தமிழில் பல திரைப்படங்கள் வந்து இருந்தாலும் ஒரு சில திரைபடங்கள் மட்டும்தான் நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுகிறது. இதற்கு முக்கிய காரணம் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள இயக்குநர்களே. பேராண்மை, அங்காடி தெரு, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய திரைப்படமாக இருக்கிறது.

சமீபத்தில் வெளிமான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் இயக்குநர் சிம்புதேவனுக்கு சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு டி. ஒய். எப். ஐ பண்பாட்டுக் கழக மாநில அமைப்பாளர் தோழர். வேல்முருகன் தலைமை தாங்கினார். தலைமை உரையில் இந்தியாவில் இரண்டு சகோதரர்கள் கையில் சினிமா துறை மாட்டிக்கொண்டுள்ளது. ஒன்று ரிலையன்ஸ் குடும்பத்தினரிடம், இன்னொன்று மாறன் குடும்பத்தினரிடம் இந்த நிலையில் மக்கள் பிரச்சனையை சொல்லி மக்களை சிந்திக்க வைக்கும் படம் வந்துள்ளது என்பதோடு முற்போக்கான கதை ஒன்றை கூறி முடித்தார்.

வரவேற்புரை மாநிலக்குழு உறுப்பினர் தோழர். பெருமாள்சாமி வழங்கினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன் பேசுகையில் பண்பாட்டுக் கழகத்தின் முதல் மாநில நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பல மேடைகள் போட்டு மக்களிடம் உரக்கப் பேசினோம். குறிப்பாக அனுஆயுத ஒப்பந்தம் பற்றி ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் 19 வாக்குகளை விலைக்கி வாங்கி ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் வீழ்ச்சி அடையச் செய்து விட்டனர். படத்தின் இயக்குநர் மிக எளிமையாக மக்களுக்கு இந்த கருத்தை புரிய வைத்துள்ளார்.

ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் செயலை இயல்பாக காட்டியுள்ளது. இதுபோன்ற படங்கள் மூலம் மக்களுக்கு ஏற்படும் உணர்வுகளை ஒன்றுதிரட்டி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கிடையில் இரணியன் திரைப்பட இயக்குநர் ஒரு முறை டி. ஒய். எப். ஐ தலைவர்களை அழைத்து பேசுகையில் ஒரு திரைப்படத்தை சிறந்த திரைப்படமாக ஒடவைப்பதற்கும் அதை முழுமையாக்க டி. ஒய். எப். ஐ சங்கம் நினைத்தால் மட்டும் தான் முடியும் என கூறினார்கள்.

மூவண்ணக்கொடி மேலே அணிந்து இருந்தாலும் நம்மீது அடிமைச்சங்கலி சூழ்ந்து கொண்டு இருக்கிறது. அதை உடைத்தெரிய வேண்டும். இதற்காக பல படிப்பகங்களை உருவாக்கி புத்தங்களை படித்து விவாதித்து மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்றார்.

மாநிலத் தலைவர் எஸ். ஜி. ரமேஷ்பாபு பேசுகின்ற போது, தமிழ்நாட்டில் ஒரு சில சிறந்த திரைப்படங்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஈ, இம்சையரசன் 23ம் புலிகேசி, பேராண்மை, அங்காடிதெரு, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படங்களை எடுத்த இயக்குநர்களை பாராட்டமால் இருக்க முடியாது. ஏனென்றால் கலை மட்டும் தான் எழுச்சியோடு சொல்ல முடியும் என கூறினார். திரை முழுவதும் செம்மை வண்ணம் சூழ்ந்திருந்த காட்சி ஏகாதிபத்திய அரசியலை சொல்லக் கூடியதாக இருந்தது. மேலும் பல நல்ல படங்களை உருவாக்குவதற்கு வித்தாகும். அமெரிக்க நாட்டை கைப்பற்றும் விதம் பொருளாதாரத் தடை ஆகியவற்றையும் புதைந்திருக்கும் விசயங்களையும் எளிமையாகச் சொல்லும் படமாக அமைந்துள்ளது என்றால் இந்த நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் இருந்தாலும் உணர்வு மிக்க நிகழ்ச்சியாக இருக்கிறது. இறுதியாக இயக்குநர்களிடத்தில் தியாதிகள் புகைப்படங்களை திரைப்படங்களில் காண்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து முடித்தார்.

பேராண்மை திரைப்பட இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் பேசுகின்ற போது டி. ஒய். எப். ஐ மேடையில் கிடைக்கும் இந்த பாராட்டு விழா என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும் தேசிய விருதை காட்டிலும் இடதுசாரிகளிடம் பெறும் விருது மிக பெரிய கௌரவும் அவர் ஒரு கமயூனிஸ்ட் என்று வெறுமனே சொல்லிக் கொள்வதை விட செயலில் காட்ட விரும்புவதாக தெரிவித்தார்.

இணை இயக்குநர் விஜய்சங்கர் பேசுகின்ற போது இனிய தோழர்களே என தொடங்கிய பின் சமுதாயத்தை மாற்றக் கூடியவர்கள் உணர்வுள்ள நபர்கள் இளைஞர்கள் மட்டும் தான். அவ்வகையில் திரைப்படங்களில் வரும் பாடல்கள் அனைத்தும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு சில நல்ல பாடல்வரிகளை பாடி முடித்து சென்றார்.

இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் இயக்குநர் சிம்புதேவன் பேசுகின்ற போது வாலிபர் சங்க மேடையில் வரும் உணர்வு ரீதியான கைதட்டலுக்கு கடமைப்பட்டுள்ளதாக கூறினார். உலகில் எந்த விருதையும் விட டி. ஒய். எப். ஐ அளிக்கும் விருது என்பது சொந்த வீட்டு பாராட்டு போல் உயர்ந்ததாக கருதுவதாக கூறினார். சிறுவயதில் மதுரை மேலப் பொன்னகரம் காஸ்ட்ரோ படிப்பகத்தில் டி. ஒய். எப். ஐ சங்கத் தோழர்கள் புத்தக விவாதத்தை பார்த்துள்ளேன். மாற்று பாதைக்கு இட்டுச் சென்றது. இன்று அந்த உணர்வை பதிய வைத்தேன். என் வேலை இயக்குநர் வேலை இதில் என் உணர்வுரீதியான கடமையை செய்வேன் என்றார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தயரிப்பில் பணியாற்றிய திரைப்படத்துறை சார்ந்த முத்துராஜ், ஜெகதீஷ், வெங்கட்மாணிக், ராஜாமுகமது மற்றும் டி. ஒய். எப். ஐ மாநிலத் நிர்வாகிகள். எஸ். பாலா, இல. சண்முகசுந்தரம், லெனின், மீனாட்சி, விஜய்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள். இறுதியாக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்தோஷ் அவர்கள் நன்றியுரை கூறி முடித்தார்.

- டி.வி.மீனாட்சி

Pin It