அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியச் சக்கரவர்த்தி மரணப்படுக்கையில் படுத்திருந்தார். அறுபத்தி மூன்று ஆண்டுகாலம் சக்கரவர்த்தியாக, ஓவியனாக, பாடகனாக, தச்சனாக, கொத்தனாக, யானைப் பாகனாக, துப்பாக்கித் தயாரிப்பவனாக ஏதேதோ கலைகளை, தொழில்களைச் செய்த அவரது நீண்ட வலுவான கரங்கள் அசைவற்றிருந்தன. விதிகளைப் பின்பற்றும் முகமதியன் பாதம் வரை உடையணிய வேண்டும் என்ற விதியை மீறுவதற்காக வென்றே அவர் தாமே வடிவமைத்த முழங்கால் வரையிலான ஆடைதான் அன்றும். முகமதியன் தாடி வைக்க வேண்டும் என்ற விதியை மீறுவதற்காக தினமும் பளபளவென சவரம் செய்யப்படும் அவரது கோதுமை நிறமான உப்பிய கன்னங்களில் உடல் நோவின் காரணமாய் சில நாள் தாடி. இளமைப்பருவம் முழுவதும் இடைவிடாது குதிரைச் சவாரி செய்ததால் சற்றே வளைந்து போய் விட்ட கால்களில் கவ்விப் பிடிக்கும் வலி. அவர் தன் சிறிய கண்களை லேசாகத் திறந்தார். மரணத்தை நெருங்கும் அந்த வேளையிலும், கடலலைகள் மேல்பட்டுத் தெறிக்கும் சூரியஒளி போல் அக்கண்கள் ஒளிவீசின. மேல் மாடத்தில் அவரே தேர்ந்தெடுத்துத் தந்த வெள்ளை, நீல நிறச் சலவைக்கற்களாலான புறாக் கூண்டுகளில் புறாக்களின் சலசலப்பு. உதடுகளைக் குவித்து அவை போன்றே ஒலி எழுப்பினால், அவை சிறகடித்து எம்மருகே பறந்து வந்து விடும். அவர் உதடுகளைக் குவித்தார். ஒலி வரவில்லை. ஜலாலுதின் முகமது அக்பர் பேசும் திறனை இழந்து விட்டார்.
பேரரசரின் கட்டிலை மரணத்தின் மேகங்கள் சூழ்ந்திருக்க, குஜராத் முதல் வங்காளம் வரை, ஆப்கானிஸ்தானிலிருந்து தக்காணம் வரை, பரவியிருந்த அந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த பாதுஷா யார் என்ற பெரிய வினாக்குறி சுற்றி வளைத்திருந்தது. அடுத்த பேரரசர் சக்கரவர்த்தியின் மகன் சலீமா இல்லை பேரன் குஸ்ருவா என்ற கேள்வி மாடமாளிகைகளில், நதிக்கரைகளில், மசூதிகளில், கோவில்களில். பாலைவனங்களின் மணல்துகள்களில் எங்கும் எதிரொலித்த வண்ணம் இருந்தது. நீண்டநாளாய் சிறு முணுமுணுப்பாய், கிசுகிசுப்பாய்ப் பேசப்பட்ட விஷயம் பத்து நாட்களுக்கு முன் பூதாகரமாய் வடிவெடுத்து மாமன்னர் முன் நின்றது. அக்கேள்விக்குறியின் இரு பக்கங்களிலும் உருவிய நீண்ட வாட்களோடு மகனும், பேரனும் நின்றது பாதுஷாவின் கண்முன் தெரிந்தது.
அன்று பாதுஷாவிற்கு மிகவும் பிடித்த யானைச் சண்டை. மான் சண்டை முதல் யானைச் சண்டை வரை ஒவ்வொன்றிற்கும் தெளிவாக விதிமுறைகளை வகுத்து வைத்திருந்தார் அக்பர். அந்த விதிகளின் படி அன்று இளவரசர் சலீமின் யானையான கிரண்பார் என்ற யானைக்கும், சலீமின் மகன் இளவரசர் குஸ்ருவின் யானையான சஞ்சல் என்ற யானைக்கும் தான் போட்டி. இரண்டுமே உன்னதமான மஸ்த் வகையைச் சேர்ந்தவை. கஜ லட்சணத்திற்கு ஏற்ப நான்கு கால்கள் மட்டுமன்றி, துதிக்கையும், ஆணுறுப்பும் தரையில் பதிய நிற்பவை. அக்பருக்குப் பிரியமான இணைகளுக்கு அவர் கண்முன்னே பிறந்து வளர்ந்தவை. அவரே தமது பிறந்த நாளன்று மகனுக்கும், பேரனுக்கும் அவற்றை பரிசாக அளித்திருந்தார். இரண்டும் இருபத்தியிரண்டு வகையான ஆபரணங்கள் பூட்டப்பட்டு, சர்வ அலங்காரத்தோடு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டன. ஒவ்வொன்றையும், தலைமைப் பாகனும், அவனது உதவியாளர்கள் நால்வரும் நடத்தி வந்தனர். இரண்டும் ஆவேசமாக மோதின. பாதுஷா சிறுகுழந்தையின் குதூகலத்துடன் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தார். மக்களின் ஆரவாரக் கூச்சலுக்கு இடையே ‘வருங்கால பாதுஷா சலீமின் யானைதான் வெல்லும்’ - ‘வருங்கால பாதுஷா குஸ்ருவின் யானைதான் வெல்லும்’ என்ற மக்களின் கோஷத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பாதுஷாவின் வட்டமுகம் இருண்டது. போட்டியை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுவிட்டுத் தன் படுக்கையில் சென்று விழுந்தவர்தான். இன்று வரை எழவில்லை.
பத்து நாட்களாக பாதுஷா திவானி -ஆமிற்கு வந்து பொதுமக்களைச் சந்திக்க வில்லை என்ற செய்தி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. நீண்ட காலத்திற்கு முன் அவரது உற்ற தோழன் பீர்பல் அவருக்காகப் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய அன்று சபைக்கு வராது தனிமையில் அழுதிருக் கிறார். மாபெரும் எழுத்தாளனும், வரலாற்றாசிரி யனும், அவரது மனசாட்சியாகத் திகழ்ந்தவனுமான அபுல் பசல், அவரது மகன் சலீமின் அடியாட்களால் கொல்லப்பட்ட தினம் அவர் சபைக்கு வராமல் இருந்த இரண்டாவது முறை. மற்றபடி, அவரது அன்பான தாயார் இறந்த அன்றுகூட இந்துக்கள் போன்று மொட்டை போட்டுக் கொண்டு துக்கத் தோடு துக்கமாக திவானி- ஆம் வந்து மக்கள் குறை கேட்டு ஆவன செய்தவர்தான் அந்த மாமனிதர். அவரா பத்து நாட்களாகப் படுக்கையில் என்ற வியப்பு எல்லோரிடமும் இருந்தது.
எனினும் பாதுஷா எந்தநேரமும் பழையபடி எழுந்து விடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரண்மனை அதிகாரிகளிடம் இருந்தது. எனவே அரண்மனையின் துல்லியமான, திட்டமிடப்பட்ட வேலைகளில் எவ்விதத் தொய்வும் இல்லை. மாறுதலும் இல்லை. அந்த 1605 அக்டோபர் மாதம் 16ம்தேதி அன்று வழக்கம் போலவே எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. மன்னர் சவாரிக்கென அன்றைய தேதிக்கு ஏற்கனவே முன் தீர்மானிக்கப் பட்ட யானை முழு அலங்காரத்தோடு தயாராக நின்றது. அது போன்றே குதிரை, ஒட்டகம் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு நாளும் தயாராக இருக்க வேண்டிய யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற் றின் பட்டியலை மன்னரே தயாரித்து அளித் திருந்தார். அவற்றின் பெயர், அடையாளங்கள், தனிப்பட்ட குணநலன்கள் அனைத்தையும் அவர் அறிவார். இவற்றிலெல்லாம் ஏதேனும் மாறுதல், தவறுதல் நடந்துவிட்டால் அதற்கு யார் பொறுப்பு, அவருக்கு என்ன தண்டனை என்பதையும் அவர் வகுத்து வைத்திருந்தார்.  அது போலவே அன்று அந்த சனிக்கிழமை அவர் பயன்படுத்த வேண்டிய வாள் சகல மரியாதையுடன் அவரது படுக்கைக்கு அருகே அதற்குரிய பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், அவரது தனிப்பட்ட உபயோகத்திற்கான நூற்றி ஐந்து மாட்ச்லாக் துப்பாக்கிகளில் அன்றைய தினத்திற்குரிய பதினைந்து துப்பாக்கிகள் அவ் வாறே அவற்றிற்குரிய இடத்தில் தயாராக இருந்தன. அடுத்த சனிக்கிழமைக்குள் அவை சுத்தம் செய்யப்பட்டு, எண்ணெயிடப்பட்டு வரிசைப்படி வந்துவிடும். எனவேதான் பாதுஷா தனக்கென நூற்றி ஐந்து துப்பாக்கிகளைத் தேர்ந் தெடுத்திருந்தார். அவர் ஓரு துப்பாக்கியில் ஒரு முறைக்கு நான்கு குண்டுகளுக்கு மேல் சுடுவ தில்லை. எத்தனை பெரிய போரானாலும், வேட்டையானாலும், எழுபத்தியேழு விதமான ஆயுதங்களைக் கையாளத் தெரிந்த அந்த மாவீர னுக்கு அறுபது குண்டுகளுக்கு மேல் தேவைப் பட்டதில்லை. அந்த ஆயுதங்கள் அத்தனையும் மௌனமாய்ப் படுத்திருந்த அந்தப் பேரரசன் கண் விழிக்கக் காத்திருந்தன.
கண்களைத் திறக்க முடியாமல், திறக்க விருப்பமும் இல்லாமல் அவர் படுத்திருந்தார். மனக்கண்ணில் அவரது உற்ற நண்பர்கள். மனம் ஒரு நொடியில் எத்தனையோ ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. வேட்டைக்குச் சென்ற போது பாதை தவறி ஒரு சிறு கிராமத்தில் நுழைந்து விடுகிறார் அவர். அங்கு கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறான் ஒரு பிராமணச் சிறுவன். ‘தம்பி இந்தப் பாதை எங்கே செல்கிறது?’ என்று கேட்கிறார் அவர். ‘பாதை எங்கேயும் செல்லாது. இங்கேயேதான் இருக்கும். நீங்கள் தான் செல்ல வேண்டும்’ என்கிறான் அந்தச் சிறுவன் துடுக்காக. பக்கத்தில் இருந்த சபாஷ்கான் கோபத்தில் வாளை உருவுகிறான். சிறுவன் பயப்படாமல் சிரித்துக் கொண்டே நிற்கிறான். விசாரித்ததில் தன் பெயர் மகேஷ்தாஸ் என்றான் அச்சிறுவன். முத்திரை மோதிரம் தந்து, தம்மைச் சந்திக்கச் சொன்ன போது அவன் இத்தனை நெருங்கிய நண்பனாக மாறுவான் என்று நினைக்கவேயில்லை. உண்மையும் கற்பனையுமாக அவனைப் பற்றியும் தம்மைப் பற்றியும் தான் எத்தனை வேடிக்கையான கதைகள் நாடெங்கும் உலவுகின்றன. அவனது எழுத்தாணி யும் பேசும். வாளும் பேசும். அவனது வீரத்திற் காகத் தாம் அவனுக்கு வீர்வர் என்று பட்டம் தந்தது- சமஸ்கிருதப் பண்டிதர்கள் வகரத்தில் பெயர் துவங்குதல் இலக்கணப்படி தவறு என்று பீர்வர் என்று மாற்றியது-கடைசியில் அதுவும் பீர்பல் என்று மாறி நிலைத்தது எல்லாம் இன்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது. ‘நீ இருக்கும் இடத்திற்கே வந்து விடுகிறேன் நண்பா-தான்சேனைத் தயாராக இருக்கச் சொல். அவனது தர்பாரி கானடாவைக் கேட்கவேண்டும்’.
அவன்தான்எத்தனை பெரிய பாடகன்! அவன் முன்னால் பீர்பால் சுமாரான பாடகன் தான். சுற்றிலும் குளிர்ந்த தண்ணீருக்கு நடுவே தான்சேன் உட்கார்ந்து பாடுவதற்காகவே தாம் ஒரு மேடை கட்டியது நினைவிற்கு வருகிறது. அவன் பாடப்பாட அந்த நீர் இன்னும் குளிர்ந்து பனியாக உறைவது போல் இருக்கும். எம்மைவிட முப்பத்தியாறு வயது மூத்தவன் என்றாலும் வயதோ, அந்தஸ்தோ தடையாக இருந்ததே இல்லையே! அவன் முதன்முதலில் தர்பாரி கானடாவைப் பாடிய அந்த தினத்தை மறக்கவே முடியாது. பதேபூர் சிக்ரியின் வெப்பக் காற்றில்    ஸா நீ தா பா என்று படிப்படியாக இறங்கி வந்த அந்த ராகம், ம ப கா ம ரீ ஸா என்று முன்பின்னாக ஏறிஏறி இறங்கியபோது எங்கோ அந்தரத்தில் பறப்பதுபோல் இருந்தது. இது என்ன புதிதாய் இருக்கிறதே என்றால், நான் கண்டுபிடித்த ராகம் -தர்பாரி கானடா என்கிறான். இதற்கு என்ன பரிசு வேண்டும் என்பது மன்னராகிய எமது வழக்கமான கேள்வி. ஹிந்துஸ்தானத்தின் மாபெரும் சக்கர வர்த்தியின் முகத்திற்கு நேராக அப்போது தான்சேன் கேட்ட பரிசை வேறு யாரும் கேட்டுவிட்டு உயிரோடு இருந்திருக்க முடியாது. உன் மகள் மெஹருன்னிசா என்கிறான் அந்தத் திமிர் பிடித்த கலைஞன். மாடத்தில் இருந்த மகளைக் கேட்டால், ஆமாம் நான் அவரைக் காதலிக்கிறேன் என்கிறாள் தைரியமாக. தாத்தா வயதில் காதலன்! உடலுக்காக இல்லையாம். அவனது இசைக்காகவாம். ஜலாலுதீன் முகமது அக்பர் கேட்கப்பட்ட பரிசை மறுப்பானா? தான்சேனைச் சீண்டிபார்க்க நீ முகமதியனாக மாறி என் மகளைத் திருமணம் செய்து கொள் என்கிறோம். எம் நண்பன் எம்மைப் போன்றுதானே இருப்பான். “எனக்கும் சரி, எனது இசைக்கும் சரி மதமே கிடையாது. நான் இந்து வாக இருந்தால் என்ன, முகமதியனாக இருந்தால் என்ன, எல்லாம் எனக்கு ஒன்றுதான். நான் இப்போதே முகமதியனாக மாறுகிறேன். உன் மகளைக் கூப்பிடு” என்கிறான். இப்படியாக நண்பன் மாப்பிள்ளையாகிவிட்டான். இவ்வுலகை விட்டே போய்ச் சேர்ந்தும் விட்டான். இன்றும் அவனது தர்பாரி கானடாவும், மாண்டுவும், சந்திரகௌன்சும் என் மனம் முழுதும் நிறைந்து, நெருங்கி வரும் மரணத்தின் முறுக்கும் வேதனைக்கு இதமளித்துக் கொண்டிருக்கிறது.
பாதுஷாவிற்கு நா வறண்டது. உதடுகள் வெடித்துவிட்டது போல் இருந்தது. தாம் எந்த தேசம் போனாலும் கூடவே பெரிய பெரிய ஜாடிகளில் வரும் கங்கை நீரை ஒரு வாய் பருகினால் போதும் என்றிருந்தது. கங்கா மாதா குளிர்ச்சியானவள் அல்லவா? அக்பர் தண்ணீர் கேட்பதாக நினைத்து ஏதோ சைகை செய்ததை யாரும் கவனிக்க வில்லை. மந்திரிப் பிரதானிகள் அரசரைச் சந்திக்க வந்து கொண்டிருந்தார்கள். ராஜா மான்சிங் தம்மருகே வந்து வலது கையைத் தொப்பியில் வைத்து அப்படியே குனிந்து கோர்னிஷ் செய்து வணங்கித் தம் இருக்கைக்குச் சென்றது தெரிந்தது. மற்ற பலரும் வந்து விட்டார்கள். ஓஹோ, இன்று அடுத்த பாதுஷா யார் என்று தீர்மானிக்கப் போகிறார்களோ? என்று நினைத்தார் அக்பர். அவரது நினைவுப் பசு நடந்ததையெல்லாம் அசைபோடத் துவங்கியது.
இன்று சலீமைத் தவிர வேறு எந்த மகனும் உயிருடன் இல்லை. சலீம் அவர் உண்மையாகவே தவமிருந்து பெற்ற பிள்ளை. பிள்ளை இல்லாக் குறை தீர்க்க, ஆக்ராவில் இருந்து சில மைல்கள் தள்ளி இருக்கும் சிக்ரி குன்றுகளுக்கிடையே ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த சலீம் என்ற ஞானியிடம் பிள்ளை வரம் கேட்க தாம் அந்தப் பொட்டல் காட்டில் கால்நடையாகச் சென்றது அவர் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. ஞானி வரமளித் தார். அந்த ஞானியின் இருப்பிடத்திலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்று மனைவியை சிக்ரிக்கே அனுப்பியதும், பிறந்த குழந்தைக்கு ஞானியின் பெயரையே சூட்டி சலீம், சலீம் என சீராட்டியதும் மனதில் காட்சியாய் ஓடுகிறது. ஆனால் பதிலுக்கு அந்த அருமைப் புதல்வன் என்ன செய்தான்? பெற்ற மனதை தொடர்ந்து நோகடித்துக் கொண்டுதானே இருந்தான்! ஆக்ராவை நோக்கி, தம்மை எதிர்த்தே படை திரட்டி வந்தவன். தமக்குப் போட்டியாக அவனது உருவம் பொறித்த நாணயம் அச்சிட்டு, அதை வேண்டுமென்றே இங்கு அனுப்பிய ஆணவக்காரன். எல்லாவற்றிற்கும் மேலாக அவனது கொடூரங்களை, தவறுகளை எம்மிடம் கூறியதற்காக எம் ஆருயிர் நண்பன் அபுல் பசலை ஆள் வைத்துக் கொன்றவன். அன்றே அவனைக் கொன்றிருந்தால் இன்று இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.
அபுல் பசலை நினைத்த மாத்திரத்தில் அக்பரது மூடிய கண்களில் நீர் கசிந்து அவரது நீண்ட கண்ணிமைகளை நனைத்தது. எப்படிப்பட்ட ஞானி! அறிவாளி! படைப்பாளி! வரலாற்றாளன்! இரண்டாவது தலைமுறையாக அரசசேவையில் தன்னை அர்ப்பணித்தக் கொண்ட குடும்பம். எழுதப் படிக்கத் தெரியாத எமக்கு அவன்தானே எழுத்தாணி. அவன் இல்லாவிட்டால் நாம் ராமாயணத்தையும், பாரதத்தையும், குரானையும், மீராவின் பாடல்களையும் எப்படி அறிவோம்? இந்தத் தற்குறியை ஓரளவு அறிவாளியாக மாற்றியது அவன்தான். அக்பர் நாமா, அயினி அக்பர் மூலம் எமது பெயரை சூரியசந்திரர் உள்ளளவும் நிலைக்குமாறு செய்தவன் அவன்தான். தக்காணத்தில் ஆளுனராக இருந்த அவனை ஒரு கொலைகாரப் படையை அனுப்பிக்  கொன்று விட்டானே இந்த சலீம். வெட்டப்பட்ட தலையை தன் மடியில் வைத்து  அழகு பார்த்தானாம் அந்தக் கல் நெஞ்சுக்காரன். வேண்டாதவர்களை வெட்டிச் சாய்ப்பது முகலாயர்களுக்கு பெரிய விஷய மில்லை. தன் ரத்தத்தையே பாலாக ஊட்டி வளர்த்த மாகம் அனகாவின் மகன் ஆதம்கானை நாம் மாடியில் இருந்து வீசி எறிந்துகொன்றோம். உயிர் இழுத்துக் கொண்டிருந்தது என்று மீண்டும் ஒருமுறை மாடிக்குக் கொண்டு சென்று இரண்டாம் முறை வீசச் செய்தோம். பைராம் கானையும் பகைத்துள்ளோம். அவன் மனைவி சலீமா பேகத்தை திருமணமும் செய்து கொண்டோம். எனினும் ஒரு எழுத்தாளனுக்கு எதிராக எமது வாள் என்றும் உயர்ந்ததில்லை. எமது பாட்டனார் காலம் தொட்டு எழுத்தை மதிப்பவர்களன்றோ நாம்.
இபாதத் கானா கட்ட அபுல் பசல் தான் ஆலோசனை தந்தான். எந்தப் பிரிவைச் சார்ந்தவர் கள் எந்தப் பக்கம் அமர்ந்து விவாதிக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் அனைத்தும் வகுத்ததும் அவன்தான். அப்போதெல்லாம் வியாழக்கிழமை இரவு எப்போது வரும் என்று வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் காத்திருப்போம். சூபி, தத்துவஞானி, பேச்சாளி, நியாயாதிபதி, சன்னி, ஷியா, பிராமணர், ஜதீ, சீயுரா, சார்வாகர், நசரீன், யூதர், சாபீ, ஜொராஷ்டிரியன் என்று எத்தனை விதமான பிரிவுகள்! என்னென்ன விதமான வாதங் கள்! சமணத் தலைவர் விஜயசென் சூரிக்கும், ராஜா ராம்தாசுக்கும் நடந்த வாதத்தில்தான் எப்படி அனல் பறந்தது! பசல்தான் வாதத்தை சுமூகமாக முடித்து வைத்தான். அன்றிலிருந்துதான் நாமும் சுத்த  சைவமாக மாறினோம். இப்படி வாதங்கள் நடக்கும் போதெல்லாம் பசல் உற்சாகமாகி விடுவான். இப்படிப்பட்ட வாதங்கள் மூலமாகத் தான் கசடிலிருந்து தெளிவான மதுவை எடுக்க முடியும் என்பான் அவன்.
அவனைக் கொன்ற அடியாட்களைப் பழிவாங்கிய கையோடு சலீமையும் வெட்டிப் போட்டிருக்க வேண்டும். இப்போதோ அவன் தந்தை தன்னை மன்னித்து விட்டார் என்ற எண்ணத்தில் திரிகிறான். எழுத்தாளஹத்தி செய்தவனுக்கு இந்த அரியணையைத் தரலாமா?
சபை நிறைந்து விட்டது. சப்தங்களின் வழி அக்பருக்குத் தெரிந்தது. மரணப்படுக்கையிலும் அந்த மாமன்னனின் செவிகளின் கூர்மை குறையவில்லை. கவனம் சபை நடவடிக்கைகளில் குவிந்தது. மான்சிங் எழுந்து, “இளவரசர் சுல்தான் சலீம் அவர்களுடைய குணநலன்கள் பற்றி சபையோர்கள் அறிவீர்கள். பாதுஷா அவர் குறித்து என்ன நினைக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இளவரசர் சலீமை தனது வாரிசாக அவர் ஒரு நாளும் ஏற்கவில்லை. எனவே நாம் அனைவரும் இளவரசர் குஸ்ரூ அவர்கள் அடுத்து அரியணை ஏறுவதை முழுமனதோடு ஆதரிக்க வேண்டும்” என்கிறார். அவரது கம்பீரமான குரல் பாதுஷாவின் செவிகளில் தெளிவாக விழுந்தது. பாவம் மான்சிங் என்று நினைத்துக் கொண்டார் அக்பர். சலீம் மான்சிங்கின் சகோதரியைத்தான் மணந்து கொண்டான். சலீமின் போக்கு பிடிக்காத அவள் மனநிலை குன்றி தற்கொலை செய்து கொண்டு விட்டாள். தன் சகோதரியின் மரணத் திற்குக் காரணமானவன் வேறு யாராக இருந்தா லும் மான்சிங் பழி தீர்த்திருப்பான். தம் பொருட்டே அவன் சலீமை விட்டு வைத்திருக் கிறான் என்று தோன்றியது அக்பருக்கு. மான்சிங் கூறியது சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. அரசவையின் முக்கியமான பிரபுவும், தொன்மையான மங்கோலியக் குலத்தைச் சார்ந்தவனுமான சயீத் கான் ஆவேசமாக எழுந்து, “என்ன பேச்சு! இது இளவரசர் சலீம் ஷா இருக்கும் போது இந்த அரியணையில் அவரது மகனை உட்கார வைப்பதா? இது தார்த்தாரியர்களுடைய சட்ட சம்பிரதாயங்களுக்கு விரோதமல்லவா? இதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்” என்றான். அவனும், மிகப் பெரிய வியாபாரியான மாலிக் கைர் ஆகிய இருவரும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். சலீமின் ஆதர வாளர் கள் ஏற்கெனவே திட்டமிட்டு வந்திருந் தார்கள் போலும். ராஜா ராம்தாஸ் கச்வாஹா தனது ஆட்களுடன் கருவூலத்தைக் கைப்பற்றச் சென்றான். முர்டாசா கான் கோட்டைக்கு வெளியே தனது ஆதரவாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்தான்.
குதிரைப்படை பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, மாதம் ஒரு பிரிவு கோட்டைக் காவலுக்கு நிற்பது வழக்கமான நடைமுறை. இந்த மாதம் காவலுக்கு வந்துள்ள பிரிவு சலீமின் ஆதரவாளனான மீர் அர்ஸ் என்ற தளபதியின் படை. இரண்டு நாட்களுக்கு முன் அகழியில் படகில் வந்த சலீமைக் கைதுசெய்ய மான்சிங் உத்தரவிட்டும், அப்படை சலீமைத் தப்பவிட்டு விட்டது. அன்றே அவனைச் சிறைப்பிடித்திருந்தால் இத்தனை பிரச்சனை இருந்திருக்காது என்று நினைத்தார் பாதுஷா. முர்டாசாகான், இளவரசர் சலீமை அழைத்து வருவதாகச் சொல்லிச் சென் றான். மான்சிங் செய்வதறியாது திகைத்து நிற் கிறார். அரசவைப் பிரதானிகளையெல்லாம் தன் பக்கம் இழுத்து, மகன் தனக்கெதிராக பலம் காட்டு வது அக்பருக்கு ஆத்திரமூட்டியது. வரட்டும். இன்று எமது உயிரா, இல்லை அவன் உயிரா என்று பார்த்து விடுவோம். இடையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். தந்தை ஹூமாயுன் அளித்த குறுவாள் பத்திரமாக இருந்தது.
சபையில் பெரும் ஆரவாரம். பத்தாயிரம் படை வீரர்களின் தளபதியான தஸ்ஹசார்மான் சப்தாராகிய இளவரசர் சலீம் மீர் முர்டாசாகானும், ஃபரா பெக்கும் இருபக்கமும் பாதுகாப்பாக வர, பின்னால் ஒரு பெரும் பாதுகாப்புப் படை புடைசூழ உள்ளே நுழைகிறார். இருபது ஜோடி நகராக்கள் முழங்குகின்றன. ஒன்பது சுர்னாக்கள் பிளிறுகின்றன. பாதுஷாவின் உடல் நலம் கருதி வாத்தியங்களை நிறுத்தச் சொல்லி உத்தரவிடுகிறார் இளவரசர். வாத்தியங்களின் பேரொலி திடீரென நின்றதில் உருவான அதீதமான நிசப்தத்தில் கண்விழிக்கிறார் அக்பர்.
எதிரே இன்று உயிருடன் இருக்கும் ஒரே மகன். முப்பத்தாறு வயது என்று சொல்ல முடியாத வசீகரமான குழந்தை முகம். அழகாய்ச் செதுக்கிய சிறிய தாடி. அரண்மனையின் ஆடம்பர வாழ்வில் கொழுத்த உருண்டு திரண்ட உடலில்லை. எத்தனையோ போர்க்களங்கள் கண்ட மெலிந்த உருக்குப் போன்ற உறுதியான உடல். நெற்றி தரையில் தொட, கீழே விழுந்து மெதுவாய் எழுந்து தஸ்லீம் முறையில் வணங்கும் மகனைப் பார்க் கிறார் அக்பர். அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் எங்கோ காணாமல் போய்விட்டது.  கடும் வெயிலில் பாலை நிலத்தில் பாதயாத்திரை சென்று தவமிருந்து பெற்ற பிள்ளை காலில் வந்து விழுந்து கைகட்டி நிற்கும்போது அந்த மகா சக்கரவர்த்தி சாதாரண தகப்பனானான். எல்லாம் உனக்குத்தான் மகனே! உன் தஸ்லீமில் நான் அனைத்தையும் மறந்துவிட்டேன். கை தன்னிச்சையாய் இடை யிலிருந்த ஹூமாயுனின் குறுவாளை எடுத்து நீட்டுகிறது. மகன் மிகுந்த மரியாதையோடு அதைப் பெற்றுக் கொள்கிறான். ஒரு கணம் அவன் கைகளில் அந்த வாள் மறைந்து அந்த இடத்தில் நீண்ட வெண்தாடியுடன் அபுல் பசலின் ரத்தம் சொட்டும் தலை தெரிந்தது அக்பருக்கு. ‘நண்பனே! பசல், என்னை மன்னித்து விடு. நான் முதலில் ஒரு தகப்பன், பிறகு தான் நண்பன், பாதுஷா எல்லாம்’ என அவர் உதடுகள் முணுமுணுத்தன. அவர் நிரந்தரமாய்க் கண் மூடினார்.
பாதுஷா தனது இறுதி மூச்சிலும் பிரார்த்தனை செய்ததாக சபையோர் மனம் நெகிழ்ந்தனர்.
அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியச் சக்கரவர்த்தி மரணப்படுக்கையில் படுத்திருந்தார். அறுபத்தி மூன்று ஆண்டுகாலம் சக்கரவர்த்தியாக, ஓவியனாக, பாடகனாக, தச்சனாக, கொத்தனாக, யானைப் பாகனாக, துப்பாக்கித் தயாரிப்பவனாக ஏதேதோ கலைகளை, தொழில்களைச் செய்த அவரது நீண்ட வலுவான கரங்கள் அசைவற்றிருந்தன. விதிகளைப் பின்பற்றும் முகமதியன் பாதம் வரை உடையணிய வேண்டும் என்ற விதியை மீறுவதற்காக வென்றே அவர் தாமே வடிவமைத்த முழங்கால் வரையிலான ஆடைதான் அன்றும். முகமதியன் தாடி வைக்க வேண்டும் என்ற விதியை மீறுவதற்காக தினமும் பளபளவென சவரம் செய்யப்படும் அவரது கோதுமை நிறமான உப்பிய கன்னங்களில் உடல் நோவின் காரணமாய் சில நாள் தாடி. இளமைப்பருவம் முழுவதும் இடைவிடாது குதிரைச் சவாரி செய்ததால் சற்றே வளைந்து போய் விட்ட கால்களில் கவ்விப் பிடிக்கும் வலி. அவர் தன் சிறிய கண்களை லேசாகத் திறந்தார். மரணத்தை நெருங்கும் அந்த வேளையிலும், கடலலைகள் மேல்பட்டுத் தெறிக்கும் சூரியஒளி போல் அக்கண்கள் ஒளிவீசின. மேல் மாடத்தில் அவரே தேர்ந்தெடுத்துத் தந்த வெள்ளை, நீல நிறச் சலவைக்கற்களாலான புறாக் கூண்டுகளில் புறாக்களின் சலசலப்பு. உதடுகளைக் குவித்து அவை போன்றே ஒலி எழுப்பினால், அவை சிறகடித்து எம்மருகே பறந்து வந்து விடும். அவர் உதடுகளைக் குவித்தார். ஒலி வரவில்லை. ஜலாலுதின் முகமது அக்பர் பேசும் திறனை இழந்து விட்டார்.
 
பேரரசரின் கட்டிலை மரணத்தின் மேகங்கள் சூழ்ந்திருக்க, குஜராத் முதல் வங்காளம் வரை, ஆப்கானிஸ்தானிலிருந்து தக்காணம் வரை, பரவியிருந்த அந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அடுத்த பாதுஷா யார் என்ற பெரிய வினாக்குறி சுற்றி வளைத்திருந்தது. அடுத்த பேரரசர் சக்கரவர்த்தியின் மகன் சலீமா இல்லை பேரன் குஸ்ருவா என்ற கேள்வி மாடமாளிகைகளில், நதிக்கரைகளில், மசூதிகளில், கோவில்களில். பாலைவனங்களின் மணல்துகள்களில் எங்கும் எதிரொலித்த வண்ணம் இருந்தது. நீண்டநாளாய் சிறு முணுமுணுப்பாய், கிசுகிசுப்பாய்ப் பேசப்பட்ட விஷயம் பத்து நாட்களுக்கு முன் பூதாகரமாய் வடிவெடுத்து மாமன்னர் முன் நின்றது. அக்கேள்விக்குறியின் இரு பக்கங்களிலும் உருவிய நீண்ட வாட்களோடு மகனும், பேரனும் நின்றது பாதுஷாவின் கண்முன் தெரிந்தது.
 
அன்று பாதுஷாவிற்கு மிகவும் பிடித்த யானைச் சண்டை. மான் சண்டை முதல் யானைச் சண்டை வரை ஒவ்வொன்றிற்கும் தெளிவாக விதிமுறைகளை வகுத்து வைத்திருந்தார் அக்பர். அந்த விதிகளின் படி அன்று இளவரசர் சலீமின் யானையான கிரண்பார் என்ற யானைக்கும், சலீமின் மகன் இளவரசர் குஸ்ருவின் யானையான சஞ்சல் என்ற யானைக்கும் தான் போட்டி. இரண்டுமே உன்னதமான மஸ்த் வகையைச் சேர்ந்தவை. கஜ லட்சணத்திற்கு ஏற்ப நான்கு கால்கள் மட்டுமன்றி, துதிக்கையும், ஆணுறுப்பும் தரையில் பதிய நிற்பவை. அக்பருக்குப் பிரியமான இணைகளுக்கு அவர் கண்முன்னே பிறந்து வளர்ந்தவை. அவரே தமது பிறந்த நாளன்று மகனுக்கும், பேரனுக்கும் அவற்றை பரிசாக அளித்திருந்தார். இரண்டும் இருபத்தியிரண்டு வகையான ஆபரணங்கள் பூட்டப்பட்டு, சர்வ அலங்காரத்தோடு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டன. ஒவ்வொன்றையும், தலைமைப் பாகனும், அவனது உதவியாளர்கள் நால்வரும் நடத்தி வந்தனர். இரண்டும் ஆவேசமாக மோதின. பாதுஷா சிறுகுழந்தையின் குதூகலத்துடன் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தார். மக்களின் ஆரவாரக் கூச்சலுக்கு இடையே ‘வருங்கால பாதுஷா சலீமின் யானைதான் வெல்லும்’ - ‘வருங்கால பாதுஷா குஸ்ருவின் யானைதான் வெல்லும்’ என்ற மக்களின் கோஷத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பாதுஷாவின் வட்டமுகம் இருண்டது. போட்டியை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுவிட்டுத் தன் படுக்கையில் சென்று விழுந்தவர்தான். இன்று வரை எழவில்லை.
 
பத்து நாட்களாக பாதுஷா திவானி -ஆமிற்கு வந்து பொதுமக்களைச் சந்திக்க வில்லை என்ற செய்தி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. நீண்ட காலத்திற்கு முன் அவரது உற்ற தோழன் பீர்பல் அவருக்காகப் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய அன்று சபைக்கு வராது தனிமையில் அழுதிருக் கிறார். மாபெரும் எழுத்தாளனும், வரலாற்றாசிரி யனும், அவரது மனசாட்சியாகத் திகழ்ந்தவனுமான அபுல் பசல், அவரது மகன் சலீமின் அடியாட்களால் கொல்லப்பட்ட தினம் அவர் சபைக்கு வராமல் இருந்த இரண்டாவது முறை. மற்றபடி, அவரது அன்பான தாயார் இறந்த அன்றுகூட இந்துக்கள் போன்று மொட்டை போட்டுக் கொண்டு துக்கத் தோடு துக்கமாக திவானி- ஆம் வந்து மக்கள் குறை கேட்டு ஆவன செய்தவர்தான் அந்த மாமனிதர். அவரா பத்து நாட்களாகப் படுக்கையில் என்ற வியப்பு எல்லோரிடமும் இருந்தது.
 
எனினும் பாதுஷா எந்தநேரமும் பழையபடி எழுந்து விடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரண்மனை அதிகாரிகளிடம் இருந்தது. எனவே அரண்மனையின் துல்லியமான, திட்டமிடப்பட்ட வேலைகளில் எவ்விதத் தொய்வும் இல்லை. மாறுதலும் இல்லை. அந்த 1605 அக்டோபர் மாதம் 16ம்தேதி அன்று வழக்கம் போலவே எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. மன்னர் சவாரிக்கென அன்றைய தேதிக்கு ஏற்கனவே முன் தீர்மானிக்கப் பட்ட யானை முழு அலங்காரத்தோடு தயாராக நின்றது. அது போன்றே குதிரை, ஒட்டகம் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு நாளும் தயாராக இருக்க வேண்டிய யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற் றின் பட்டியலை மன்னரே தயாரித்து அளித் திருந்தார். அவற்றின் பெயர், அடையாளங்கள், தனிப்பட்ட குணநலன்கள் அனைத்தையும் அவர் அறிவார். இவற்றிலெல்லாம் ஏதேனும் மாறுதல், தவறுதல் நடந்துவிட்டால் அதற்கு யார் பொறுப்பு, அவருக்கு என்ன தண்டனை என்பதையும் அவர் வகுத்து வைத்திருந்தார்.  அது போலவே அன்று அந்த சனிக்கிழமை அவர் பயன்படுத்த வேண்டிய வாள் சகல மரியாதையுடன் அவரது படுக்கைக்கு அருகே அதற்குரிய பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், அவரது தனிப்பட்ட உபயோகத்திற்கான நூற்றி ஐந்து மாட்ச்லாக் துப்பாக்கிகளில் அன்றைய தினத்திற்குரிய பதினைந்து துப்பாக்கிகள் அவ் வாறே அவற்றிற்குரிய இடத்தில் தயாராக இருந்தன. அடுத்த சனிக்கிழமைக்குள் அவை சுத்தம் செய்யப்பட்டு, எண்ணெயிடப்பட்டு வரிசைப்படி வந்துவிடும். எனவேதான் பாதுஷா தனக்கென நூற்றி ஐந்து துப்பாக்கிகளைத் தேர்ந் தெடுத்திருந்தார். அவர் ஓரு துப்பாக்கியில் ஒரு முறைக்கு நான்கு குண்டுகளுக்கு மேல் சுடுவ தில்லை. எத்தனை பெரிய போரானாலும், வேட்டையானாலும், எழுபத்தியேழு விதமான ஆயுதங்களைக் கையாளத் தெரிந்த அந்த மாவீர னுக்கு அறுபது குண்டுகளுக்கு மேல் தேவைப் பட்டதில்லை. அந்த ஆயுதங்கள் அத்தனையும் மௌனமாய்ப் படுத்திருந்த அந்தப் பேரரசன் கண் விழிக்கக் காத்திருந்தன.
 
கண்களைத் திறக்க முடியாமல், திறக்க விருப்பமும் இல்லாமல் அவர் படுத்திருந்தார். மனக்கண்ணில் அவரது உற்ற நண்பர்கள். மனம் ஒரு நொடியில் எத்தனையோ ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. வேட்டைக்குச் சென்ற போது பாதை தவறி ஒரு சிறு கிராமத்தில் நுழைந்து விடுகிறார் அவர். அங்கு கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறான் ஒரு பிராமணச் சிறுவன். ‘தம்பி இந்தப் பாதை எங்கே செல்கிறது?’ என்று கேட்கிறார் அவர். ‘பாதை எங்கேயும் செல்லாது. இங்கேயேதான் இருக்கும். நீங்கள் தான் செல்ல வேண்டும்’ என்கிறான் அந்தச் சிறுவன் துடுக்காக. பக்கத்தில் இருந்த சபாஷ்கான் கோபத்தில் வாளை உருவுகிறான். சிறுவன் பயப்படாமல் சிரித்துக் கொண்டே நிற்கிறான். விசாரித்ததில் தன் பெயர் மகேஷ்தாஸ் என்றான் அச்சிறுவன். முத்திரை மோதிரம் தந்து, தம்மைச் சந்திக்கச் சொன்ன போது அவன் இத்தனை நெருங்கிய நண்பனாக மாறுவான் என்று நினைக்கவேயில்லை. உண்மையும் கற்பனையுமாக அவனைப் பற்றியும் தம்மைப் பற்றியும் தான் எத்தனை வேடிக்கையான கதைகள் நாடெங்கும் உலவுகின்றன. அவனது எழுத்தாணி யும் பேசும். வாளும் பேசும். அவனது வீரத்திற் காகத் தாம் அவனுக்கு வீர்வர் என்று பட்டம் தந்தது- சமஸ்கிருதப் பண்டிதர்கள் வகரத்தில் பெயர் துவங்குதல் இலக்கணப்படி தவறு என்று பீர்வர் என்று மாற்றியது-கடைசியில் அதுவும் பீர்பல் என்று மாறி நிலைத்தது எல்லாம் இன்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது. ‘நீ இருக்கும் இடத்திற்கே வந்து விடுகிறேன் நண்பா-தான்சேனைத் தயாராக இருக்கச் சொல். அவனது தர்பாரி கானடாவைக் கேட்கவேண்டும்’. 
 
அவன்தான்எத்தனை பெரிய பாடகன்! அவன் முன்னால் பீர்பால் சுமாரான பாடகன் தான். சுற்றிலும் குளிர்ந்த தண்ணீருக்கு நடுவே தான்சேன் உட்கார்ந்து பாடுவதற்காகவே தாம் ஒரு மேடை கட்டியது நினைவிற்கு வருகிறது. அவன் பாடப்பாட அந்த நீர் இன்னும் குளிர்ந்து பனியாக உறைவது போல் இருக்கும். எம்மைவிட முப்பத்தியாறு வயது மூத்தவன் என்றாலும் வயதோ, அந்தஸ்தோ தடையாக இருந்ததே இல்லையே! அவன் முதன்முதலில் தர்பாரி கானடாவைப் பாடிய அந்த தினத்தை மறக்கவே முடியாது. பதேபூர் சிக்ரியின் வெப்பக் காற்றில்    ஸா நீ தா பா என்று படிப்படியாக இறங்கி வந்த அந்த ராகம், ம ப கா ம ரீ ஸா என்று முன்பின்னாக ஏறிஏறி இறங்கியபோது எங்கோ அந்தரத்தில் பறப்பதுபோல் இருந்தது. இது என்ன புதிதாய் இருக்கிறதே என்றால், நான் கண்டுபிடித்த ராகம் -தர்பாரி கானடா என்கிறான். இதற்கு என்ன பரிசு வேண்டும் என்பது மன்னராகிய எமது வழக்கமான கேள்வி. ஹிந்துஸ்தானத்தின் மாபெரும் சக்கர வர்த்தியின் முகத்திற்கு நேராக அப்போது தான்சேன் கேட்ட பரிசை வேறு யாரும் கேட்டுவிட்டு உயிரோடு இருந்திருக்க முடியாது. உன் மகள் மெஹருன்னிசா என்கிறான் அந்தத் திமிர் பிடித்த கலைஞன்.
 
மாடத்தில் இருந்த மகளைக் கேட்டால், ஆமாம் நான் அவரைக் காதலிக்கிறேன் என்கிறாள் தைரியமாக. தாத்தா வயதில் காதலன்! உடலுக்காக இல்லையாம். அவனது இசைக்காகவாம். ஜலாலுதீன் முகமது அக்பர் கேட்கப்பட்ட பரிசை மறுப்பானா? தான்சேனைச் சீண்டிபார்க்க நீ முகமதியனாக மாறி என் மகளைத் திருமணம் செய்து கொள் என்கிறோம். எம் நண்பன் எம்மைப் போன்றுதானே இருப்பான். “எனக்கும் சரி, எனது இசைக்கும் சரி மதமே கிடையாது. நான் இந்து வாக இருந்தால் என்ன, முகமதியனாக இருந்தால் என்ன, எல்லாம் எனக்கு ஒன்றுதான். நான் இப்போதே முகமதியனாக மாறுகிறேன். உன் மகளைக் கூப்பிடு” என்கிறான். இப்படியாக நண்பன் மாப்பிள்ளையாகிவிட்டான். இவ்வுலகை விட்டே போய்ச் சேர்ந்தும் விட்டான். இன்றும் அவனது தர்பாரி கானடாவும், மாண்டுவும், சந்திரகௌன்சும் என் மனம் முழுதும் நிறைந்து, நெருங்கி வரும் மரணத்தின் முறுக்கும் வேதனைக்கு இதமளித்துக் கொண்டிருக்கிறது.
 
பாதுஷாவிற்கு நா வறண்டது. உதடுகள் வெடித்துவிட்டது போல் இருந்தது. தாம் எந்த தேசம் போனாலும் கூடவே பெரிய பெரிய ஜாடிகளில் வரும் கங்கை நீரை ஒரு வாய் பருகினால் போதும் என்றிருந்தது. கங்கா மாதா குளிர்ச்சியானவள் அல்லவா? அக்பர் தண்ணீர் கேட்பதாக நினைத்து ஏதோ சைகை செய்ததை யாரும் கவனிக்க வில்லை. மந்திரிப் பிரதானிகள் அரசரைச் சந்திக்க வந்து கொண்டிருந்தார்கள். ராஜா மான்சிங் தம்மருகே வந்து வலது கையைத் தொப்பியில் வைத்து அப்படியே குனிந்து கோர்னிஷ் செய்து வணங்கித் தம் இருக்கைக்குச் சென்றது தெரிந்தது. மற்ற பலரும் வந்து விட்டார்கள். ஓஹோ, இன்று அடுத்த பாதுஷா யார் என்று தீர்மானிக்கப் போகிறார்களோ? என்று நினைத்தார் அக்பர். அவரது நினைவுப் பசு நடந்ததையெல்லாம் அசைபோடத் துவங்கியது.
 
இன்று சலீமைத் தவிர வேறு எந்த மகனும் உயிருடன் இல்லை. சலீம் அவர் உண்மையாகவே தவமிருந்து பெற்ற பிள்ளை. பிள்ளை இல்லாக் குறை தீர்க்க, ஆக்ராவில் இருந்து சில மைல்கள் தள்ளி இருக்கும் சிக்ரி குன்றுகளுக்கிடையே ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த சலீம் என்ற ஞானியிடம் பிள்ளை வரம் கேட்க தாம் அந்தப் பொட்டல் காட்டில் கால்நடையாகச் சென்றது அவர் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. ஞானி வரமளித் தார். அந்த ஞானியின் இருப்பிடத்திலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்று மனைவியை சிக்ரிக்கே அனுப்பியதும், பிறந்த குழந்தைக்கு ஞானியின் பெயரையே சூட்டி சலீம், சலீம் என சீராட்டியதும் மனதில் காட்சியாய் ஓடுகிறது. ஆனால் பதிலுக்கு அந்த அருமைப் புதல்வன் என்ன செய்தான்? பெற்ற மனதை தொடர்ந்து நோகடித்துக் கொண்டுதானே இருந்தான்! ஆக்ராவை நோக்கி, தம்மை எதிர்த்தே படை திரட்டி வந்தவன். தமக்குப் போட்டியாக அவனது உருவம் பொறித்த நாணயம் அச்சிட்டு, அதை வேண்டுமென்றே இங்கு அனுப்பிய ஆணவக்காரன். எல்லாவற்றிற்கும் மேலாக அவனது கொடூரங்களை, தவறுகளை எம்மிடம் கூறியதற்காக எம் ஆருயிர் நண்பன் அபுல் பசலை ஆள் வைத்துக் கொன்றவன். அன்றே அவனைக் கொன்றிருந்தால் இன்று இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. அபுல் பசலை நினைத்த மாத்திரத்தில் அக்பரது மூடிய கண்களில் நீர் கசிந்து அவரது நீண்ட கண்ணிமைகளை நனைத்தது. எப்படிப்பட்ட ஞானி! அறிவாளி! படைப்பாளி! வரலாற்றாளன்! இரண்டாவது தலைமுறையாக அரசசேவையில் தன்னை அர்ப்பணித்தக் கொண்ட குடும்பம். எழுதப் படிக்கத் தெரியாத எமக்கு அவன்தானே எழுத்தாணி. அவன் இல்லாவிட்டால் நாம் ராமாயணத்தையும், பாரதத்தையும், குரானையும், மீராவின் பாடல்களையும் எப்படி அறிவோம்? இந்தத் தற்குறியை ஓரளவு அறிவாளியாக மாற்றியது அவன்தான். அக்பர் நாமா, அயினி அக்பர் மூலம் எமது பெயரை சூரியசந்திரர் உள்ளளவும் நிலைக்குமாறு செய்தவன் அவன்தான். தக்காணத்தில் ஆளுனராக இருந்த அவனை ஒரு கொலைகாரப் படையை அனுப்பிக்  கொன்று விட்டானே இந்த சலீம். வெட்டப்பட்ட தலையை தன் மடியில் வைத்து  அழகு பார்த்தானாம் அந்தக் கல் நெஞ்சுக்காரன். வேண்டாதவர்களை வெட்டிச் சாய்ப்பது முகலாயர்களுக்கு பெரிய விஷய மில்லை. தன் ரத்தத்தையே பாலாக ஊட்டி வளர்த்த மாகம் அனகாவின் மகன் ஆதம்கானை நாம் மாடியில் இருந்து வீசி எறிந்துகொன்றோம். உயிர் இழுத்துக் கொண்டிருந்தது என்று மீண்டும் ஒருமுறை மாடிக்குக் கொண்டு சென்று இரண்டாம் முறை வீசச் செய்தோம்.
 
பைராம் கானையும் பகைத்துள்ளோம். அவன் மனைவி சலீமா பேகத்தை திருமணமும் செய்து கொண்டோம். எனினும் ஒரு எழுத்தாளனுக்கு எதிராக எமது வாள் என்றும் உயர்ந்ததில்லை. எமது பாட்டனார் காலம் தொட்டு எழுத்தை மதிப்பவர்களன்றோ நாம்.இபாதத் கானா கட்ட அபுல் பசல் தான் ஆலோசனை தந்தான். எந்தப் பிரிவைச் சார்ந்தவர் கள் எந்தப் பக்கம் அமர்ந்து விவாதிக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் அனைத்தும் வகுத்ததும் அவன்தான். அப்போதெல்லாம் வியாழக்கிழமை இரவு எப்போது வரும் என்று வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் காத்திருப்போம். சூபி, தத்துவஞானி, பேச்சாளி, நியாயாதிபதி, சன்னி, ஷியா, பிராமணர், ஜதீ, சீயுரா, சார்வாகர், நசரீன், யூதர், சாபீ, ஜொராஷ்டிரியன் என்று எத்தனை விதமான பிரிவுகள்! என்னென்ன விதமான வாதங் கள்! சமணத் தலைவர் விஜயசென் சூரிக்கும், ராஜா ராம்தாசுக்கும் நடந்த வாதத்தில்தான் எப்படி அனல் பறந்தது! பசல்தான் வாதத்தை சுமூகமாக முடித்து வைத்தான். அன்றிலிருந்துதான் நாமும் சுத்த  சைவமாக மாறினோம். இப்படி வாதங்கள் நடக்கும் போதெல்லாம் பசல் உற்சாகமாகி விடுவான். இப்படிப்பட்ட வாதங்கள் மூலமாகத் தான் கசடிலிருந்து தெளிவான மதுவை எடுக்க முடியும் என்பான் அவன்.
 
Pin It