நெடுநடைப் பயணத்தின் தொடர்ச்சியாகக் குறுநடைப் பயணம். சரியாகச் சொன்னால், குறுநடைப் பயணங்கள்! அதே முழக்கங்கள்: தமிழ் உரிமை! தமிழர் இன உரிமை! தமிழ் மக்கள் வாழ்வுரிமை! பழைய கோரிக்கைகளோடு பயணம் பட்டறிவால் பெறப்பட்டவையும் பயணப் பரப்பு சார்ந்தவையுமான புதிய கோரிக்கைகள் தமிழ் மீட்பு தமிழர் மீட்புச் சிந்தனைப் பரவல்! தமிழ் மீட்பு நிதிய இலக்கான ஒரு கோடி நோக்கிய தொடர் முயற்சி!

முதல் குறுநடைப் பயணம் ஈரோடு மாவட்டத்தில் வருகிற 28.04.2010இல் புறப்பட்டு ஈரோடு மாவட்டமெங்கும் சற்றொப்ப 300 கிலோமீட்டர் 13 நாள் நடந்து 10.05.2010இல் ஈரோட்டில் நிறைவடைகிறது. பயணத் தலைவர்: தோழர் மு. மோகன்ராசு, ததேவிஇ ஈரோடு மாவட்டச் செயலாளர்.

அடுத்தடுத்து முகவை - மதுரை மாவட்டங்களிலும், திருப்ப+ர், கோவை, கரூர் மாவட்டங்களிலும் குறுநடைப் பயணத்துக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. நீங்களும் நடக்கலாம். உங்கள் பகுதிக்கு அழைத்தும் நடக்கச் செய்யலாம். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்!

நன்றியும் வேண்டுகோளும்

தமிழ் மீட்பு நிதியத்திற்குப் பங்களிக்க வேண்டி தமிழகமெங்கும் - ஏன் உலக அளவிலும் கூட - தமிழன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். தோழர் கோ. நடராசன் அவர்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தலாம் என்று தெரிவித்திருந்தோம். அவ்வாறு பலரும் பணம் செலுத்திய போதிலும், செலுத்தியவர் பெயர், தொகை, நாள் ஆகிய செய்திகள் தெளிவாகத் தெரியவில்லை. இவ்விதம் பணம் செலுத்திய அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் போதே, மேற்கண்ட செய்திகளை விரைவில் தொலைபேசி அல்லது மடல் வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

தியாகு

92831 10603

Pin It