ஆகஸ்டு 19. சிஐடியு அலுவலகத்தின் மைய அலுவலகத்தில் பணியாற்றும் எங்கள் அனைவருக்கும் மாலை வரை வழக்கமான நாளாகத்தான் இருந்தது. எப்போதும் போலவே, ஏ.கே.ஜி. பவனில் நடக்கும் காலைக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு 11.30 மணிக்கு பி.டி.ஆர். பவனுக்கு தோழர் பாந்தே வந்தார். முந்தைய நாளன்று எனக்கு சில வேலைகளை அவர் தந்திருந்த தால், நேரடியாக எனது அறைக்கு வந்து, முந்தைய நாள் அவர் என்னிடம் அளித்த குறிப்பு பற்றி விவாதித்தார்.

ஐ.என்.டி.யூ.சி. மற்றும் பி.எம்.எஸ். சங்கங்களின் பிரதிநிதிகளோடு தோழர் பாந்தேயும் தொழிலாளர்களுக்கான உப குழுவில் உறுப்பினராக இருந்தார். சில தொழிலாளர் பிரச்சனைகளில் 12வது ஐந்தாண்டுத் திட்டத்திற்காக மத்தியத் திட்டக்குழுவுக்கு பரிந்துரைகளை இறுதிப் படுத்தும் பணி அக்குழு மீது சுமத்தப்பட்டிருந்தது. உபகுழுவின் பரிந்துரைகளை மத்திய அரசோ அல்லது மத்தியத் திட்டக்குழுவோ ஒரு பொருட் டாகவே மதிப்பதில்லை. இருப்பினும், எழுத்து பூர்வமாக ஒரு குறிப்பைத் தயார் செய்து தருவது என்று நாங்கள் முடிவெடுத்தோம். அந்தக் குறிப்பை தோழர் பாந்தே தயார் செய்திருந்தார்.

வெறும் இரண்டு கூட்டங்களை மட்டுமே நடத்தி, உபகுழுக்கூட்டங்களை வெறும் சடங்காக வைத்திருக்கவே அதிகாரிகள் விரும்பினர். ஆனால் குறைந்தது மேலும் ஒரு கூட்டமாவது நடத்தப்பட வேண்டும் என்று தோழர் பாந்தே விரும்பினார். இதனால் ஆகஸ்ட்டு 20 அன்று அந்தக் கூட்டத்திற் கான ஏற்பாடு இருந்தது. நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்ததால் வேலை நாளொன்றைக் கண்டு பிடிக்க முடியாத அதிகாரிகள், விடுமுறை நாளான சனிக் கிழமையன்று உபகுழுக்கூட்டத் திற்கு ஏற்பாடு செய்தனர். தான் தயார் செய்திருந்த குறிப்பை 19 ஆம் தேதியன்றே தொழிலாளர் துறைக்கு அனுப்ப தோழர் பாந்தே விரும்பினார். அதனால் உடனடியாக தட்டச்சு செய்து குறிப்பை அனுப்புமாறு அவர் என்னிடம் கூறினார்.

அது இறுதிப்படுத்தப்பட்டவுடன், வரும் நாட்களில் தில்லிக்கு வெளியே அவர் செல்ல விருக்கும் பயணங்கள் பற்றிக் கூறினார். 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த அவரது மும்பைப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் அவர் குவஹாத்தி செல்லவிருந்தார். 30 அன்று ராய்ப்பூருக்கும், 31 அன்று துர்க்காபூருக் கும் அவர் செல்வதாக இருந்தது. “நெடுந்தூரம் பயணம் செல்லப்போகிறீர்களே...” என்று நான் வருத்தப்பட்டுச் சொன்னபோது வழக்கம் போலவே, “நான் நன்றாக இருக்கிறேன்” என்ற பதில் அவரிடமிருந்து வந்தது.

மதியம் 1 மணிக்கு அவர் அலுவலகத்தை விட்டுச் சென்றார். போவதற்கு முன்பாக, குறிப்பை தொழிலாளர் துறை மற்றும் ஐ.என்.டி.யூ.சி, பி.எம்.எஸ். அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுமாறு கூறினார். மேலும், மறுநாள் நடைபெறும் கூட்டத் தில் கையெழுத்திட்ட குறிப்பை அளிக்கும் வகை யில் கூடுதலான இரண்டு நகல்களை எடுக்குமாறும் குறிப்பிட்டார். தொழிலாளர் சட்டங்களில் திருத்தங் கள், தொழிற்சங்க உரிமைகள், ஒப்பந்தத் தொழிலா ளர்கள் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களில் பரிந்துரை செய்யுமாறு அரசு கூறியிருந்தது. இவற் றில் என்ன செய்ய வேண்டுமென்று சிஐடியு வலி யுறுத்துகிறதோ, அந்த முன்மொழிவுகள் இந்தக் குறிப்பில் இடம் பெற்றிருந்தன.

மாலை 7.15 மணிக்கு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அவரிடமிருந்து எனக்கு தொலை பேசி அழைப்பு வந்தது. “மார்பில் வலி இருக்கிறது. இங்கு வர முடியுமா?” என்று கேட்டார். பத்தே நிமிடங்களில் ஸ்வதேஷ்தேவ் ராயுடன் அவரு டைய வீட்டில் இருந்தேன். ஏ.கே.ஜி.பவன் தோழர் களுக்கும் அவர் சொன்னதால் அந்தத் தோழர்கள் எங்களுக்கு முன்பே அங்கு வந்துவிட்டனர். தொலைபேசி மூலம் மருத்துவர் சொன்ன சில மாத்திரைகள் அவருக்கு வழங்கப்பட்டது. உடனடி யாக, வலி குறைந்துவிட்டது. நான் இப்போது நன்றாக உணர்கிறேன் என்று சொல்லத் துவங்கினார். அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் முடிவு செய்த போது, அது தேவையில்லை. நான் நன்றாக இருப்பதாக உணர் கிறேன் என்றார். அதிகமாகப் பேச வேண்டாம் என்று நாங்கள் அவரிடம் சொன்னாலும், தொடர்ந்து ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி வந்தார்.

ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் மருத்துவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவரே பதில் சொன்னார். இ.சி.ஜி. எடுத்துப் பார்த்த மருத்துவர்கள், கடுமையான மாரடைப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது என்று எங்களிடம் தெரிவித்தனர். மருந்துகளும், ஊசிகளும் அவருக்கு தரப்பட்டன. அந்த நேரத்தில் தோழர்கள் பிரகாஷ்காரத் மற்றும் பிருந்தாகாரத் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போதும்கூட நான் நன்றாக இருக்கிறேன் என்று தான் அவர் சொல்லிக் கொண்டிருந்தார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அப்போது அவர் இருந்தார். சி.சி.ஜி.யில் அவரை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டி ருந்தன.

இரவு 11 மணிக்குக்கூட, அடுத்த நாள் நடக்க விருக்கும் உப குழுக்கூட்டம் பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னால் கலந்து கொள்ள முடியாது என்பதால் தீபங்கர் முகர்ஜியை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதான் தோழர் பாந்தே. எக் கணமும் செய்ய வேண்டிய வேலை பற்றி விழிப் போடு இருப்பார். இரவு 11.30 மணிக்கு அவர் சி.சி.ஜியில் அனுமதிக்கப்பட்டார். அவர் தேறி வருகிறார் என்று மருத்துவர்கள் கூறினாலும், அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டனர். சி.சி.ஜியை விட்டு வெளி யேறிச் சென்ற தோழர்களுக்கு பை சொல்லி வழி யனுப்பி வைத்தார். அவரோடு இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்ட தோழர்கள் மட்டுமே அங்கேயே இருந்தனர்.

நடுநிசி கழிந்த சில நிமிடங்களிலேயே எச்சரிக்கை மணி ஒலித்தது. மருத்துவர்கள் விரைந் தனர். அவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று முயற்சித்தனர். இரண்டாவது மாரடைப்பு அவருக்கு ஏற்பட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த அவரது இதயத்தால் இதைத் தாங்க முடியவில்லை. தனது இறுதி மூச்சை 00.20 மணிக்கு அவர் சுவாசித்தார். ஒரு வழக்கமான ஆகஸ்டு 19 ஆம் தேதி அதிர்ச்சியோடும், துக்கத் தோடும் அனைவருக்கும் முடிந்தது. அந்த மோச மான இரவில் அவரது 68 ஆண்டுகால பொது வாழ்க்கை நிறைவுற்றது.

86 வயதில் தனது கடைசி நேரம் வரையில் பணி யாற்றிக் கொண்டிருந்தது தோழர் பாந்தே போன்றவர்களால் மட்டுமே இயலும். மார்புப் புற்றுநோய் போன்ற கடுமையான பிரச்சனைகளை சாதாரணமாக அவர் எடுத்துக் கொண்டார் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். ஒருமுறைகூட நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்குப்பிறகு அவர் தேறி வருகிறார் என்று மருத்துவர்கள் சொல்லி வந்தனர். அதற்குள், புற்றுநோயைப் பற்றி யும், அவருக்குத் தரப்பட்டு வந்த மருந்துகள் பற்றி யும் அவர் முழுமையாகத் தெரிந்து கொண்டார். புற்றுநோய் தொடர்பான பல்வேறு தகவல்களை இணையதளங்கள் மூலமாக எவ்வாறு தெரிந்து கொண்டார் என்று எங்களுக்கு சொல்வது அவரு டைய வழக்கமாகும்.

அவரது பள்ளிக்கூடப் பருவத்தில் துவங்கிய அறிவுத்தாகம், கடைசிக்காலம் வரை தொடர்ந்தது. எந்தவொரு விஷயத்திலும் யாராவது சில தகவல் களையோ அல்லது வழிகாட்டுதல்களையோ பெற விரும்பினால் அதைத் தருவதில் நிபுணத்துவம் பெற்றவராக அவர் இருந்தார் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். தோழர் பாந்தேயின் மரணம் சிஐடியுவுக்கு மட்டுமல்ல, நாட்டின் இடது சாரி மற்றும் ஜனநாயக இயக்கத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். 1946 ஆம் ஆண்டில் ஷோலாப்பூரில் துவங்கிய தொழிற்சங்கப் பணிகள், 1956 ஆம் ஆண் டில் தில்லியில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி.யின் தலைமை அலுவலகத்திற்கு அவர் அனுப்பப்பட்டபோது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தன.

அதற்குப் பிறகு அவர் செய்த பணிகள் அனை வருக்கும் தெரிந்த ஒன்றாகும். தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாத உறுதி மற்றும் அவரின் சளைக்காத உழைப்பு ஆகியவற்றை அவருடைய மூத்த சகாக் கள் நினைவூட்டுகிறார்கள். சிஐடியுவைக் கட்ட மைப்பதில் அவருடைய பங்கு, ஒன்றுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் இயக்கத்தை பலப்படுத்து வதில் அவரது பாத்திரம், சர்வதேச உறவுகளைக் கட்டுவதில் அவரது அளப்பரிய பங்களிப்பு ஆகிய வை, இந்தியாவின் மிகப்பெரும் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராக அவரை உருவாக்கின.

ஜூலை 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் குலுவில் நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். சண்டிகரில் இருந்து குலு வரையில் சாலை வழியாக மேற்கொள்ள வேண்டிய பயணம் அவருக்கு சிரமமானதாக இருக்கும் என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். ஆனால் யாருமே அதைச் சொல்ல தயாரில்லை. ஜனவரி 2011ல் நாசிக் நகரில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு அவர் பெரிதும் வருந்தினார் என்பதால்தான் யாரும் அவரிடம் இதுபற்றிப் பேசவில்லை.

நாசிக் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அவர் அனுப்பிய செய்தி, அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தியது. அவர் இவ்வாறு எழுதியிருந் தார்:

“சிஐடியு நிறுவப்பட்டதிலிருந்து, கடந்த நாற்ப தாண்டு காலமாக நான் எந்தவொரு செயற்குழுக் கூட்டத்தையோ அல்லது பொதுக்குழுக் கூட்டத் தையே தவறவிட்டதில்லை. இருந்தாலும், முதன் முறையாக பொதுக்குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாமல் இருக்கிறேன். அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் எனது உடல்நிலை சரியில்லாததால், எனக்கு வேறு வழியில்லை. உங்கள் அனைவருக்கும் தெரியும், நான் மார்புப் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தற்காலிகமாக எந்தவித பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். வயதாகி விட்டதால், உடல்நிலை மிகவும் மெதுவாகவே சரியாகி வருகிறது. எனது வழக்கமான பணியை மேற்கொள்ளும் அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

உலகமயக் கொள்கைகள் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்பல மாகிக் கொண்டிருக்கும் பெரும் ஊழல்கள் நாட்டின் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள் இத்தகைய ஊழல் களுக்கு முட்டுக் கொடுக்கிறது. இருந்தாலும், கிட்டத்தட்ட நிறுவனமயமாகிவிட்ட ஊழலுக்கும், நவீன - தாராளமய உலகமயக் கொள்கைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை மக்கள் உணரவில்லை. தனி யார் துறை, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கிடை யில் உள்ள மோசமான கூட்டு சுயநலத்திற்காக தேசத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதில் முடிந் துள்ளது. சாமான்ய மக்களோ கடுமையாகத் துயருற்றுள்ள னர். ஆனால், உலகிலேயே இரண்டாவது பெரிய வளரும் பொருளாதாரம் என்றும், அதி விரைவில் டாலர் மகா கோடீஸ்வரர்களை உரு வாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பேசிக் கொண்டிருக் கிறது. அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையுயர்வால் பொது மக் கள் தொடர்ந்து பாதிக்கப்படு கிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்குதான் அதிகமான பாதிப்பாகும். ஒவ்வொரு நாளும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல் கிறது. மக்களின் பிரச்சனைகள் தீருவதற்கான வாய்ப்புகளோ அல்லது பொருளாதாரம் சரியா வதற்கான அறிகுறிகளோ தென்படவில்லை. நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, நெருக்கடி நீண்ட காலத்திற்கு இருக்கும் என்பதையே காட்டு கிறது.

உலகமயக் கொள்கைகளை எதிர்த்து வலுவான போராட்டங்களில் கூடுதலாக உழைக் கும் வர்க்கத்தினரைப் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்களுக்கு கல்வி வழங்கும் பணியை முன்னுரிமைப் பணி யாக சிஐடியு எடுத்துக் கொள்ள வேண்டும். வர்க்க மனப்பான் மையை தொழிலாளர்கள் மத்தியில் வளர்த்தெடுக்கும் பணியில் சிஐடியுவின் பங்கை வலுப் படுத்துவதற்குத் தேவை யான முடிவுகளை பொதுக் குழு எடுக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.”

- இதுதான் தோழர் பாந்தே.

சிறந்த தோழரான டாக்டர் மதுகர் காசிநாத் பாந்தேயின் வாழ்வும், கல்வியும் வரலாற்றுக் கடமைகளை நினைவுபடுத்தி ஒரு ஒன்றுபட்ட உழைக்கும் வர்க்க இயக்கத்தைக் கட்டுவதற்கு சரியான பாதையைக் காட்டுவதாக அமைந் துள்ளன.

தமிழில்: ஹரி

Pin It