சிறுவர் கதை

 

ஒரு சிறிய கடற்பறவை

நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பியது.

நகரைச் சுற்றிப் பார்க்கும் போது

ஒரு சுண்டெலியைப் பார்த்தது.

உடனே அருகில் சென்று

உன்னுடைய சிறகுகள் எங்கே.?

அவற்றுக்கு என்ன வாயிற்று என்று கேட்டது.

சுண்டெலி  கடற்பறவையை

வியப்போடு பார்த்தது.

அது பேசிய மொழி சுண்டெலிக்குப் புரியவில்லை.

சுண்டெலிக்கு கடற்பறவையின்

சிறகுகளைப் பார்த்தவுடன்

இது என்னவாக இருக்கும்..?

என்று எண்ணியது.

சுண்டெலி தன்னுடைய சிறகுகளையே உற்றுப் பார்ப்பதைக் கடற்பறவை கவனித்தது. கேட்ட கேள்விக்கு

பதில் கிடைக்காததால் கடற்பறவை சுண்டெலியின் சிறகுகளை

யாரோ ஒரு அசுரன் பிய்த்துப் போட்டிருக்கலாம் அல்லது

ஏதாவது ஒரு மிருகம் பிடுங்கிக் கொண்டு போயிருக்கலாம் என மனதிற்குள் நினைத்துப் பரிதாபப்பட்டது.

அது மனதிற்குள் சுண்டெலிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென எண்ணியது. அப்படியே சுண்டெலியைத்

தன் அலகுகளில் கவ்விக் கொண்டு

வானில் பறக்க ஆரம்பித்தது.

வானத்திலிருந்து பூமியைப் பார்த்த சுண்டெலிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இதற்கு முன்னர் அது போன்ற அழகான காட்சியைக் கண்டதேயில்லை. வானத்திலிருந்து கீழே வருவதற்கு சுண்டெலி விரும்பவில்லை.

இருந்தாலும் என்ன செய்வது..?

சிறிது நேரம் நகரைச் சுற்றிய

கடற்பறவை சுண்டெலியை

அதே இடத்தில் இறக்கிவிட்ட பின்னர் கடலுக்குச் சென்று விட்டது சுண்டெலி,

தான் வானத்தில் பறந்த

அற்புதமான

புதிய அனுபவத்தையும்

பூமியின் அழகையும்

எண்ணியெண்ணி மகிழ்ச்சி அடைந்தது.

நாட்கள் செல்லச் செல்ல

சுண்டெலிக்கு மனதினுள்

சந்தேகம் வளரத் தொடங்கியது.

அந்த அற்புதமான அனுபவத்தைத் தன்னுடைய கனவுதான்

என நினைத்துக் கொண்டது.

Pin It