படித்தால் நாக்கை அறு, கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்ற மனுவின் அதர்ம ஆட்சிக் காலந்தொட்டு, நமது சமூகம் கல்வி மறுக்கப்பட்ட சமூகம். பார்ப்பனர்கள் தங்கள் நலனுக்கு உகந்தவை களை உயர்ந்தவை என்றும், மற்றவைகளைக் கீழானவை என்றும் கற்பிதம் செய்து வைத்துள்ளனர். அந்தக் கற்பிதங்களை ஏற்றுக் கொண்ட மனநிலையைத்தான் பொதுப்பு-த்தி என்று சொல்கின்றோம்.

எனவேதான், சமூகப் போராளி தந்தை பெரியார், ‘பார்ப்பனர்கள் சொல்லுகின்ற அனைத்துக்கும் எதிராய்ச் செயல்படு’ என்றார். லுங்கி கட்டிக்கொண்டு பொது நிகழ்வுகளுக்கு வருவது நாகரிகமற்றது என்று நம் பொதுப்புத்தி சொல்கிறது. அதற்கு எதிராகத்தான் பெரியார் லுங்கி கட்டிக்கொண்டு, பொதுமேடைகளுக்குச் சென்று கருத்துப்பரப்புரை களைச் செய்துவந்தார்.

பார்ப்பனர்கள் உருவாக்கிய பொதுப்புத்தி, பிற மதங்களுக்கு எதிரானதாக இருக்கும். அதனால்தான் இசுலாமியர்கள் பெரிதும் பயன்படுத்தும் உடையான லுங்கியைக் கீழானது என்று அவர்கள் சித்தரித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுப்புத்தியைப் பெரியார் தன் செயலால் உடைத்தெறிந்தார்.

Pin It