துள்ளிப்பாய்ந்து

வானையும் பிடித்திடலாம்

கரையருகில் நீ நின்றிருக்க

நதியில் விழுந்த நிழலை

தாங்கி நகர்ந்த நீரினை

தனியாக எடுத்துவந்து

தீர்த்தமெனச் சொல்லி

துளித்துளியாகப் பருகி நம்

முழு வாழ்க்கைக்குமான

தாகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்

அன்றைக்குப் பூத்து

பேரழகென மிளிரும் ஒற்றை ரோசாவை

அகிலம் முழுதும் தேடி பறித்தெடுத்து வந்து

நீ விழித்து சுபமாயுன்

கருவண்டு விழிகள் பார்த்து

தேன்குடிக்கவென

நீ விழிக்கும் காலையுன்

தலையணைக்கருகில் வைத்திடலாம்

தன்னம்பிக்கை பற்றி

உன் தோழிக்கு நீ விளக்கியதை

நானும் கேட்டேன்

மேற்கூறியது போன்ற

அழகான எண்ணங்கள்தான்

எப்படியும் நிறைவேறுமென்ற

நம்பிக்கையுடன் உறுதியுடன்

எனக்குள்ளே உதிக்கின்றன

நானென் செய்வேன்


- எம்.ரிஷான் ஷெரீப்

Pin It