புத்துணர்ச்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்துவரும் வழக்கம். தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது மூன்று வகைகள் ஆகும்.
1. கிரீன் டீ
2. ஊலாங்
3. பிளாக் டீ
கிரீன் டீ “கேமிலியாசைனன்ஸிஸ்” எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது. கிரீன் டீ யில் ஆறுவிதமான பாலிஃபீனால்கள் உள்ளன. அவைகள்.
1. எபிகேட்சின்
2. கேலோகேட்சின்
3. கேட்சின்
4. எபிகேட்சின் கேலட்
5. எபிகேட்சின்கேலோகேட்சின்
6. எபிகேலோ கேட்சின்
மேலும் கேஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற ஆல்கலாய்டுகளும் உள்ளன. இவைகள் மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுமட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் சஞ்சீவிகளாக உள்ளன. கிரீன் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்படுவது ஆகும்.
விஞ்ஞானிகளின் சில பரிந்துரைகள் :
வாழ்நாளை அதிகப்படுத்த ... இளமை நீடிக்க ...
கிரீன் டீயில் அதிகமாக காணப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையும் ஆரோக்கியத்தையும் நீடிக்கச்செய்கிறது.
உடல் எடையை குறைக்க ...
உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையைச் சமச்சீராக பராமரிக்கிறது.
நினைவுத்திறன் அதிகப்படுத்த ...
கிரீன் டீயில் உள்ள எபிகேலோ கேட்சின் மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது.
புற்றுநோய்களுடன் போராடுகிறது ...
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்று நோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது. தீங்கிழைக்கும் என்சைம்களின் வளர்ச்சியை தடுத்து ரத்தப்புற்று, நுரையீரல் புற்று, தொண்டை புற்று, வயிறு, குடல், ஈரல் புற்று மற்றும் மார்பகப்புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது.
சர்க்கரை நோயை குறைக்க ...
கிரீன் டீயில் உள்ள தியோபிளவின்கள் இரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து குளுகோஸ் வினையை ஊக்கப்படுத்துகிறது.
தோல் பாதுகாப்பு .
முகப்பரு, வறண்ட சருமம், சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது.
இரத்த அழுத்தம், பக்கவாதம் அல்சைமர் போன்றவற்றை தவிர்க்கிறது. எலும்புகள் பலமடையவும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது.
மனஅமைதிக்கு ...
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் மனஇறுக்கத்தை போக்கி மூளையில் ஆல்பா அலைகளை தூண்டிமனதுக்கு அமைதியை தருகிறது.
(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)