கீற்றில் தேட...

டேப்ரிக்கார்டர் சொன்னதை
திருப்பிச் சொல்கிறது
எலக்ட்ரானிக் கிளி

பேராசைக்கும் பணத்திற்கும்
பிறக்கிறது குழந்தை
வட்டியாய்

படிக்காதவன்
வாங்கினான் பட்டம்
நாடகத்தில்

கதையைத் திருத்துங்கள் கடவுளே
என் வாழ்க்கை பாத்திரம்
தவறிழைத்துக் கொண்டே இருக்கிறது

போஸ்ட்மார்ட்டத்தில்
புலப்படவில்லை
எமன் வீசிய பாசக்கயிறு

- ஸ்ரீநிவாஸ் பிரபு