அடிக்கடி நீண்டநேரம் விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், அதிக நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கும் ஏற்படும் புதுவித நோய் டீப் வெயின் துரோம்போசிஸ். இதனை தமிழில் இரத்த உறைதல் நோய் என்று அழைக்கிறார்கள். இந்த நோயால் தற்போது தெற்காசியர்களும் அதிகள வில் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மற்ற மருத்துவ சிகிச்சை முறைகளை விட அக்கு பஞ்சர் என்ற சிகிச்சை முறையில் உரிய தீர்வு காண இயலும். நமது உடலில் உள்ள இரண்டு எதிர் எதிர் சக்திகளும் ஒன்றை ஒன்று நிறைவு பெறும் சமநிலை கெடும் பொழுதுதான் நோய்கள் உண்டாகின்றன. அந்த மர்மப் புள்ளிகளைக் கண்டறிந்து, அவற்றை சிறு ஊசிகள் துணை கொண்டு, மருந்து இல்லாமல் தூண்டி, அவற்றை இயக்க வைத்து, நோயை குண மாக்குவதே அக்குபஞ்சர் சிகிச்சைமுறையாகும்.

இந்த சிகிச்சை முறையில், நோயாளியின் நாடியைப் பரிசோதனை செய்து, நோயின் தன்மையை ஓரிரு நிமிடங்களில், எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஒன்று அல்லது இரண்டு ஊசிகள் தான் போடப்படும். நிச்சயமாக வலியே இருக்காது. ஊசி போடும்போது தோலில் ஏதோ ஒன்று வைக்கப்படுவது போலத்தான் உணர்வீர்கள். ஊசியைச் செருகியதும் சிறிது நேரம் கழித்து அங்கு ஏதோ ஒன்று இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படும். இந்த உணர்வானது

எவ்வளது நேரம் நமக்குத் தெரிகின்றதோ அதுவரை இருக்க வேண்டும். சிலருக்கு 5 முதல் 30 நிமிடங்கள் வரையும் சிலருக்கு அதற்கு மேலும் ஆகலாம். ஓரிரு முறை சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டப் பிறகு நோயின் தீவிரத்திலிருந்து விடுபடுவதை நீங்கள் உணர்வீர்கள்.

60 சதவீதம் முதல் 70 சதவீதம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் வரை வைத்தியம் மேற்கொண்டாலே போதுமானது. மீதமுள்ள நோயின் தீவிரம் தானே மறைந்துவிடும். ஒரு சிலருக்கு, ஆரம்பித்த அன்றே குணம் தெரியும். வெகு சிலருக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து திடீரென்று மாறுதல்கள் தெரிய ஆரம்பிக்கும். இம்முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டால் மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது. ஆனால் நீண்ட நாட்களாகப் பழக்கப்பட்டவர்கள் படிப்படியாக, வைத்தியம் ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நிறுத்தி விடலாம்.

இந்த முறை யிலான சிகிச்சையின்போது நோயாளிக்கு மருத்துவர்கள் பத்தியங்கள் எதனையும் பரிந்துரைப்பதில்லை. மேலும் இந்த சிகிச்சை யினால் பக்க விளைவுகள் ஏற்பட சாத்தியமே கிடை யாது. நோய் குணமாகும். நல்ல விளைவுதான் ஏற்படும். இந்த சிகிச் சை முறை மூலம் எல் லாவிதமான நோய் களையும் குணப்படுத்த முடியும். அதே தருணத்தில், பிறந்த குழந்தை முதல் முதியோர் வரையில் எந்த வயதினருக்கும் இந்த சிகிச் சை பலன் அளிக்கும். குழந்தைகளுக்கு பொதுவாக மஸôஜ் செய்வது ஒன்றே போதுமானது. அவர்களுக்கு ஊசி குத்த வேண்டிய அவசிய மில்லை. அத்துடன் நோயாளி விவரிக்கின்ற பாதிப்பைவிட, மறைந்து கிடக்கிற சிக்கல்களையும் இந்த சிகிச்சையின் மூலம் குணப்படுத்த இயலும். இதுவே இதன் சிறப்பம்சம் என்று கூடச் சொல்லலாம்.

1) அதிகப்படியான தூக்கம் 2) தூக்கத்தின் போது அடிக்கடி கனவுகள் 3) தூங்கி எழும்போது சுறுசுறுப்பின்மை 4) அசதி, தூங்கவேண்டும்போல இருக்கும். ஆனால் படுத்தால் தூக்கம் வராது. 5) சிறு சத்தமும் தூக்கத்தைக் கலைத்து விடும். 6) தூக்கத்தின் நடுவில் முழித்துவிட்டால் திரும்ப தூக்கம் வராது 7) தூங்கி எழுந்ததும் தலைவலி 8) பசியின்மை 9) கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி பசி எடுத்துக்கொண்டே இருத்தல் 10) சாப்பிட்ட தும் வயிறு அடைத்தது போன்று இருத்தல் 11) சாப்பிட்டதும் வயிற்றில் கல்லைப்போட்டது போன்ற உணர்வு 12) சாப்பிட்டதும் மலஜலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு 13) சாப்பிட்டதும் தூக்கம் வருதல் போன்ற நோய் குறிகள் உடனே தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் 5 அல்லது 10 வருடங்களில் குறிப்பிட்ட உறுப்பில் நோயானது வளர்ந்துவிடும். பெரும்பாலானவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மூலம் மன நோயினை குணப்படுத்த இயலுமா? என்ற சந்தேகம் இருக்கிறது. நிச்சயமாக அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மனநோயை குணப்படுத்தமுடியும்.

நன்றாக பசித்திருக்கும் ஒருவருக்கு சாப்பிடுவதற்கு முன் துக்ககரமான செய்தி சொல் லப்பட்டால், உடனே பசி அடங்கி விடுகின்றது. மற்ற உறுப்புகளான இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற அனைத்து உறுப்புகளும் வேலை செய்து கொண்டு இருக்கும்பொழுது, வயிற்றின் இயக்கம் மட்டும் முழுமையாக அடங்கி விடுகின்றது. அதாவது துக்கம், கவலை போன்ற மனக் கஷ்டங்கள், வயிற்றின் இயக்கக் குறைவினால் ஏற்படுகின்றது. இதை போலவே, துக்கம் நெஞ்சை அடைக்கும்.

தேம்பித்தேம்பி அழும்போது நெஞ்சு குலுங்கும். மூச்சுவிட முடியாது. எனவே, துக்கமும், அதிகமாக அழக்கூடிய மனோபாவமும் நுரை யீரல் பலவீனத்தால் ஏற்படுகின்றது. சிறுவர்களைப் பயமுறுத்தினால் சிறுநீர் கழித்துவிடுவார்கள். பயம், சிறுநீரகத்தின் செயல் குறைவினால் ஏற்படக்கூடியது. குடிப்பழக்கம் கல்லீரலைக் கெடுக்கின்றது. குடிபோதையில் இருக்கும் ஒருவரை எளிதில் கோபமுண்டாக்கிவிட முடியும். கோப மனப் பான்மை கல்லீரல் பாதிப்பினால் ஏற்படுகின்றது.

இவ்வாறு ஒருவரின் மன நிலையை வைத்தே அவருடைய நோயின் இருப்பிடத்தை அறிய முடியும். அந்த உறுப்புக்குத் தேவையான சக்தியை அறிந்து, பாதிப்புக்குள்ளான உறுப்பை மீண்டும் பழைய நிலையில் இயங்க வைப்பதன் மூலம் மனக்கஷ்டங்களைக் குணப்படுத்த முடியும்.

எனவே, மனநோய்கள் மூளை சம்பந்தப்பட்டதல்ல. உடல் உறுப்புகளில் சக்தி குறையும்போது மனநிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதுவே ஒரு நோயின் ஆரம்ப நிலை. இந்த நிலையிலேயே, பிற்காலத்தில் ஒரு உறுப்பில் ஏற்படக்கூடிய நோயை இன்றே தவிர்த்துவிட முடியும்

-Dr. ந. சபீர் அப்துல்லா, காரைக்குடி.

Pin It