tidel park

இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில் 1997 இல் விரிவான தகவல் தொழில்நுட்பக் கொள்கையைக் கலைஞர் உருவாக்கினார். 1998இல் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டது.

“மத்திய நிதியமைச்சர் சின்ஹா தமது பட்ஜெட் உரையில் குறிப்பிடத் தவறிவிட்டார். இருந்தபோதிலும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் உச்சியில் ஏறிநின்று சென்னையில் நிகழ்ந்து வரும் அமைதியான புரட்சியைப் பற்றி உரக்கச் சொல்லிட வேண்டிய அவசியம் இல்லை. ஓசையில்லாமல் ஏராளமான மென்பொருள் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரே நகரம் சென்னை தான்.” என்று மும்பையிலிருந்து வெளிவரும் இணைய இதழான தி.டி.க்யூ வீக் (The DQ Week, 06.03.2000)) புகழாரம் சூட்டியது.

கலைஞரின் பெரு முயற்சியால் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்திலும் முன்னோடியாகத் தனி முத்திரை பதித்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு இளைஞர்களும் இன்றடைந்திருக்கும் உச்சத்தை உலகறியும்.

மொழிநுட்பம் அறிந்த கலைஞர் தொலைநோக்குப் பார்வையுடன் தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தமிழகத்தில் நடத்தினார். இன்றைக்கு முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று சமூக ஊடகங்களில் இயங்கும் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தியாகும் இது. 

---------------

ஆதிதிராவிட மக்களுக்குச் சலவைத் தொழிலைச் செய்து, அவர்களுடைய பிறப்பு இறப்புச் சடங்குகளிலே பங்காற்றி, இன்னும் படிப்பறிவிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கின்ற மக்கள், புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படுகின்ற மக்களாவார்கள். அவர்களின் மேம்பாட்டிற்கான நல வாரியம் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. (அரசாணை - G.O.Ms.No.1 14, AD & TW(ADW_6) Department, dated 15.10.2009). எந்த அரசும் ஏறெடுத்துப் பார்க்காத புதிரை வண்ணார் மக்களுக்காக நல வாரியம் உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர்.