கீற்றில் தேட...

காரட்

ஐரோப்பா, வடக்கு ஆசியா, அபிசீனியா, வடக்கு ஆப்பிரிக்கா, காஷ்மீர் பகுதிகளில் காரட் விளைந்ததாக வரலாறு உள்ளது. இன்று உலகம் முழுவதும் முழுக்க எல்லா இடங்களிலும் காரட் விளைகிறது. காரட் வேர் உள்ள கிழங்கு வகை யாகும். ஒரு அடி நீளம் உள்ள காரட்டுகளும் உண்டு. தில்லி காரட்டுகள் நன்றாகவும், சுவையாக வும் இருக்கும்.

காரட் லேசான இனிப்பும், பசியைத் தூண்டுவதாகவும், நீர் இளக்கியாகவும் செயல் படும் தன்மையும் கொண்டது. பவுத்திரத்துக்கும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லை களுக்கும் மருத்துவ ரீதியான பலன்களைத் தந்து உதவுகிறது. இருமலைப் போக்கும். இதை மிக அதிகமாகத் தின்றால் பித்தமாகும்.

வைட்டமின் சி, வைட்டமின் டி, நியாசின், பைரிடாக்சின், ஃபோலிக் அமிலம், பயாடின், பென்டோதினிக் அமிலம் மற்றும் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், தாமிரச்சத்துக்களும் காரட்டில் குறைந்த அளவு உள்ளன.

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரி மானம் ஆகக் கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு நாளைக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். உருளைக் கிழங்கை விட ஆறுமடங்கு கால்சியம் காரட்டில் உள்ளது. வளரும் குழந்தைகள் தினமும் காரட் சாறு குடித்தால் அது முழுமையான உணவாகும். கால்சியம் மற்றும் கரோட்டின் சத்துக்கள் நிறைய உள்ளன. கரோட்டீனை, கல்லீரல் வைட்டமின் ஏ-ஆக மாற்றிச் சேமித்துக் கொள்கிறது.

மருத்துவப் பயன்கள் :

காரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும், சிறிதளவு உப்பு சேர்த்து காரட் சீவலுடன் சாப்பிட்டால் எக்சீமா குணமாகும். கண்களின் நலத்தைக் காப்பதில் காரட்டிற்கு ஈடில்லை. டோகோகிளின் என்கிற ஹார்மோன் காரட்டில் உள்ளது. இன்சுலின் போன்றதான இது, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய்க் கழகம், 1962 வாக்கில் தேசிய இதய, நுரையீரல், ரத்தக் கழகங்களுடன் இணைந்து நாடு தழுவிய மருத்துவப் பரிசோதனை இயக்கம் ஒன்றை நடத்தியது. 22,000 அமெரிக்கவாசிகளுக்கு காரட்டுகளையும், பச்சைக் காய்கறிகளையும் கோடி ரூபாய்களை இதற்காக அமெரிக்க அரசாங்கம் செலவழித்தது.

மேலும், ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர். மெட்சினிகோப் என்பவரது ஆய்வுப்படி, காரட்டுக்கு கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உள்ளதாக மருத்துவ உலகம் அறிந்து கொண்டது. காரட் கெட்ட பாக்டீரியாக்களை, குடல்களி லிருந்து அழித்து வெளியேற்றுகிறது. குடல் நோய்களிலிருந்து காரட் சாறு காக்கிறது. குணமாக்குகிறது. குடல் புண்ணை ஆற்றுகிறது.

சிறுநீரகக் கோளாறுகளில், குறிப்பாக நெப்ரிடிஸ் கோளாறுகளின் போது காரட் சாறு தரலாம். ஏனெனில் காரட் நல்ல நீரிளக்கி, சிறுநீர் சரியாகப் போகாதவர்களும் காரட் ஜுஸ் குடிக்க வேண்டும். உடலிலுள்ள தேவையற்ற யூரிக் அமிலத்தை காரட் வெளியேற்றுவதால், மூட்டுவலி, கீல்வாத நோய்கள் குணமாக உதவுகிறது. பித்தப்பைக் கற்களைக் கரைப்பதுடன், கல்லீரல் கோளாறுகள், நெஞ்சக நோய்கள், சரியாகவும் ரத்தம் வெளியேறாத மாதவிலக்கு ஆகியவற்றுக்கும் காரட் உண்பது நோயை குணப்படுத்தும் சிறந்த வழியாகும். காரட்டில் அதிகமாக வைட்டமின் ஈ உள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இந்த வைட்டமின் ஈ உடலுக்கும் மிகவும் நலம் பயக்கக்கூடியது என்று பிரபல சத்துணவு நிபுணர்கள் கருதுகிறார்கள். இது மலட்டுத் தன்மையைப் போக்க மிகவும் உதவுகிறதாம். புற்றுநோய் செல்களை ரத்தத்தில் உயிர்வாழாமல் செய்கிறது. இந்த வைட்டமின் ஈ, புற்றுநோய் வராமலும் காக்கிறது என்று விலங்குகளுக்கு அதிக அளவு உணவாகக் காரட்டைக் கொடுத்து கண்டறிந்துள்ளார்கள். இது மனிதர்களுக்கும் பொருந்துகிறது என்றும் நிச்சயம் தினம் ஒரு காரட், புற்றுநோயை அண்டவிடாது என்றும் இயற்கை மருத்துவ உலகம் உறுதிபடக் கூறுகிறது.

தேங்காய்

வரலாற்றில் முதல்வகை தேங்காய் விளைந்த இடமாக அறியப்பட்டது இந்தியக் கடலோரம் மற்றும் பசிபிக் கடல் பகுதிகள்தான். இன்று உலகம் முழுக்கத் தேங்காய் விளைவிக்கப்படுகிறது.

தாகத்தை அடக்கி, சிறுநீரின் நிறத்தை இயல்பாக்கி, நீர் இளக்கித் தன்மையுடன் உள்ள இளநீரில் சத்துக்கள் பல உள்ளன. தேங்காய்க்குள் பருப்பு வராத சமயத்திலுள்ள நீர் சற்றே கசப்பு அல்லது ருசியின்றி லேசாக உப்புக் கரித்துக் கொண்டிருக்கும். பருப்பு வரத் தொடங்கியதும், வழுக்கையாகும் தருணத்தில் நீர் இனிப்பாக, இளநீராகும். இந்த இளநீரில் உள்ள சர்க்கரை உடனடியாக உறிஞ்சப்பட்டத் தக்கது. சுத்தமானது, கிருமிகள் அற்றது.

மருத்துவப் பயன்கள் :

சிறுநீரகக் கோளாறுகளுக்கும், சிறுநீரகக் கற்கள் பிரச்சினைக்கும், இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இளநீர் மிக நல்ல நீரிளக்கி ஆக இருப்பதுதான். காலராவுக்கு சிகிச்சையளிக்கும்போது இளநீர் அருந்துவது பயன்தரும். காலராவின்போது, வாந்தி பேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே, முக்கியமான தாது உப்புக்களும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கும் ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புக்களையும் சேர்க்கும். மேலும், இளநீர் நோய்க்கிருமி எதிர்ப்புச் சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றவும் செய்யும். ஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியத்தை உடலில் ஏற்றுவதைவிட இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது என்று வெப்ப நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இளநீரிலுள்ள வைட்டமின் பி கலவைச் சத்து இதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல்துடிப்போடு சீராக்கும்.

வெள்ளரி

வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும், இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரி ளக்கி, செரிமானத்திற்கு உதவுவது. தன்வந்திரி நிகண்டு காரா கூறுகிறது. இப்படி வெள்ளரிப் பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை ஊட்டுகிறது. சிறுநீரகக் கோளாறு களைச் சரி செய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்து கிறது. தலைச்சுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின் படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப் பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறியாகும்.  பொதுவாக, வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கித் தின்பர். ஆனால், வெள்ளரியைச் சாறாக பயன்படுத்தும் பொழுது ஏராளமான மருத்துவப் பலன்கள் அதிலிருந்து முழுமையாகக் கிடைக்கும். வெறும் வயிற்றில் காலையில் ஒரு டம்ளர் வெள்ளரிச்சாறு குடித்தால் உடலுக்கு மிக நல்லது. வெள்ளரியில் கலோரிகள் குறைவானதால், உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர் களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச் சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண் டால் மிக அதிகப் பலன்கள் விளையும்.

மருத்துவப் பயன்கள் :

கீல்வாதத்தைப் போக்க உதவுகிறது வெள் ளரி. சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக் கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரியை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது.

நெல்லி

மனிதன் பிறந்ததிலிருந்து இன்றுவரை உடல்நலம் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது நெல்லி. குளர்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனி இது. வேறெந்தக் கனியைக் காட்டிலும் மருத்துவப் பண்புகளுடன் இருப்பதில் நெல்லியே முதலிடம் வகிக்கிறது. உடலின் ஒட்டுமொத்த வலுவுக்கும் நெல்லி ஒரு காயகல்பமாகத் திகழ் கிறது. உலகில் புகழ்பெற்ற லேகியமாக இருக்கிற சயவனப் பிரசாவில் முக்கிய சத்து நெல்லிதான். ஒரு எலுமிச்சையளவு கூட பெரிதாக விளையக் கூடியது இது. லேசாக வெளுத்த பச்சை நிறமான இது அழகான குத்துக்கோடுகள் கொண்டது.

இதனுடைய சுவையில் லேசான அமிலநெடி இருக்கும். முடியை வளர்க்கும். விந்துவைக் கூட்டும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். கண்பார்வைப் புலனை மேம்படுத்தும், கபம், பித்தம், வாய்வு என்ற மூன்று கோளாறுகளையும் நீக்கும். மனிதனுக்கு இடம், பொருள், காலம், வயதை மீறி என்றுமே பயனளிக்கக் கூடியது. வைட்டமின் சி இக்கனியில் தான் மிக மிக அதிகம். இது மனிதனுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும்.

மேலும், நெல்லிக்கனியில் காலிக் அமிலமும், அல்புமினும் அடங்கியுள்ளன. வைட்டமின் சி சத்தை நீண்டகாலம் தேக்கியிருக்கும். நிழலில் உலர்த்தப் பட்டால் வைட்டமின் சி சத்தை நீண்ட காலம் தேக்கியிருக்கும். உலர்த்தப்பட்ட நெல்லிக் கனியில் 2,400 மில்லி கிராம் முதல் 2,600 மில்லி கிராம் வரை 100 கிராமுக்கு என்ற கணக்கில் வைட்டமின் சி இருக்கும். ஒரு மனிதனின் ஒரு நாளைய வைட்டமின் சி தேவையின் அளவு 75 மில்லி கிராம். ஒரு நெல்லிக்கனியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் சி-யின் அளவு 16 வாழைப்பழங்களிலிருந்து கிடைப்பதை விடவும், மூன்று ஆரஞ்சுப் பழங்களிலிருந்து கிடைப்பதை விடவும் அதிகமானது.

நெல்லிக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி, கொட்டையை எடுத்தெறிந்துவிட்டு சாறாக்கலாம். நெல்லிக்காயை நறுக்கும்போது இரும்புக் கத்திக்குப் பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்தியால் நறுக்கவேண்டும். இரும்புடன் நெல்லி உரசும்போது, அதன் மருத்துவப்பண்பு குறைகிறது. அதிகாலையில், வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகுவது நல்லது.

நெல்லிக்காயை ஒரே சமயத்தில் அதிகமாகத் தின்ன முடியாது. எனவே, சாறாக்கி அருந்துவது நல்லது. தேனைக் கலந்தும் இதன் சாற்றைக் குடிக்கலாம். வெல்லத்தையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்கனியை, சாறாகப் பயன் படுத்துவதுதான் அதை வேறெந்த முறையில் உபயோகிப்பதைக் காட்டிலும் மேலானது.

மருத்துவப் பயன்கள் :

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தரவல்லது. இரண்டு மூன்று மாதங் களுக்கு விடாமல் நெல்லிச்சாறு பருகி னால் விந்து உற்பத்தியாகி ஆண்மை பெருகி மலட்டுத்தன்மை நீங்கும். கண் நோய்களுக்கும், பார்வைத் திறனுக்கும் நெல் லியைக் கொண்டு நிவாரணம் பெறலாம். மலச் சிக்கல் நீங்க பெரிதும் உதவுகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக் கிறது. நீடித்த செரிமான மின்மைக்கு நல்ல மருந்து. மஞ்சள் காமாலை நோயையும் தீர்க்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இதயத்திற்கு வலுவைச் சேர்க்கும்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)