தமிழகத்தின் மின் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியாத அதிமுக ஆட்சியால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. சிறு, குறு தொழில்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

TN assemblyதமிழகத்தின் தேவைக்கான மின்சாரத்தைக் கூடுதல் விலை கொடுத்துத் தனியாரிடம் இருந்து வாங்குவதைத் தவிர அரசிடம் உருப்படியான எந்த ஒரு திட்டமும் இல்லை.

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின் போது, பாரத மிகுமின் நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 1600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட இரண்டு யூனிட்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டது.

இதற்காக திட்டமிடப்பட்ட தொகை 8 ஆயிரத்து 362 கோடி ரூபாய். இதற்கென 2009ஆம் ஆண்டு உடன்குடி பவர் கார்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கலைஞர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக 2012ஆம் ஆண்டு இத்திட்டத்தை இரத்து செய்தார். அத்தோடு தமிழ்நாடு மின்சார வாரியமே தனித்து இத்திட்டத்தைத் தொடங்கும் செயல்படுத்தும் என்றார்.

இதற்கான டெண்டர் 2013 ஏப்ரலில் தொடங்கியது. டெண்டர் திறக்கப்பட்டதில் பெல் நிறுவனமும், ஒரு சீன நிறுவனமும் தேர்வானது. அடுத்த ஆறு மாதங்களில் விலைப்புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட வேண்டும். ஆனால் 2014இல் ஓராண்டுக்குப் பின் திறக்கப்பட்டது. ஏன் இந்த கால தாமதம்?

மின்துறை அமைச்சர் சொல்கிறார் விலைப்புள்ளிகளில் குறைகள் உள்ளன. குறைகள் உள்ள ஒப்பந்தப் புள்ளிகளை ஏற்கச் சட்டத்தில் இடம் இல்லை என்று.

கலைஞர் கேட்கிறார் டெண்டரில் குறை என்றால், அதை இரத்து செய்ய ஆண்டுக்கணக்கில் காலதாமதம் செய்யக் காரணம் என்ன?

தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்குத் தரப்படுகின்றன. அது அதிக விலை கோரியுள்ளதால், உடன்குடி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

மக்களுக்குத் திட்டம் தந்தார் கலைஞர். கலைஞரின் திட்டமா, அதை ரத்து செய் என்றார் ஜெயலலிதா.

திண்டாடுகிறது தமிழக அரசு.

Pin It