அக்குபங்சர் மருத்துவம் மிக எளிமையானது, பக்க விளைவில்லாதது, பாதுகாப்பானது தான், என்றாலும் உயிரோடு தொடர்புடைய ஒரு பணி என்பதால் நாம் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. இக்கண்ணோட்டத்தின் அடிப்படையிலே உலக சுகாதார நிறுவனம் அக்குபஞ்சர் பயிற்சியை பாதுகாப்பாக மேற்கொள்வது பற்றிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு

ஒவ்வொரு அக்குபங்சர் பயிற்சியாளரும் கீழ்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் அவசியம்.

 • - பணிச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல்
 • - கைகளை தூய்மையாக வைத்திருத்தல்
 • - குத்தப்போகும் அக்கு புள்ளியை ஸ்பிரிட் கொண்டு தயார் படுத்துதல்.
 • - உரிய வகையில் பாதுகாக்கப்பட்ட குறைபாடில்லாத ஊசி மற்றும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
 • - பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் பஞ்சு ஆகிய கழிவுகளை கவனமாய் துப்புரவு படுத்த வேண்டும்.
 • கர்ப்பமுற்ற பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சையளித்தலை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
 • மருந்து சார்ந்த முதலுதவி மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் அவசர நேரங்களில் அக்குபங்சர் சிகிச்சையளித்தல் பலனளிக்காது.
 • புற்று கட்டிகள் மற்றும் கேடு விளைவிக்கும் அழுகிய கட்டிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை தனித்து உதவாது. மேலும் அத்தகைய கட்டியுள்ள பகுதிகளில் உள்ள அக்கு புள்ளிகளில் ஊசி செருகுதலை தவிர்க்க வேண்டும்.
 • கடும் இரத்தப்போக்கு, இரத்தத் தேக்கம் உள்ள நோயாளிகள், இரத்த உறைவை உருவாக் கும் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் மற்றும் இரத்த உறைவு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஊசி குத்துதலை தவிர்க்க வேண்டும்.
 • துருப்பிடிக்காத இரும்பு அல்லது வேறு வகையான உலோகங்கள் என எதில் தயாரிக்கப் பட்ட ஊசியினாலும் அதனை பயன்படுத்தும் முன் கவனமாக பரிசீலிக்க வேண்டும். வளைந்த ஊசி, கொக்கி போன்ற முனையுடைய ஊசி, முனை மழுங்கிய ஊசி, சேத மடைந்த ஊசி போன்றவை கேடு விளைவிப்பவை. அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
 • ஊசி ஏற்றுவதற்கு முன் நோயாளியை அவருக்கு வசதியானவாறு இருக்கச்செய்ய வேண்டும். சிகிச்சையளிக்கும் போது இருக்கும் நிலையை துயரர் மாற்றிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • முதல் முறையாக அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளியை கிடை நிலையில் மென்மையாகவும், திறமையாகவும் கையாள வேண்டும். சில நேரங்களில் மயக்க உணர்வு ஏற்படலாம் என்பதை முன்னதாகவே தெரிவித்திட வேண்டும். ஊசி ஏற்றிய பின் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனித்து வர வேண்டும். நாடி பரிசோதனை அடிக்கடி செய்து வர வேண்டும்.
 • ஊசியேற்றும் போது மயக்கம், கிறுகிறுப்பு, அசௌகரியம். பலவீனம், பசி, வாந்தி, குமட்டல், படபடப்பு, குளிர், குளிர்ந்த வியர்வை போன்றவை ஏற்பட்டால் அவை எச்சரிக்கை குறிகளாகும். எச்சரிக்கை குறிகள் ஏற்பட்டால் உடனடியாக ஊசியை நீக்கி விட்டு கால் நீட்டி கிடைநிலையில் படுக்க வைக்க வேண்டும் சமநிலைக்கு சற்று தலையை தாழ்த்தி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் வெதுவெதுப்பான இனிப்பு பானங்கள் அருந்தச்செய்யலாம். அவசியமெனில் சூழலுக்கேற்ப CV6, P6, DU20 ஆகிய புள்ளிகளை கையாளலாம்.
 • அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் அனைத்தும் நோயாளிகளிடமும் வலிப்பு வந்ததுண்டா என விசாரித்தறிய வேண்டும். ஊசி ஏற்றும் போது வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக வேறு மருத்துவ முறைக்கு மாற்றிட வேண்டும்.
 • திறமையான ஊசியேற்றலில் பெரும்பாலும் நோயாளிகள் வலியை உணர்வதில்லை. ஊசி யேற்றிய புள்ளியில் லேசான வலி, கூச்சம் மதமதப்பு கனத்த உணர்வு ஏற்பட்டால் ஆற்றல் தூண்டப்பட்டு நன்கு வினைபுரிகிறது என பொருள். ஊசியேற்றிய பின் கடு கடுக்கும் ஊசியை நீக்கிவிட்டு சரியான புள்ளியில் குத்த வேண்டும். ஊசியை நீக்கிய பின், புள்ளிகளில் லேசாக அழுத்துதல் அவசியம்.
 • அக்குபங்சர் என்பது ஊசியேற்றுதல் மட்டமல்ல.
 • அக்குபங்சர் - எலக்ட்ரோ - அக்குபங்சர், லேசர் அக்குபங்சர், மாக்ஸிபஸன், கப்பிங், ஸ்கிராபிங் மற்றும் காந்த சிகிச்சை ஆகியவையும் அடங்கும்.
 • குழந்தைகளின் உச்சிகுழி, புற பிறப்பு உறுப்புகள், மார்பு காம்பு, தொப்புள் மற்றும் கண்மணிகளில் கண்டிப்பாக ஊசியேற்றக் கூடாது.
 • இந்த எச்சரிக்கை குறிப்புகளையும், அக்குபங்சர் நிபுணர்களின் அனுபவ ஆலோசனை களையும் கவனத்தில் கொண்டு செயல்படும் அக்குபங்சர் பயிற்சியாளருக்கு தோல்வி என்பதே இல்லை.
Pin It