இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 16.08.2018 அன்று காலமானார். இளம் வயதில் தன்னை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர் இவர். அவ்வியக்கம் தடை செய்யப்பட்ட போது உருவான ஜனசங் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், அக்கட்சியின் அடுத்த கட்டமான பாரதிய ஜனதா கட்சியில் பெரும் பங்காற்றினார். தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் இரண்டு பேர்களை மட்டுமே கொண்ட இக்கட்சி, பின்னர் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த போது அக்கட்சியின் பிரதமர் ஆனார். மென்மையாக அனைவரிடமும் நட்பாகப் பழகும் இவரின் மறைவுக்கு நம் ஆழ்ந்த இரங்கல்.

சட்ட அறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை முன்னாள் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி 13.08.2018ஆம் நாள் மறைந்தார். 1968ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். தன் வாழ்நாள் எல்லாம் கட்சியில் கொள்கைப் பிடிப்புடனும், பிற கட்சியினருடன் இனிய முகத்துடனும் பழகுபவரான இவரின் மறைவுக்கு வருந்துகிறோம்.

Pin It