இயல்பாய் கரம் வந்திறங்கும்
பட்டாம்பூச்சியாய் சில கணங்கள்.....
உள்ளங்கையிலேந்திய நீரை
சிந்தாமல் கொண்டு சேர்க்கும்
எத்தனங்கள் சில நேரம்....
பருத்தி வேட்டியாய் காய்த்த
அபூர்வ நிகழ்வுகள்....
துண்டுகளாய் உடைந்து சிதறிய
கண்ணாடிச்சில்லுகளை
ஒட்டவைக்கும் முயற்சிகள்
சில நேரம்....
நம்பிக்கைக்கும்
நம்பிக்கையின்மைக்குமிடையே
ஊசலாடுகிறதென்
சாமான்ய வாழ்க்கை!
கீற்றில் தேட...
சாமான்யன்
- விவரங்கள்
- பா.சேதுமாதவன்
- பிரிவு: கனவு - ஜூன் 2014
More articles by பா.சேதுமாதவன்
- கடக்க முடியாப் பேராறு (03 ஜூன் 2021)
- ஸ்ரீரங்கம் சௌரிராஜனின் "உரிய நேரம்" கவிதைத் தொகுப்பின் மீதான மதிப்புரை (25 ஜூன் 2012)
- வழிபாடு (25 அக் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.