சென்னையில்

ஈழத்தில் மாபெரும் இனப்படுகொலை செய்து, இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைச் சித்திரவதை செய்த இராஜபக்சேவை கண்டித்து, ஐக்கிய நாடுகள் அவைப் பொதுச்செயலாளர் பாகிமூன் அறிக்கை வெளியிட்டுள்ளார். போர்க்குற்றவாளி இராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதை பனகல் மாளிகை அருகில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இனமான ஆசிரியர் கி.வீரமணி தலைமை தாங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தொடக்கவுரை ஆற்றினார். அறிமுகவுரையைக் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக வன்னிஅரச, பெருங்கவிக்கோ, மயிலை நா.கிருஷ்ணன், பேரவை சார்பாக அ.இல.சிந்தா, குமரன், வீரவளவன், இரகுபதி, அம்பத்தூர் ராஜு, கார்த்திக் உள்பட பலரும் கலந்து கொண்டார்கள் 

வேலூர்

வேலுVர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்குத் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சடகோபன் தலைமை தாங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர் ஆ.சிங்கராயர், இரவி, சுப்பிரமணி, பிரதீப், கருணாகரன், திலீபன் உள்படப் பேரவையின் தோழர்கள் கலந்து கொண்டனர். வேலூர், திருப்பூர், கோவை, காரைக்குடி, தருமபுரி ஆகிய இடங்களிலும் இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Pin It