mayawati 178இந்தியக் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு நம் வாழ்த்துகள்!

புதிய குடியரசுத் தலைவர் ஒரு தலித் என்று சொல்லப்படுவது அவ்வளவு உண்மையன்று. அவர் கோலி என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர். நெசவாளர்கள் அவர்கள். அச்சமூகம் எப்போதும் தீண்டாமைக்கு ஆளானதில்லை. அந்தச் சமூகத்தின் பெயர், அட்டவணைச் சாதியினரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது மட்டுமே உண்மை. அதனை வைத்துக் கொண்டு, நாங்கள் தலித் மக்களின் ஆதரவாளர்கள் என்பது போன்ற ஒரு பொய் முகத்தைக் காட்ட பாஜக முயல்கிறது.

அதே நேரத்தில், வெங்கையா நாயுடுவைத் துணைக் குடியரசுத் தலைவர் ஆக்குவதன் மூலம், முழு அதிகாரத்தையும் அவர் கைக்குக் கொண்டுவர பாஜக முயலும் என்பது வெளிப்படை.

இது ஒருபுறமிருக்க, தலித் ஆதரவு பேசும் மத்திய அரசு, தலித் மக்களின் வேதனைகளைப் பற்றிப் பேசுவதற்காக, நாடாளுமன்றத்தில் எழுந்த மாயாவதிக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியது.

எவ்வளவோ நேரம், கூச்சல் குழப்பங்களில் வீணாகும் போது, தலித் மக்களின் சிக்கல்கள் குறித்துப் பேச 10 நிமிடங்களைக் கூட ஆளும் அரசினால் ஒதுக்க முடியவில்லை. இப்போது அவர் தன் பதவியை விட்டு விலகியிருக்கிறார்.

இதுதான் பாஜகவின் தலித் ஆதரவு முகம்!           

Pin It