தோழர் சிஎஸ்பி என எல்லோராலும் அன்புடன் அழைக் கப்பட்ட சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ‘உழைக்கும் வர்க்கம்’ ஏட்டின் வெளியீடாக வெளி வந்துள்ளது. பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி ஆவணப்படுத்தியுள்ள தோழர் என். ராமகிருஷ்ணன் இதை எழுதியிருப்பது மிகவும் பொருத்தமானது.

நவம்பர் 2009ல் சிஎஸ்பி யின் துணைவியார் திரிபுர சுந்தரி அம்மாள் மறைந்தபோது அவரது குடும்பத்தார் ‘அம்மா’ என்ற நினைவு குறிப்புகள் மற்றும் இயக்கச் செய்திகள் அடங்கிய நூலை வெளியிட்ட னர். ஒரு பகுதி செய்திகள் அதில் கிடைத்தாலும் முழுமையான நூலாக இது வெளி வந்துள்ளது நிறைவைத் தருகிறது.

1924ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, எஸ்.எஸ். எல்.சி. படித்து, 1945ல் ஆரணி யில் தபால் தந்தி துறையில் பணி யில் சேர்ந்த சிஎஸ்பி 1957ல் வேலூருக்கு மாறுதல் செய்யப் பட்டார். அங்குதான் அவரது தொழிற்சங்க பணிகள் தீவிர மடைந்தன. கே.ஆர். சுந்தரம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர் களுடன் இணைந்ததாலும், ஜன சக்தி மற்றும் மார்க்சிய நூல்களை கற்றதாலும் தொழிற்சங்க தலை வராகவும், கம்யூனிஸ்ட் இயக்க தலைவராகவும் உயர்ந்தார். தபால்தந்தி ஊழியர்கள், பல் வேறு பகுதிவாரி சங்கங்களில் சிதறிக் கிடந்தனர். 1954ல் ஒன்பது சங்கங்களாக உருவாகி, அவை கள் இணைந்து தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனம் (என்.எப்.பி.டி.இ) உருவாக்கப் பட்டது. தில்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிஎஸ்பி கலந்து கொண்டார். தமிழகத்தில் இந்த அமைப்பை கட்டி வளர்க் கும் முன்னோடித் தலைவராக அவர் விளங்கினார்.

1960 ம் ஆண்டில் தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் ஒன்று பட்ட போராட்டத்தை துவக் கினர். சிஎஸ்பி கைது செய்யப் பட்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். வேலை நீக்கம் செய்யப் பட்டார். அப் போது அவரும், திரிபுரசுந்தரி அம்மாவும் எழுதிய டைரி குறிப்புகள் ஏழு குழந்தை கள் கொண்ட குடும்பத்தின் வறுமை யைப் படம் பிடித்துக் காட்டு கிறது. கண்கள் பனிக்கின்றன.

ஆனாலும் சிஎஸ்பி துவண்டு விடவில்லை. அதே ஆண்டில் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

தபால்தந்தி துறையின் அடி மட்ட ஊழியர்களான இ.டி. பிரிவினர் முதல் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க நடவடிக் கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அரசு ஊழியர் கங்காதரன், ராகவேந்திரன், ரங்கநாதன், டி.கோபால கிருஷ் ணன், என்.கோபால கிருஷ்ணன், சுதாகரன், அபி மன்யு, மாணிக்க மூர்த்தி, செல்லப்பா, சாவித்திரி யம்மாள் போன்ற அன்றைய தபால்தந்தி துறை இளம் தலைமுறையினரை வளர்த்தெடுத்து தலைவராக்கிய பெருமை சிஎஸ்பிக்கு உண்டு. பெரிய குடும்பம், இடைவிடாத பணிகள் இதற்கு மத்தியிலும் நல்லதொரு குடும்பத்தை உருவாக்கிய பெருமை சிஎஸ்பி- திரிபுரசுந்தரி தம்பதியருக்கு உண்டு.

குடும்பம் முழுவதும் இன்று தொழிற்சங்க, சமூக பணி களில் ஈடுபட்டுள்ளனர். ஒரு எடுத்துக்காட்டான குடும்பம், மகன் ரவிசங்கர் தான் காதலித்த பானுவை வீட்டிற்கு அழைத்து வந்து உடன் திருமணம் செய்ய வேண்டிய நிலையை விளக்கிய போது, தயக்கம் இல்லாமல் நடத்தி வைத்தவர் திரிபுரசுந்தரி அம்மாள். இயக்கப் பணிகள் முடித்து தாமதமாக வந்த சிஎஸ்பி, நான் என்ன செய்வே னோ அதை நீ செய்துள் ளாய் என்றார். எத்தகைய குடும்ப ஜன நாயகம்! இசையிலும் கலை இலக்கியத்திலும் அவரது ஈடு பாடு நூலில் ஆங்காங்கே விரவிக்கிடக்கிறது.

அவரது பேச்சாற்றல், வகுப்பு எடுக்கும் திறமை, ஒரு சிறந்த அமைப்பாளராக அவர் ஆற்றிய பணிகள் அனைத்தும் அவரது சக தோழர்கள் மூலம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘உழைக்கும் வர்க்கம்’ என்ற மாத இதழை துவக்கி தன் வாழ் நாள் முழுவதும் அதன் ஆசிரிய ராக இருந்து, ஊழியர்களை சரியான வழியில் ஒற்றுமைப் படுத்தியவர்.

பல்முனைத் திறமைகள் கொண்ட அவர் வாழ்வும் இயக்கப்பணிகளும், அவரது அனுபவங்களும், வெற்றி, தோல்விகளும் பதிவாகியுள்ள இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல்.

வெளியீடு: உழைக்கும் வர்க்கம், 191 / 50, தர்க்கா ரோடு, பல்லாவரம், சென்னை- 600 043.

விலை: ரூ 60.

Pin It