இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இட ஒதுக்கீடு கேட்பீர்கள் என்று சலித்துக் கொள்பவர்கள் உண்டு. அவர்களில் எவர் ஒருவரும், இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி இந்த நாட்டில் இருக்கும் என்று சலித்துக் கொள்வதில்லை.

இட ஒதுக்கீடு முறையினால்தான் தகுதியும், திறமையும் உள்ள எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று புலம்பு கின்றவர்களையும் நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மை நிலையோ முற்றிலும் வேறாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, அண்மையில் அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டமொன்றில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு புள்ளி விவரத்தைப் படித்துக் காட்டினார். இந்தியாவில் உள்ள 19 பொதுத்துறை வங்கிகளில் பொது மேலாளர்களாகப் பணியாற்றுவோரில் எத்தனை சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், எத்தனை சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் உள்ளனர் என்பதை அச்செய்தி கூறுகின்றது. அதே போல, சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) பணியாற்றும் பேராசிரியர்களின் நிலையும் எவ்வாறுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அருகில் உள்ள புள்ளி விவரத்தின்படி, வங்கிகளில் பணியாற்றும் 436 பொது மேலாளர்களில் 410 பேர் முன்னேறிய சாதியினராக உள்ளனர். ஐ.ஐ.டி நிலையும் அதுதான். இந்தியாவின் சமூக நீதியின் நிலை இது.

  GENERAL MANAGER
NATIONALISED BANKS TOTAL OBC SC ST
1. Allahabad Bank 19 0 0 0
2. Andhra Bank 16 0  0 0
3. Bank of Baroda 44 1 1 0
4. Bank of India 37 0 1 1
5. Bank of Maharashtra 11 0 0 0
6. Canara Bank 42 0 2 0
7. Central Bank of India 27 0 1 0
8. Corporation Bank 20 0 0 0
9. Dena Bank 13 0 0 1
10. Indian Bank 18 3 1 0
11. Indian Overseas Bank 26 0 1 2
12. Oriental Bank of Commerce 21 0 0 0
13. Punjab - Sind Bank 12 0 0 0
14. Punjab National Bank 42 0 1 1
15. Syndicate Bank 25 0 4 0
16. UCO Bank 21 0 1 0
17. Union Bank of India 29 1 1 1
18. United Bank of India 13 0 0 1
19. Vijaya Bank * - - -
TOTAL 436 5 14 7
Percentage   1.1% 3.2% 1.6%

  

Category Assistant Professor Associate Professor Professor Total
SC 4 4 3 11
ST 1 1 0  2
OBC  20  17  22 59
General 152  99 213 464
Total 177 121 238 536

 

Pin It