கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை எவ்வளவு அதிகரிக்கவேண்டும்? இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்?

கர்ப்பிணிப் பெண்ணின் எடை சாதாரண மாக கர்ப்ப காலத்தில் ஒண்பதில் இருந்து பதிமூன்று கிலோ வரை கூடுதலாகும். முதல் மூன்று மாதங்களில் உடல் எடை குறையலாம். பிறகு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்லும். மாதத்துக்கு இரண்டு கிலோ அதிகமாகும். வாரத்திற்கு ஒரு கிலோ அதிகமானா லோ உடல் எடை குறைந் தாலோ உடனே மருத்து வரை அணுக வேண்டும். இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்யும் போது, சாதாரணமாக இருபத்தைந்து வயதுப் பெண்ணுக்கு 120/80 இருக்க லாம். நான்கு மாதங் களுக்குப் பிறகு 130/90 வரை இருக்கலாம். ஆனால், தொடர்ந்து 130/90க்கு மேல் அதிகமாக இருந்தால், உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு பிரசவ ஜன்னி ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? இதனால் கர்ப்பிணிக்கும், கருவுக்கும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

இதில் குறிப்பிடத்தகுந்த திட்டவட்டமான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆயினும், கூடிய வரையில் கர்ப்பம் ஆன நிலையில இது அளவோடு இருப்பது நல்லது. பொதுவாக, கர்ப்பம் ஆரம்பமான நிலையில் அதாவது பத்து வாரங்கள் வரையில் இந்த உறவு ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். இல்லையெனில், குறைப் பிரசவம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதற்குப் பிறகு ஏழாவது மாதம் வரையில் அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப தாம்பத்திய உறவு கொள்ளலாம்.

கர்ப்பத்துக்குப் பிறகு பெண் உறுப்பு ஓரளவு திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆகையால் தாம்பத்திய உறவை இந்த நிலையில் அடியோடு நிறுத்துவது நல்லது. இந்த அடிப்படையில்தான் தாய்மைஅடைந்த பெண்களை ஏழாவது மாதத்திலேயே பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.

‘D’ அண்ட் ‘C’ செய்து கொண்டால் பிறகு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டாகுமா? கருப்பை தொற்றால் ஏதேனும் பாதிப்பு உண்டா?

ஒரு பெண் முதன் முதலாக உண்டாகும் தனது கர்ப்பத்தை டி அண்டு சி செய்துவிட்டால் அடுத்து அவளுக்கு கர்ப்பமே உண்டாகாது என்பது விஞ்ஞான பூர்வமாக உண்மையில்லை. ஆனால், சில சமயங்களில் அப்படி நேர்ந்து விடுவது உண்டு. டி அண்டு சி செய்த பிறகு கருப்பையில் நோய் தொற்று ஏற்பட்டாலோ? கருப்பையின் உட்சுவரில் வடு ஏற்பட்டதாலோ கர்ப்பம் தரிக்க வாய்ப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால், இன்றைய நவீன மருத்துவத் துறையில் இந்த எல்லாக் குறைகளையும் அகற்றி குணப்படுத்த வழிமுறைகள் உள்ளன. ஆகவே, அவளுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை நவீன மருத்துவ வசதிகளால் அதிகரிக்க முடியும்.

பிரசவமான பிறகு கருப்பையில் இருந்து நஞ்சு வெளியேறும்போது, தொற்றுநோய் வருமா? இதற்கு என்ன பெயர்? இதற்கு மருத்துவரை அணுகலாமா?

பிரசவமானதும் கருப்பையில் இருந்து நஞ்சு பிரிந்து வந்த இடத்தில் இரத்தம் சளி கலந்து வெளியேறுகிறது. இதை லோசியா என்கிறோம். சரியாக இதைக் கவனிக்காவிட்டால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. முதல் நான்கு நாட்களுக்கு லோசியா சிவப்பாக இரத்தம் கலந்ததாக இருக்கலாம். தினமும் இரண்டு முதல் நான்கு அவுன்ஸ் வெளியேறலாம். ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் வரை லோசியா பின்க் கலராக அல்லது பிரவுன் கலராக இருக்கலாம். இது இரத்தம் குறைவாகவும், குறைந்த அளவிலும் இருக்கும்.

ஏழு நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். இது ஒருவருக்கொருவர் வேறுபடலாம். நடைமுறையில் பார்க்கும்போது இயல்பாகவே இருக்கும் தாய் முதல் நாள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை Diaper ஐ மாற்றுவாள். இரண்டு, மூன்றாவது, நான்காவது நாட்களில் குறைந்து காணப்படலாம். அதற்குப்பிறகு நான்கு மணி நேரத்தில் பஞ்சில கறை மட்டுமே காணப்படும். லோசியாவில் ஒருவித இரத்தவாடை அடிக்கலாம். ஆனால் துர்நாற்றம் ஏதும் இருக்கக்கூடாது. அப்படி ஏதேனும் இருந்தால் நோய் தொற்றாக இருக்கலாம். இவர்கள் மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது.

குழந்தை பிறந்தவுடன் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும்? பால் குடிக்கலாமா?

குழந்தை பிறந்தவுடன் எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ளவேண்டும். தான் கர்ப்பமாக இருந்தபோது, எப்படி நல்ல சத்துள்ள உணவை கூட்டிக் கொண்டாளோ அதே போல் தொடர வேண்டிய உணவு என்று சொல்லும் போது முடிந்தவரை பால் நிச்சயம் குடிக்க வேண்டும். நிறைய காய்கறிகள், கீரைகள், பழவகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டும். மருத்துவ ஆலோசனையின்படி உணவுக்கட்டுப்பாடு எதும் இல்லையெனில் சத்துணவை உட்கொள்வதன் மூலம் பழையபடி நல்ல உடல்நிலைக்குத் திரும்ப முடியும்.

ஸ்கேன் செய்வதால் குழந்தையின் வளர்ச்சி கர்ப்பப்பையில் பாதிக்கப்படுமா? எப்படி, எவ்வாறு ஸ்கேன் எடுப்பது? இதனால் ஏற்படும் பயன்கள் என் னென்ன?

கண்டிப்பாகக் கிடையாது. அல்ட்ரா சவுண்டு மூலம் குழந்தை நன்றாக வளர்ந்துள்ளதா? ஏதேனும் குறையிருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடிகிறது. ஸ்கேனில் பார்க்கும் போது குழந்தை யின் வளர்ச்சி மாதா மாதம் அதிகரிப்பது நமக்கு தெரியவரும். சாதாரணமாக பதினெட்டில் இருந்து இருபத்து நான்கு வாரத்திற்கு ஒரு ஸ்கேனும், முப்பத்தாறாவது வாரத்தில் ஒரு ஸ்கேனும் எடுப்பார்கள்.  சாதாரண கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும்தான். சிக்கலான பெண்களுக்கு அடிக்கடி தொடர்ந்து ஸ்கேன் செய்ய வேண்டி வரும். ஸ்கேன் மூலம் குழந்தை பெரியதாகிறதா, நேராக இருக்கிறதா குறுக்கு வாட்டத்தில் இருக்கிறதா? சிசு எப்படி உள்ளது. குழந்தைக்கு இரத்தஓட்டம் சரியாக உள்ளதா? குழந்தையைச் சுற்றி உள்ளநீர் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட்டு ஸ்கேன் மூலம் எழுபத்தைந்து சதவீதம் பெண்களின் குறைபாடுகளை கண்டுபிடித்து சிகிச்சை பெறமுடியும்.

நரம்புத்தளர்ச்சி என்பது ஆணுக்கு மட்டுமே வரக்கூடியதா? பெண்ணுக்கு நரம்புத்தளர்ச்சி வருமா? நரம்புத்தளர்ச்சிக்கு என்ன காரணம்? அதிர்ச்சியால் நரம்புத்தளர்ச்சி வருமா?

நரம்புத்தளர்ச்சி என்பது ஆண், பெண் இருவருக்குமே ஏற்படக்கூடிய ஓர் பலவீனமாகும். இது ஆண்களுக்கு ஏற்படின் ஆண்மைக் குறைவு எனவும், பெண்களுக்கு ஏற்படின் வெள்ளைப் படுதல் எனவும் கூறுகிறோம். இவ்விரு பாலருக் கும் இந்த குறைபாடு எந்த வயதிலும் ஏற்படலாம். விபத்துக்கள், மரபுக் கோளாறுகள் மற்றும் சரியான உணவுப் பழக்க வழக்கம் இல்லாமை ஆகியவற்றால் நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது..

நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவுகள் - இவற்றின் பாதிப்புகள் எப்படி இருக்கும்? இவற்றின் முக்கியமான அறிகுறிகள் என்னென்ன? நரம்புத் தளர்ச்சி நீங்க மருந்துகள் என்னென்ன?

நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கி றோம். இதனால் வீட்டில் மக்கட்செல்வம் இல்லா மலும் போய்விடும். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

1.     நல்ல குணமும், நலமும் மனமும் இல்லாமல் மனதில் அமைதி இல்லாதவர்கள்.

2.     நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடம் பழுதடைந்து விடுதல்.

3.     குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் வழக்கம்.

4.     காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிக அதிக அளவு சேர்த்துக் கொள்ளுதல்.

5.     இரவில் தேவைக்கும் அதிகமாக உணவை உட்கொள்வது.

6.     விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு      அதனால் சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சி ஏற்படலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கீழேயுள்ள அறிகுறிகளைக் கொண்டு நரம்புத் தளர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.

அ. தாம்பத்திய உறவின்போது ஆணுறுப்பு விரைவில் துவண்டு விடுதல்.

ஆ.   விரைப்பு இருந்த போதிலும் விந்து வெளியேறி விடுவது.

இ.   விந்து வெளியேறாமலேயே இருப்பது.

இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். ஆனாலும் இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே அஸ்தமனமாகிவிட்டது என்று தவறாகப் புலம்பக் கூடாது. குடிப்பழக்கம் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீர் குளியல் செய்யலாம். ஒரே வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்தாருடன் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மனதை வேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம், மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலான நரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.

ஒரு பெண்ணுக்கு வெள்ளைப்படுதல் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது? இழ்ன் அறிகுறிகள் என்னென்ன? இதனால் பெண் உறுப்பு எப்படி பாதிக்கப்படும்?

பொதுவாக பெண்களின் கருப்பையானது வலுவிழந்து பலவீனமடையும் காலங்களில் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. இளம் வயது முதல் முதிய வயது வரை எந்த வயதிலும் இது பெண்களைத் தாக்கலாம். உறுப்பில் இருந்து மிகுந்த வலியுடன் துர்நாற்றத்துடன் ஒரு வித திரவம் வெளியேறுவதையே வெள்ளைப்படுதல் என்கிறோம். இரு ஒரு பெண்ணைத் தாக்கியுள்ளது என்பதை பின்வரும் அறிகுறிகளால் அறிந்து கொள்ளலாம்.

1.     உறுப்பில் இருந்து கெட்ட வாடையுடன் வரும் திரவம்.

2.     இரத்தம் கலந்த திரவம்.

3.     இந்த சமயத்தில் இடுப்பு, அடி வயிறு மற்றும் காலில் வலி ஏற்படுதல்.

4.     உடல் எடை குறைந்து மெலிதல்.

5.     சிறுநீரக எரிச்சல்

6.     களைப்பு ஏற்படுதல்

7.     உறுப்பில் நமைச்சல், எரிச்சல் மற்றும் புண் ஏற்படுதல்.

பால்வினை நோயால் வெள்ளைப்படுமா? இதனால் நரம்புகள் பாதிப்படையுமா? வெள்ளைப்படுவதால் குழந்தையில்லாமல் போகுமா?

கருப்பையின் வாயில் புண் இருப்பவர்களுக்கும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்ளும்போது கருப்பை புண், கருப்பையில் கட்டி அல்லது தசை வளர்ச்சி, டி.பி. புற்று நோய் மற்றும் நுண் கிருமிகளால் கருப்பை பாதிக்கப்படல், மாதவிலக்குக் காலங்களில் பயன்படுத்தப்படும் பருத்திதுணிகள் பெண்ணுறுப்பினுள் தங்கி விடுதல் போன்ற காரணங்களாலும் வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.

இதனால் நரம்புகள் விரிவடைந்து கருப்பை மீதுபட்டு வலுவிழந்து விடும். வெள்ளைப்படுதலால் கரு முட்டைகள் கருப்பையைச் சென்று அடையாமல் வெளியேறுகிறது. ஆகவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டோர் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் ஏற்படுவதில்லை. குழந்தை பாக்கியம் பெரும்நிலையும் இல்லாமல் மன வேதனைதான் மிஞ்சும். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தப்பித்தவறி கருவுற்றாலும் கரு முழுமை பெறும் என்று முடியாது.

-டாக்டர். ப.உ.லெனின. M.D.(Homeo), புதுச்சேரி.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)  
Pin It