modi 471அண்மையில் தெலுங்கானா மாநிலத்தில் 216 அடி உயரமுள்ள இராமானுஜர் சிலையை இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சமத்துவத்திற்கான சிலை என்று இராமானுஜரின் சிலையைக் குறிப்பிட்ட மோடி இராமானுஜரின் சமத்துவக் கொள்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குத் தூண்டுதலாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

அடிக்கடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டும் மோடி, அதன் முகவுரையில் உள்ள “மதச்சார்பின்மை” (secular) என்ற சொல்லை மட்டும் வசதியாக மறந்து விடுகிறார். நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் பொதுவான பிரதமர் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதும், இராமானுஜர் சிலையைத் திறந்து வைப்பதும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமானது.

சிலையைத் திறந்து வைத்ததோடு மோடி நின்றுவிடவில்லை. மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட தங்கக் காப்பினைக் கைகளில் அணிந்து கொண்டு, ‘விஷ்வக்சேன’ எனப்படும் யாகத்திலும் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலமாக அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளில் ஒன்றான “அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது” (Article 51A) என்பதற்கே நேர்மாறாக மோடி நடந்து கொண்டுள்ளார். இப்படித் தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைப் பண்புகளுக்கு முரணாகவே நடக்கும் மோடி அரசியலமைப்புச் சட்டத்தை எதற்கெடுத்தாலும் விதந்தோதுவது கேலிக்கூத்து.

- வெற்றிச்செல்வன்

Pin It