முசோலினி
முச்சந்தியில்
கொந்தளித்த மக்களால்
கொல்லப்பட்டதாகத் தகவல்

ஹிட்லர்
பாதாள அறையில்
பதுங்கிய நிலையில்
தற்கொலை
செய்துகொண்டதாகத்
தகவல்

கொலையா?
தற்கொலையா?
எதுவாய்க்கும்
இந்த ராஜபக்சேவுக்கு?

உலக மக்களின் முன்னால்
உடனே நடக்கவேண்டும் அது!
இன்னும் தகவல் வரவில்லை!

ஐ.நா.கூட
பொய் நா தானா?
அசையக்கூட மறுக்கிறதே!

உலக சபை வெறும்
உலோக சபையாக
எடுப்பார் கைப் பாத்திரமாய்
இயங்குகிறது!
இலங்கைப் பிரச்சினை
வெளிநாட்டுப் பிரச்சினை!
மீனவர் பிரச்சினை
எந்தநாட்டுப் பிரச்சினை?

குஞ்சுகளைக் காக்க
கோழிகூட
அஞ்சாமல் பறந்து
அலகுகளால் எதிர்க்கும்!

நம்
அரசுகள்
நெடுமர
அரசுகளாய்
நிற்கின்றனவே!
நியாயந்தானா?

உலகின் பார்வையை
ஒருங்கிணைப்போம்
சனநாயக வழியில்
சமர் நடத்துவோம்!
உலகத் தமிழர்கள்
ஒன்றுபடுவோம்!
இலங்கைப் பிரச்சினை
உள்நாட்டுப் பிரச்சினையுமல்ல
வெளிநாட்டுப் பிரச்சினையுமல்ல!
இப்போது
அது சர்வதேசப் பிரச்சினை!

-  கவிஞர் பொன். செல்வகணபதி

(12.04.2013 அன்று தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வள்ளுவர் கோட்டத்தில், பெருங்கவிக்கோ தலைமையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் படிக்கப்பட்ட கவிதையின் ஒரு பகுதி )

Pin It