( 2006ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு உறுப்பினராகத் தமிழருவி மணியன் கலைஞரால் நியமிக்கப்பட்டபோது, அவர் முரசொலியில் எழுதியுள்ள கவிதை இது )

நேற்று நீ

வடமொழியோடு என்றும் வாடாத தமிழுக்குச்

செம்மொழி என்ற சரியாசனம் தந்தாய்

இன்று நீ

இந்த மண்ணில் வாழும் எவரும்

தமிழ் படித்தே ஆகவேண்டும் என்ற

விதியயான்று செய்தாய்

நாளை நீ

நியாயத் தராசிருக்கும் நீதிதேவன் கொலுமண்டபத்தில்

அன்னைத் தமிழ் ஆள்வதற்கு அரியாசனம் அமைத்தாய்

என்றும் நீ

செய்கரிய இச்சாதனைகளால்

தமிழர்தம் நெஞ்சங்களில்

தஞ்சைக் கோபுரமாய் உயர்ந்தாய்

தமிழ் என்றாலும் தமிழர் என்றாலும்

திறனறிந்து போற்றுவார் உன்போல் யாருண்டு?

வளர் நிலவாய் வாழ்க வற்றாத உன் தமிழ்த் தொண்டு!

Pin It