பொருள் தேடும் பொருட்டாக
பொதுவாழ்வை மாற்றிட்ட
போக்கிரிகள் அதிகாரம்
போக்குவது எக்காலம்!
புத்தகங்கள் நூறிருக்க
பொழுதுகளை தொடர்களிலே
போக்கிடும்நோய் வெகுதூரம்
போவதுதான் எக்காலம்!
பொருள்தேடும் உலகினிலே
அருள்தேடி திரிந்து அவன்
அடியவர்தம் பாதத்தை
பணிவதுதான் எக்காலம்!
அமிழ்தான தமிழிருக்க
ஆங்கிலத்தில் அப்பாவை
அழைக்காமல் மகனிருக்க
நினைப்பதுதான் எக்காலம்!

தியாகு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It