மாக்சிம் கார்க்கி ‘ஆளுமைச் சிதைவு’ என்ற நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். (Gorky on Literature - 71) இதன் சாராம்சமான கருத்து பூர்ஷ்வா சமுதாயத்தின் வளர்ச்சியானது மனிதனை தனிநபராக்கி அவனது ஆளுமையைச் சிதைப் பதற்கான புறச்சூழலை உருவாக்கி விடுகிறது என்பதாகும். பண்டைய இலக்கியங்களில், சமுதாய மானது கூட்டு உணர்வினைக் கொண்டிருந்ததால், இலக்கிய கதாபாத்திரங்கள் ஒருமித்த ஆளுமை உள்ளவர்களாக இருந்தனர். இதிகாச கதாபாத்தி ரங்கள் இத்தகையவர்கள். ஆனால் பழைய அமைப்பு தகர்ந்து அப்பட்டமான தனிநபர் வாதம் உருவாகும் பொழுது, இலக்கியத்திலும் ஒருமித்த கதாபாத்திரங்கள் படைக்கப்படுவது குறைகிறது. துண்டு துக்காணியான நிகழ்ச்சிகளே இலக்கி யத்தின் கருப்பொருளாக அமைந்து விடுகிறது. மேலும் கலைஞன் சமுதாயத்துடன் ஒன்றுபடும் பொழுது ஒருமித்த ஆளுமை உள்ள பாத்திரங்கள் தோன்றுகின்றன. கலைஞன் சமுதாயத்தினை விட்டு விலகும் பொழுது மன விகாரங்கள் பொருந்திய கதாபாத்திரங்கள், சூன்ய நிலையில் உள்ள, இலக்கற்ற, புதிர்வாதம் நிரம்பிய, கனவு உலகத்தில் மிதக்கக்கூடிய கதை மாந்தர்கள் படைக்கப்படுகின்றனர். கார்க்கி அடுத்தபடியாகக் கூறுவது உழைக்கும் மக்கள் (பாட்டாளிகள்) சார்பாக கலைஞன் நிற்கும் பொழுது ஒருமித்த கதை மாந்தர்களையே படைக்கிறான் என்பதாகும். இவை அனைத்தும் கலைஞன் வாழும் காலச் சூழலால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்தச் சூழலை உள்வாங்கி, எதிர்வினை புரியும் பொழுது உள்ள நிலைகளைப் பொறுத்து பல்வேறு வகையான கலை வடிவங்கள் தோன்றுகின்றன.

jayakanthan 385

ஜெயகாந்தன் தமிழ் இலக்கிய உலகில் அடி யெடுத்து வைத்த பொழுது, சமுதாய ரீதியாக முதலாளித்துவ அமைப்பு வலுப்பெற்று, நில உடைமை அமைப்பு தகர்ந்து, புதிய அமைப்புடன் சமரசம் செய்து கொண்டிருந்த காலம் ஆகும். விடுதலைப் போராட்ட காலத்தின் வேகம் தணிந்து, திட்டமிட்ட பொருளாதாரம் என்ற முறையில் இந்தியா அடியெடுத்து வைத்திருந்த காலம். முற்றிலு மாக அழிவு பெறாத நிலஉடைமை சமுதாயம், அதன் மதிப்புகள், புதிய பூர்ஷ்வா அமைப்புடன் கலந்து, ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்திக் கொண் டிருந்த காலம் அது. இக்காலகட்டத்தில் ஜெய காந்தன் படைப்புலகில் பிரவேசிக்கும் பொழுது, அரசியல் ரீதியாக பொது உடைமை இயக்கம் வலுவாக இருந்தது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தது. திராவிடர் இயக்கம் சமுதாய ரீதியில் இயங்கிக் கொண்டிருந்தது. ஜெயகாந்தன் பொது உடைமை இயக்கத்துடன்தான் ஆரம்பத்தில் தொடர்பு கொண்டவராக இருந்தார். ஆனால் தன்னை அதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தில்லை. இருப்பினும் அவரை உருவாக்கியதில் ஜீவா, ஆர்.கே.கண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு. இவர் களுடன் ஆன நெருங்கிய பழக்கம் ஜெயகாந்தனுக்கு இடதுசாரி சிந்தனையை அளித்தது எனலாம். அவர் பிற்காலத்தில் தான் எதிலும் சாராதவன் என்று அந்நியப்பட்டுக் கூறினாலும் உண்மையில் ஆரம்பகாலத்தில் அவர் பொதுஉடைமைச் சிந்தனை வயப்பட்டவராகவே இருந்தார் என்பதுதான் உண்மை. ஜீவா அவர்கள் கலை இலக்கியப் பெரு மன்றம் ஆரம்பித்த பொழுது தற்கால இலக்கியச் சூழலில் ஜெயகாந்தன் இடம் பெற்றிருந்தார்.

இந்தக் காலகட்டத்தில் உள்ள முரண்பாடுகள், பொதுவான முரண்பாடான பாட்டாளி முதலாளி முரண்பாடு, உழைக்கும் விவசாயி பண்ணையார் முரண்பாடு என்ற வகையிலான அடிப்படை முரண் பாடு தொடர்ந்து இருந்தது. இவற்றின் வெளிப் பாடாக இந்திய சமுதாயம் முதலாளித்துவப் பாதையில் செல்ல வேண்டுமா, சோஷலிசப் பாதையில் செல்ல வேண்டுமா என்ற முரண்பாடும் இருந்தது. முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸிற்கு உள்ளேயே இந்த முரண்பாடு இருந்தது. இடது சாரிகள் பாராளுமன்ற சனநாயகத்தினை ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்த முரண்பாடுகள் மத்திய தர வர்க்கத்தில் - (குட்டி பூர்ஷ்வாக்கள்) பெரும் குழப்பத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தக் குழப்பத்தின் பிரதிபலிப்பினை ஜெயகாந்தனது படைப்புகளில் காணலாம். இதனை அவரது படைப்புகளின் மூலம் காண முயற்சிப்போம்.

ஜெயகாந்தன் ஆரம்பத்தில் விந்தனின் ‘மனிதன்’ என்ற பத்திரிகையிலும் பின்னர் ஆனந்த விகடனிலும் எழுதினார். விந்தனின் பத்திரிகையில் அவர் எழுதிய கதைகள் அனைத்திலும் வசதியற்ற ஏழை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியே எழுதினார். ‘பொறுக்கி’ என்ற சிறுகதையில் ஒரு ஆப்பக்காரியின் தறுதலை மகனால் ஏற்படும் தொல்லைகள் பற்றி எழுதுகிறார் ‘வேலை கொடுத் தவன்’ என்ற கதையில் ஒரு பிச்சைக்காரியின் தன்மான உணர்வை விவரிக்கிறார். ‘ரிக்ஷாக்கார பாலன்’ என்ற கதையில் ரிக்ஷாக்காரனின் நாணய மான நடத்தை பற்றிக் கூறுகிறார். ‘டிரெடில்’ என்ற கதை ஒரு அச்சகத் தொழிலாளி சுரண்டப்படு வதை, அவன் ஆண்மை இழந்து நிற்பதன் மூலம் எடுத்துக்காட்டுகிறார். இக்கதைகள் அனைத்தும் கீழ் மத்தியதர வர்க்கம், மத்தியதர வர்க்கம் ஆகிய வற்றின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.

இந்தக் கதைகள் ஜெயகாந்தனது மனித நேயத் திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. ‘ஒரு பிடி சோறு’, ‘இனிப்பும் கரிப்பும்’ என்ற தொகுப்பு களில் உள்ள கதைகள் அனைத்தும் இத்தகையவை. ஆனால் அவர் நாவல் உலகில் அடியெடுத்து வைக்கும் பொழுது இந்த நிலை மாறிவிடுகிறது. ‘யாருக்காக அழுதான்’ என்ற குறுநாவல், ‘வாழ்க்கை அழைக் கிறது’ என்ற நாவல் ஆகியவற்றில் இந்த மனித நேயத்தின் நீட்சியைக் காணலாம். ‘வாழ்க்கை அழைக்கிறது’ என்ற நாவலில் இடம் பெறும் ராஜாவும், தங்கமும் அநாதைகள். தங்கத்தைப் பல இன்னல்களில் இருந்து காப்பாற்றி அவளை மணந்து கொள்கிறான். அடக்குமுறைக்கு எதிரி யாக ராஜா விளங்குவதை ஆசிரியர் சித்தரிக்கிறார். அவன் போராட்டம் எல்லாம் தனிநபர் போராட்டம் தான். சாரங்கன், ரஸியா போன்ற கதை மாந்தர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். இந்த நாவலில் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் நடத்தும் போலி வாழ்வையும் ஆசிரியர் சித்தரிக் கிறார். இந்த நாவலில் ஜெயகாந்தனின் சமூக நோக்கில் தென்படும் ஏழை எளியவர்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளனர். ‘உன்னைப் போல் ஒருவன்’ சென்னை நகரத்து சேரி வாழ்வை மிக நுணுக்கமாகச் சித்தரிக்கும் நாவல். தங்கத்தின் வாழ்க்கைச் சூழலை மிக நுட்பமாகச் சித்தரிக் கிறார்.

“தங்கம் வெகு நாட்களுக்குப் பிறகு இன்று தான் தலைவாரிப் பின்னிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.”

“பகலெல்லாம் சுண்ணாம்பிலும், சிமெண்ட் கலவையிலும் நின்று உடம்பெல்லாம் அவற்றைப் பூசிக் கொண்ட பின் வேலையிலிருந்து வீடு திரும்பக் கொஞ்சம் தாமதமாகிவிட்டால் உடம்பு கழுவிக் கொள்வதே கஷ்டம்.”

அடிநிலையில் உள்ள இம்மக்களது வாழ்வை ஜெயகாந்தன் யதார்த்தபூர்வமாகவே இங்கு சித்தரிக்கிறார். அவரது “யாருக்காக அழுதான்” என்ற நாவல் ஒரு அடிமட்டத் தொழிலாளியைப் பற்றியது. அவன்தான் திருட்டு முழி ஜோசப் என் பவன். வேண்டுமென்றே தான் இந்தப் பாத்திரத் தினை ஒரு அப்பாவியாகப் படைத்துள்ளார். சுரண்டல் மிகுந்த அமைப்பில் திசை தெரியாமல் தவிக்கும் தொழிலாளியாக திருட்டு முழி ஜோசப் உள்ளான். ஜோசப்புடன் வேலை செய்யும் மற்றொரு தொழிலாளி முத்து அவனது முதலாளியைப் பார்த்துக் கூறுவது உழைக்கும் வர்க்கத்தின் உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது.

“மொதலாளி ஒலகத்திலேயே ஒரே ஒரு திருட்டு முழி ஜோசப்பு தான் உண்டு. எல்லாத் தொழிலாளியும் ஆண்டவனே, ஆண்டவனேன்னு ஸ்தோத்திரம் பண்ணிக்கிட்டு அவன் மாதிரி இருந் துட்டா உங்களைப் பிடிக்க முடியுமா?”

இக்கதை மாந்தர்கள் ஜெயகாந்தன் பொது உடைமை இயக்கத்திலிருந்து விலகாமல் இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவை. ஆனால், அவர் பொதுஉடைமை இயக்கத்தில் இருந்து விலகிய காலத்தில் அவரது கருத்தியலிலும் மாறுதல் தோன்றுகிறது. இக்கட்டத்தில் அவர் ஆனந்த விகடனில் எழுத ஆரம்பிக்கிறார். இது முதலாளித் துவப் பத்திரிகைதான். ஆனால், ஜெயகாந்தன் படைப்புகளை வெளியிட்டது பாராட்டுதலுக் குரியது ஆகும். இருப்பினும் இத்தகைய முறையில் இடதுசாரி முகாமிலிருந்து வலதுசாரி முகாமிற்கு ஜெயகாந்தன் போன்றவர்கள் சென்றபிறகு, அவர் களது படைப்பில் குணாம்ச மாறுதல் ஏற்பட்ட தற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு செல்லாமல் இருந்த கு.சின்னப்பபாரதி, டி.செல்வ ராஜ் போன்றவர்கள் தங்களது உலகக் கண்ணோட்டத் தினை மாற்றாமல், உழைக்கும் வர்க்கத்தின் சார் பாகவே இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஜெயகாந்தன் இயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் தன்னை ஒரு சுதந்திர எழுத்தாளனாக வரித்துக்கொண்டு, பல நாவல்களை எழுதினார். இந்தப் பிந்திய காலப் படைப்புகள் இருவேறு போக்குகள் உள்ளவை யாக உள்ளன. ஒன்று, ஒருமித்த ஆளுமை உள்ள ஜோசப், தங்கம் போன்றவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அகவயப்படுத்தப்பட்ட கதை மாந்தர் களைப் படைக்கிறார். இரண்டு, பொருள் முதல் வாத நிலைப்பாட்டிலிருந்து கருத்து முதல்வாத நிலைப்பாட்டிற்குச் செல்கிறார்.

முதலாவதற்கு இரு உதாரணங்கள் தரலாம். ‘ரிஷி மூலம்’ என்ற குறுநாவல். இது தாய்ச் சிக்கலை அடிப்படையாகக் கொண்ட நாவல். இதன் கதா நாயகன் ராஜாராமன் தன் தாயை ஆடையின்றிப் பார்த்து விடுகிறான். அவனுக்கு அப்பொழுது சிறுவயது. இது அவனது மனதில் ஆழமாகப் படிந்து, தாயுடன் உறவு கொள்ளும் ஒரு கற் பனையைத் தோற்றுவிக்கிறது. பித்துப் பிடித்தவன் போல் அலைகிறான். காசி செல்கிறான். ஒரு மனநோயாளியாக இறக்கிறான்.

இரண்டாவது “கோகிலா என்ன செய்து விட்டாள்” என்பதன் அனந்தராமன். இவன் பிளவுண்ட மனிதன். அவனால் அவனது வாழ்வு அர்த்தமற்றதாக ஏன் ஆகிவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் பல கூறு களாக இருப்பதாக உணர்கிறான். அவனே அதைச் சுட்டிக்காட்டுகிறான்.

“நான் புறத்தே ஒரு மனிதன். அகத்தே ஒரு மனிதன். ஆபீசில் ஒரு மனிதன், எனது வாசகர் களுக்கு ஒரு மனிதன், என் வாழ்க்கையில் ஒரு மனிதன், என் மனைவிக்கு ஒரு மனிதன்... ஓ எத்தனை கூறுகளாகிப் போனேன்.”

வெங்கு மாமா என்ற வக்கீல் ஒரு சாடிஸ்ட். மனைவியை பெல்ட்டால் அடிப்பதில் இன்பம் காண்பவர்.

அலங்கார வில்லியம்மாளின் மூத்தமகன் ஆண்மை இழந்தவன்.

‘சமூகம் என்பது நாலு பேர்’ என்ற நாவலில் புராதனத்துவம் பேசுகிறார்.

“மரியாதைப் பண்புகளை ஆடைகளைக் களைத்து வைப்பது மாதிரி அவிழ்த்தெறிந்து விட்டுப் பறவைகள் மாதிரி வனவிலங்குகள் மாதிரி, காட்டுமிராண்டிகள் மாதிரி, உடலாலும், மன தாலும் சுதந்திரமான நிர்வாணிகள் ஆகிவிடுவதில் இப்படி ஒரு ஆன்மீக விடுதலையா?”

இதில் இருத்தலியம் கலந்திருப்பதைக் காண முடிகிறது. இந்த இருத்தலியம் ‘ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம்’ என்ற நாவலில் அதிகமாக இடம் பெறுகிறது. அதில் பேபி என்ற நிர்வாணப் பைத்தியக்காரி வருகிறாள். இது சமுதாயக் கட்டுக் களைப் புறக்கணிப்பதன் ஒரு குறியீடு ஆகும். இதில் வரும் ஹென்றி, நகர நாகரீகத்தினை வெறுப் பவன். ஹென்றியும், அவனது நண்பன் தேவ ராஜனும், ஆடையில்லாமல் ஆற்றில் குதித்து ‘சோப்பெங்கப்பா” என்று விளையாடுகிறார்கள், இது தன் இருப்பை மட்டும் பேசும் நிகழ்ச்சியாகும்.

ஜெயகாந்தனது சமுதாயப் பார்வை சுதந்திர சிந்தனையாளன் என்ற நிலைக்கு மாறிய பிறகு அவர் வேறு ஒரு கருத்தியலையும் கையாளுகிறார். சநாதன மதத்தினையும், புதிய சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு சித்திரத்தினை முன் வைக் கிறார் ‘ஜய ஜய சங்கர’ என்ற நாவல் இதற்கு எடுத்துக்காட்டு. அவரது “சுதந்திரச் சிந்தனை’ என்ற கட்டுரையில் பின்வரும் பகுதி உள்ளது.

“நவீன இந்தியன் தனது கலாச்சார வேர்களை அறுத்துக் கொண்டவன் அல்ல. நவீன யுகத்தில் பொருள்முதல்வாதக் கருத்துக்களும், நவீன உற் பத்தி முறை வாழ்க்கையும், அவனால் அப்படியே அங்கீகரிக்கப்படவேண்டியது காலத்தின் விதி. அதே பொழுதில் இன்றைய நவீன ஐரோப்பா விலும் நமது புராதன இந்தியாவிலும் மனித வாழ்க் கைக்கு அடிப்படையான மனிதநேயமெனும் ஆன்மீகம் ஐரோப்பாவிலிருந்து ஏற்படுகின்ற புதிய வேதங்களிலிருந்தும், அந்த வேதங்களை அடிப் படையாகக் கொண்ட புதிய சமூக வாழ்க்கை களிலிருந்தும் தரிசனம் தருவதை ஒரு இந்தியன் புரிந்துகொள்வான். கம்யூனிஸ்ட் அறிக்கை நவீன மனித குலத்திற்கு ஐரோப்பா வழங்கிய புதிய வேதம். கிறிஸ்துவ மார்க்கம் போலவோ, இஸ்லாமிய மார்க்கம் போலவோ அல்லாமல் ஹிந்து மதத்துக்கு இணையான ஆனால் மிகவும் இளமை பொருந்திய செயல் திறனுடைய ஐரோப்பாவின் புதிய மதமாக முகிழ்த்ததே கம்யூனிசம். கம்யூனிசம் தான் ஹிந்து மதம் போல தனிமனித நலன்களை உள்ளடக்கிய சமூகம் சார்ந்த ஒரு வாழ்க்கை நெறியாகும்” (சுதந்திரச் சிந்தனை பக்.157). காரல் மார்க்சை ஆன்மீகவாதி என்று கூறுகிறார் (சுதந்திரச் சிந்தனை பக். 155). இது ஒரு கலவைப் பார்வை (eclectic) எனலாம். இந்தப் பார்வையின் விளைவு அவர் எழுதிய ‘ஹரஹரசங்கர’ என்ற குறுநாவல். இது காஞ்சி சங்கராச்சாரியர் செயலை நியாயப் படுத்தி எழுதிய நாவல்.

சமுதாயப் பார்வையுடன் ஒன்றிய ஜெய காந்தன் ஒருமித்த ஆளுமையுள்ள கதாபாத்திரங் களைப் படைத்தார். அதிலிருந்து விலகி பூர்ஷ்வாப் பார்வைக்கு வரும் பொழுது சமுதாய விமர்சனம் இருந்தாலும் பிளவுண்ட ஆளுமையை விரிவாகக் காட்டினார். இங்கு கார்க்கி கூறியதை நினைவு கூறலாம். “நமது அறிவாளிகளின் தனிநபர் வாதம் நரம்புத் தளர்ச்சி நிலையில் உள்ள ஒரு மரத்துப் போன கட்டத்திற்கு அவர்களை இட்டுச் செல் கிறது.

...இந்தத் தனிநபர் வாதத்தின் கருத்தியலாளர் களிடையே இந்தக் குழப்பத்தினைக் காணலாம். புதிர்வாதிகள், அராஜகவாதிகள், மெர்ஷ்கோவ்ஸ்கி அல்லது ஸ்வென்ட்ஸ்டிஸ்கி வகைக் கிருத்த வர்கள் ஆகிய எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்களிடையே இந்தக் குழப்பத்தினைக் காணலாம்.” (Mazim Gorky in Literature)..

ஆதாரம்: ஜெயகாந்தன் ஒரு விமர்சனம், எஸ்.தோதாத்ரி, 1976.

Pin It