நாட்டிலே நல்ல தெல்லாம்

       நாட்டினாய்! அநீதியைத் தான்

ஓட்டினாய் அறத்தி னாலே!

       தமிழர்க்குத் தமிழு ணர்ச்சி

ஊட்டினாய் உள்ள மெல்லாம்!

       சமநிலை யின்மை போக்க

மூட்டினாய் சமத்து வத்தீ

       முகிழ்த்தது சமூக நீதி!

அடிமையாய் வாழ்ந்த மக்கள்

       அனைவரும் உரிமை பெற்றார்

கொடியதோர் வறுமை நீங்கிக்

       குறைவிலா வாழ்வு பெற்றார்

விடியலே! வீழ்ந்தி டாத

       வீரமே! நந்த மிழ்த்தாய்

மடியிலா உறங்கப் போனாய்?

       மக்களை விட்டு விட்டு!

செந்தமிழ் நாட்டி லுள்ளோர்

       சிறப்புற வாழ்ந்தி டத்தான்

விந்தையாய் வந்து (உ)தித்த

       வீரனே! தமிழர் வாழ்வை

சிந்தையால் சீர்ப டுத்தி

       செழுமையாய் வாழச் செய்தாய்

எந்தையே எங்கு போனாய்

       எமையெலாந் தவிக்க விட்டு!

Pin It