமுறையைக் கடைப் பிடிக்கும் முஸ்லிம் களுக்கு அப்பால் ஒரு சமய - பண்பாட்டு உணர்வில் மெள்ள இணங்கிச் செல்லும் சூழ்நிலையை இப்போது உருவாக்கியுள்ளது.

மேலும், அரசியல் எதார்த்தத்தின் இந்தப் புதிய போக்கு மார்ச், 1984-இல் அகில இலங்கை மூர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்ட கீழ்க்காணும் அரசியல் குறிப்பில் புலப்படுகிறது :

இந்த நாட்டில் நிகழ்ந்த இனச் சச்சரவுக்குப் பிறகு, குறிப்பாக, ஜூலைத் துயரத்துக்குப் பிறகு, நாங்கள் (மூர்கள்) வேறு வழியின்றி, ஒற்றைப் போக்கு ஒன்றைப் பின்பற்ற நேரிட்டது.  கிழக்கு, வடக்கு மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் தமிழ்ச் சகோதரர் களுடனும், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் சிங்களச் சகோதரர் களுடனும் நல்லுறவோடு நடந்துகொள்ள வேண்டும்.  இவ்விரண்டைத் தவிர வேறு எதைச் செய்தாலும், அது எங்கள் மக்கள் தற்கொலை செய்துகொள்வதைப் போன்றதே!

வடக்கிலும், கிழக்கிலும் உள்ள ஐந்து லட்சம் முஸ்லிம்களும் கட்டாயம் ஒன்றிணைந்து அனைத்திலங்கை முஸ்லிம் அரசியல் கட்சி என்ற ஓர் அமைப்பின் கீழ் வந்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் இத்தகைய புரிதல்களுக்குள் தடம் பதிக்க வேண்டும்.  அதன்மூலம்தான் பிரதேச அல்லது மாகாண சபை அல்லது சபைகளில் நமது அரசியல் அடையாளத்தை நிறுவவும் நமது நிலம், நிலம் சார்ந்த உடைமைகள் நம்மிடமிருந்து விலகிச் செல்வதைத் தடுத்து நிறுத்திக் கொள்ளவும், எதிர்காலத்தில் நமது பகுதிக் குள்ளேயே நில ஒதுக்கீடு பெற்றுக் கொள் வதில் தனித்த நீதியைப் பெறவும் முடியும்.

இந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் விவசாயம் செய்பவர்கள்; அந்த நிலத்தைக் காட்டிலும் அவர்களுக்கு வேறு எதுவும் பெரிதல்ல.  இந்தப் புரிதல்கள் பாது காப்பு (காவல்படை) உள்ளிட்ட உள்துறைப் பணிகளில் மாகாணம் சார்ந்த வேலைவாய்ப்பை உள்ளடக்க வேண்டும்; மற்ற எல்லாச் செயல் பாடுகளிலும் தகுந்த இடவசதி செய்துதரப் பட வேண்டும்.  இன்னொருபுறம், பிற பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் தாங்களாகவே சென்று நமது சிங்களச் சகோதரர்களுடன் இணைந்து, முடிந்தவரை அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.  நமது அரசியல் கட்சி மூலம் பிரதேச அல்லது மாகாண சபைகளில் நாம் நிறுவியுள்ள அரசியல் அடையாளத்தின் துணையோடு, முறையே அந்தந்தப் பிரதேசம் அல்லது மாகாணத்தின் வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்ற வேண்டும்.

மேலே கூறப்பட்ட கோரிக்கைகளை முன் னெடுத்துச் செல்லக்கூடிய அரசியலமைப்பு வகை துறை என்பது பின்னர் எதுவாக இருக்கும்? இந்தப் பிரச்சினையில் தெளிவான தமிழர் அரசியல் கருத்து முரண்பட்டுப் போகும்போதெல்லாம் அவர்கள் மொழிவழி ஒற்றுமையானது அரசியலமைப்புப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசியல்ரீதியாகப் போதுமானது என்று அதன்மூலம் குறிப்பிட்டு முஸ்லிம்களின் தமிழ் பேசும் தனிக்குறியீட்டைச் சுட்டிக்காட்டிப் பதில் அளிக்கின்றனர்.  இது மொழி வழித் தேசிய கருத்துநிலையிலான கற்பிதம் என்று சரிவர உணரப்படவில்லை. 

ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, இலங்கை அரசியலில் தமிழ் பேசும் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் தோற்றப்பாடு, அரசியல் சமுதாயத்தில் சிறுபான்மையினருக்கு இடம் கொடுக்காது அடிக்கடி மறுத்து வந்த சிங்கள வர்களின் மொழி அடிப்படையிலான தேசிய நிலைப் பாட்டுக்கு எதிர்வினையாய் அமைந்தது.  சிங்கள தேசியத்தின் இந்த மொழிவழித் தளமானது அதன் உணர்வுநிலையில் ஒரு கட்டம் மட்டுமே என்பதையும், இன்னும் சற்று ஆழ்ந்ததொரு கட்டத்தில், அதற்கு சமய அடிப்படையும் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.  இவ்வாறு பண்புக் கூறில் அது சிங்கள - பௌத்தர் என்ற நிலையிலேயே இருந்து வருகிறது.

இலங்கை முஸ்லிம்களின் மனப்போக்கில், மொழி என்ற அளவில் தமிழின் மீதான பற்றுறுதி என்பது தமிழர்களில் ஒரு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளலாமே தவிர முஸ்லிம் அடையாளத்தின் - அதாவது, அவர்களின் சமயக் குறியீட்டின் உறுதியான கருத்தாக்கத்துடன் உடன்பாட்டுக்கு வரக்கூடாது என்பதே.

நன்கு வரையறுக்கப்பட்ட சமுதாயக் கோட் பாட்டைக் (சமய விதிமுறைகளின் மூலம் வரை யறை செய்யப்பட்டது) கொண்ட ஒரு சமயத்தினை நடைமுறையில் பின்பற்றுபவர்கள் என்ற முறையில் முஸ்லிம்கள், பல் - இனக்குழுக்கள் இருப்பு கொள்ளும் சூழ்நிலையில், அந்தச் சமுதாய - சமய அடையாளத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள் வதில் உறுதியாக உள்ளனர்; சமய - பண்பாட்டு அடையாளத்தின் பிரதான மூலக் கூறாக அவர்கள் அரபி மொழியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.  அரபி மொழி அவர்களுடைய தாய்மொழி என்பதல்ல.

இஸ்லாமியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்ற அளவில் அவர்கள் வாழ்க்கைக்கான குறியீட்டுப் பண்பை நிறுவுகிற அவர்களுடைய சமய ஏடான குர்-ஆனின் மொழி என்ற அளவில், அரபி மொழி அவர்களுடைய பண்பாட்டு அடை யாளத்தின் அடித்தளமாகிறது.  அதனால்தான், தமிழைப் பொருத்த அளவில், அவர்கள் அரபித் தமிழில் ஓர் எழுத்திலக்கியத்தைத் தோற்றுவிக்க நேர்ந்தது.  அதாவது, எழுத்துருவில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட ஏடு).  இது அவர்களுடைய வாழ்வில் அரபி, தமிழ் இரண்டு மொழிகளின் தனிவகைப் பட்ட தொடர் இருப்பு நிலையை உறுதி செய்கிறது.

இந்தப் பிரச்சினையில் முஸ்லிம்களின் அச்சங் களை ஏற்றுக்கொள்ளவேண்டும், அவை நியாய மானவை என்றே கொள்ளவேண்டும்; காரணம், தமிழர் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் தமிழர் களின் மத்தியில் ஒரு பிடிப்புள்ள நிலையில் இந்து (சைவ) - தமிழ் உணர்வுநிலை எப்போதும் இருந்து வருகிறது.  இந்த உணர்வுநிலை ‘சைவ - தமிழ் மரபின் தொடர் நீடிப்புக்குக் காரணம் யாழ்ப் பாணக் குடிமகனின் தெரிவு செய்யப்பட்ட ஒரு தனிப்பண்பே’ என்று எப்போதும் வலியுறுத்தி வந்தது.  இந்தக் கருத்துநிலை ஏற்றுக்கொள்ளும் சாதிப் படிநிலையை அவதானிக்கையில், தமிழைத் தம் மொழியாகக் கருதிப் பேசிவரும் இலங்கையிலுள்ள எந்த முஸ்லிமும் தமிழ் பேசும் தேசியம் என்னும் கருத்தாக்கத்தின் சமய - பண்பாட்டு உட்பொருளை நியாயமான எல்லைகளுக்குள் அய்யுறுவது இயல்பே!

இலங்கையின் வரலாற்றுச் சூழலமைவில் தான் இந்த அச்சம் தெரிவிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும்.  சிங்களவர்களை ‘சிங்களம் மட்டும்’ என்ற நிலையிலிருந்து சிங்கள - பௌத்தம் என்ற நிலைக்கும், தமிழர்களை சைவ - தமிழ் கருத்துநிலையிலிருந்து தமிழர் ஒருமை என்ற நிலைக்கும் இட்டுச் சென்ற அரசியல் வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது.

ஆகவே, இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பிரதேசங்களின் உள்ளே தமிழர்களும் முஸ்லிம் களும் அரசியல் அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்ளப் போகிறார்கள் என்ற சமயச் சார்பற்ற அரசியலைப் பற்றி ஒரு சிறு துளி அய்யம் கொள்வதற்குக்கூட இடம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது

மிக மிக முக்கியம்.  அந்தந்த இனத்தின் சமய - பண்பாட்டுக்கான சிறப்புக் கூறுகளின் நீடித்த தன்மை உறுதி செய்கிற அளவுக்கு வரையறுக்கப் பட்ட, தெளிவான சமயச் சார்பற்ற தன்மை உத்தர வாதமாக்கப்பட வேண்டும்.  இதை உறுதி செய்வது தமிழ் அரசியல் குழுக்களின் கடமையாகும்.

சோவியத் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஒன்றியத்தைப் போல ‘சுய ஆட்சிப் பிரதேசம்’ என்ற கருத்தாக்கத்தை இலங்கைத் தீவில் வலிந்து செயல்படுத்த முற்பட்டால், அது மேலும் சிக்கலுக்குத் தான் வழி வகுக்கும்.

Pin It