இரகசிய சம்மதம்
சாலைகளின் வழியே
இரகசியத்தைக் கடந்துவது என்றால்
உன்னுடன் பிரயாணிப்பது
எனினும் ஒரு சினேகிதிக்கு மேல்
உன்னால் புன்னகைக்க இயலாது
நானும் எப்பொழுதும் ஒரு கண்ணியவானாகவே
மிகப் பொறுப்புடன்
இது மிகவும் பகிரங்கமானது
என்று மற்றவர்கள் சிரித்துக்கொள்வார்கள்
மென்மையான சம்மதத்துடன் தவறைத்தான்
நாம் இரகசியமென்கிறோம்
இரகசியம் வெளியாகும் வேளை
அவர்கள் இவ்வளவு பொறுமையாக
தவறை ஏற்றுக்கொள்வார்களா
ஒரு சினேகிதியும் ஒரு கண்ணியவானும்
பிறகு எப்படித்தான் பழக முடியும்
நறுமணமூட்டப்பட்ட அறை
இந்த நகரத்தின் ஈசான்ய மூலையில்
நமது கட்டில் மிதந்துகொண்டிருக்கிறது
சிலநேரம் சூரியக் கதிரும்
பலநேரம் நிலவொளியும்பட்டு
மேகங்களுக்கிடையே அடிக்கடி
மறைந்து விடுவதை நீயும் கண்டிருப்பாய்
அது இறங்குமிடம் ஒரு அடர்ந்த காடாகவோ
அருகில் ஒரு நதியின் சலசலப்பும்
இருக்க வேண்டுமென்பது உன் பிரார்த்தனை
நான் அதனருகில் சில புள்ளியினங்களையும்
அலையும் விலங்குகளையும் வேண்டியிருப்பேன்
உண்மையில் நறுமணமூட்டப்பட்ட ஒரு அறை
இன்னும் கூட வசதியானது என்பேன்
மிதக்கும் கட்டிலை அது முழுவதுமாக
உள்வாங்கி ஆறாத மனப்புண்களின்
சயனத்தை நமக்கு வழங்கவும் கூடும்
அந்நேரம் அதன் கால்களிலிருந்து ஏதேனும்
பதுமைகள் உயிர்த்தெழுந்து நமக்கிடும்
நிபந்தனையுடனான விடுகதைகளை
விடுவிக்க இயலாமல்
கூடலற்றுப்போன நமது திகைப்பு
ஒரு தத்துவமாகி வெளியில் உறைந்தும் போகலாம்
இத்தனைக்கும் பிறகு
மிதக்கும் கட்டிலை தரை
இறங்கியது யாரென்ற
விவாதம் மட்டும் நமக்குள் தொடங்கி விடக்கூடாது
என்பதுதான் செல்லமே
என்னுடைய நித்திய பிரார்த்தனை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
புது எழுத்து - ஜூலை 2006
- விவரங்கள்
- பா.தேவேந்திர பூபதி
- பிரிவு: புது எழுத்து - ஜூலை 2006