கருத்த பனை மேனி வழி
வழிந்தோடும் வியர்வை
நெற்றிக் குங்குமச் சிவப்பில்
நிறம் மாறி நிலமடையும்.
பச்சை மாமிச வெறிகொண்டு
பற்களால் கடித்துக் குதறும்
ஆதி மனித வன்முறைக்கு
அங்கீகாரமாய் ஒலிக்கும்
வாத்திய இசையிலும்
பக்தர்கள் கோஷத்திலும்
குட்டியின் அலறல் சத்தம்
அமுங்கி ஒலிக்கும்.
உறக்கம் கலையாதிருக்க
மேனிக் கதகதப்பின் வழி
பாதுகாப்பு உணர்வை
குழந்தைகளுக்கு அளித்தபடி
மிடு திரும்புவர் பெண்கள்!


திசையறியாப் பயணம்

கையோடு கைப்பற்றி
கனவுகளின் நிழலொட்டி
உணர்வுகளே ஊன்றுகோலாய்
நடந்த நாட்களில்
இடைவெளி இல்லையென
இறுமாந்திருந்தார்கள்.
இருட்கானகத்தினூடான
திசையறியா நெடுந்தூரப்
பயணத்திற்குத் தேவை என
‘பந்தம்’ என்ற தீப்பந்தத்தைக்
கையிலெடுத்து வைத்த
காலடிகள் கொஞ்சமெனினும்
எத்திசையில் செல்வதென்றக் கேள்வியில்
வேறுபாடுகள் வேர்விட்டு...
எவ்விதம் செல்வதென்றக் கேள்வியில்
முரண்கள் முளைவிட்டு...
ஒரு கையசைவில் பிரிந்தார்கள்
வெவ்வேறு திசைகளில்
வேற்று மனிதர்களாய்.கையோடு கைப்பற்றி
கனவுகளின் நிழலொட்டி
உணர்வுகளே ஊன்றுகோலாய்
நடந்த நாட்களில்
இடைவெளி இல்லையென
இறுமாந்திருந்தார்கள்.
இருட்கானகத்தினூடான
திசையறியா நெடுந்தூரப்
பயணத்திற்குத் தேவை என
‘பந்தம்’ என்ற தீப்பந்தத்தைக்
கையிலெடுத்து வைத்த
காலடிகள் கொஞ்சமெனினும்
எத்திசையில் செல்வதென்றக் கேள்வியில்
வேறுபாடுகள் வேர்விட்டு...
எவ்விதம் செல்வதென்றக் கேள்வியில்
முரண்கள் முளைவிட்டு...
ஒரு கையசைவில் பிரிந்தார்கள்
வெவ்வேறு திசைகளில்
வேற்று மனிதர்களாய்.

Pin It