“நீங்கள் (காந்தியார்) இந்து மதத்திற்கு ஜால்ரா போடும்வரை பார்ப்பான் உங்களை விட்டு வைத்திருப்பான். எப்போதாவது நீங்கள் இந்து மதத்திற்கு எதிர்ப்பாக இருப்பது தெரிந்தால் உம்மை ஒழித்து விடுவான்” என்றார் 1927இல் பெரியார்.

1947இல் ‘சுதந்திர’த்துக்குப் பின்னால் தமிழகத்தில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது, இட ஒதுக்கீட்டைக் கொஞ்சம் அதிகப்படுத்தினார். பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு எனத் தனி ஒதுக்கீடு அறிவித்தார்.

உடனே ஈ.வெ.ராமசாமி, தாடியுள்ள ராமசாமி; ஓமந்தூர் ராமசாமி தாடியில்லா ராமசாமி என்று பார்ப்பனர்கள் சொன்னார்கள். அவர் காங்கிரஸ்காரர், பெரியார் காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருந்தவர்.இடஒதுக்கீடு என்ற திட்டத்தால் எங்களைப் போன்ற பார்ப்பனருக்கு இடம் கிடைக்கவில்லை என்று காந்தி யிடம் புகார் கொடுத்தனர்.

உடனே காந்தி, “ஏய்யா உங்களுக்கு எதற்கு எஞ்சினியர் வேலை? கட்டிடம் கட்டுகிற வேலை, சூத்திரன் பண்ண வேண்டிய வேலை. பார்ப்பனர்கள் வேதங்கள் படிக்க வேண்டும், வேதம் ஓத வேண்டும் இப்படித்தான் சொல்லுகிறது வேதம். நீங்கள் அந்த வேலையைப் பாருங்களேன்” என்று எடுத்துச் சொன்னார்.

அப்பொழுதும் பெரியார் சொன்னார், ‘காந்தி இப்படிச் சொல்லிவிட்டாரா, இனி அவரைப் பார்ப்பான் வைத்திருக்க மாட்டான்’ என்று 1947இல் பெரியார் சொன்னார். 1948இல் காந்தி சுடப்பட்டார்.

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சேக்குச் சிலை வைக்க வேண்டும் என்கின்றனர் இப்போது. அடுத்த கட்டம் நோக்கி நகர்கின்றனர் பார்ப்பனர்கள்.

Pin It