தலை கலைந்து
ஏனோதானோவென ஆடையணிந்து
நான் நடமாடிய என் வீட்டுக்குள்
எல்லோரும் சோம்பலாயுறங்கும்
விடிகாலைப்பொழுதுகளிலெழுந்து
நடுங்கிட வைக்கும் குளிரிலும் நீராடி
உன்னை நினைத்துக்கொண்டே
அழகழகாக உடுத்திக் கொள்கிறேன்
வீட்டுக்குள்ளும்
அப்படியே அங்குமிங்கும்
மிடுக்காக உலாப்போகிறேன்

அலங்கோலமானவொரு
சிலையென இருந்து
உன் நினைவில் பைத்தியமாகி
கிடக்கிறேனென்பது போன்ற
பழிச்சொற்களால் யாருமுன்னை
பல்லோடு நாக்குரச
பேசிடக் கூடாதென
என்னவெல்லாம் நான்
செய்யவேண்டியிருக்கிறது பார்

- எம்.ரிஷான் ஷெரீப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It