சந்திப்பு: அல்பா ஷா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யின் சிறப்பு மண்டலக் குழுத் தகவல் தொடர்பாளரான கோபால்ஜியிடம் லண்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் பணிபுரியும் அல்பா ஷா எடுத்த இந்த நேர்காணல் Economic and Political Weekly ஆங்கில வார இதழில் வெளிவந்துள்ளது. ஜார்கண்ட்டின் காட்டுப் பகுதியொன்றில் சமீபத்தில் இந்நேர்காணல் எடுக்கப்பட்டதாக EPW குறிப்புத் தெரிவிக்கிறது. தன் கட்சியின் இலக்குகள், கட்சி வலியுறுத்தும் புதிய ஜனநாயகம், வளர்ச்சி குறித்த கட்சியின் பார்வை ஆகியவை குறித்தும் கட்சியின் மீது அரசுத் தரப்பும் ஊடகங்களும் சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அல்பா ஷா கேட்ட கேள்விகளுக்கு இந்நேர்காணலில் விரிவான விளக்கம் அளித்துள்ளார் கோபால்ஜி.

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: தேவிபாரதி

அல்பா ஷா: உலகின் பிற நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தோன்றுகிறது. இந்தியாவில் ஒரு சோசலிச அரசை நிறுவ முடியும் என உங்களுக்கு நம்பிக்கை யூட்டுவது எது?

கோபால்ஜி: சோசலிசத்தின் மீதும் கம்யூனிசத்தின் மீதுமான அவநம்பிக்கை களைக் கட்டமைத்துப் பிரச்சாரம் செய்துவருபவர்கள் ஏகாதிபத்தியவாதிகளும் முதலாளித்துவ ஆதரவாளர்களும்தாம். 20ஆம் நூற்றாண்டு சந்தித்தது உழைக்கும் வர்க்கங்களின் தலைமையில் ருஷ்யா, சீனா, வியட்நாம் முதலான நாடுகளில் நடைபெற்ற புரட்சியின் முதல்கட்டம். கம்யூனிஸ்ட்களின் தலைமையில் இந்தி யாவில் நடப்பது போன்ற புதியவகைப்பட்ட புரட்சிகளை 21ஆம் நூற்றாண்டு சந்திக்கவிருக்கிறது.

பெரிய அளவிலான சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள் நிகழ்வதற்குக் கால அவகாசம் தேவை. நிலப்பிரபுத்துவத்தின் மீது வெற்றிகொள்ள முதலாளித் துவத்துக்கு 400 ஆண்டுகள் தேவைப்பட்டன. பின்புங்கூட உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கு நிலப்பிரபுத்துவத்துடன் பல கள்ளத்தனமான கூட்டணிகளை வைத்துக்கொள்கிறது முதலாளித்துவம். இப்போதுங்கூடப் பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யூனிஸ்ட்களின் தலைமையின் கீழ் நடைபெறும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அத்தகைய கூட்டணிகள் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.

சமீபத்தியப் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு, ‘முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை' என்னும் பூர்ஷ்வாக் கொள்கைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்களும் அறிவுஜீவிகளில் பலரும் மார்க்சின் ‘மூலதன'த்தின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். உலகின் சமீபத்திய நிகழ்வுகள் மார்க்சியம் வெல்லப்பட முடியாதது என்பதையும் சோசலிசமும் கம்யூனிசமும் தவிர்க்கப்பட முடியாதவை என்பதையும் நிரூபித்திருக்கின்றன. பசி, வறுமை, ஏற்றத்தாழ்வு, உலகை அச் சுறுத்தி வரும் பருவநிலை மாற்றம் உள் ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்ப தற்கு சோசலிசத்தாலும் கம்யூனிசத்தாலும் மட்டுமே இயலும். உலக அளவி லான சோசலிசப் புரட்சியின் ஒரு அங்க மாகவே இந்தியாவில் ஒரு புதிய ஜன நாயகப் புரட்சியை முன்னெடுக்க நாங்கள் முயல்கிறோம்.

ஏ.எஸ்: மக்கள் யுத்தக் காலத்திய சீனத்தின் நிலைமைகளுக்கும் தற்போது இந்தியாவில் இருக்கும் நிலைமைகளுக்குமிடையேயான முக்கியமான வேறுபாடுகள் எவை?

கோபால்ஜி: எங்களுக்கு உதவுவதற்கு உலக அளவில் இப்போது ஒரு சோசலிச நாடோ அமைப்போ இல்லை. உலகப் போருக்குப் பிறகு, பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவாக நேரடியான கால னியக் கொள்கையைக் கைவிட வேண் டிய கட்டாயத்தை ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்படுத்தியது. அதன் விளைவாக உரு வான நவ காலனியம் தன் சுரண்டலைப் புதிய முறைகளில் தொடர்ந்து வருகிறது. இங்கே, இந்தியா வில் மையப்படுத்தப்பட்ட ராணுவமய மாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கி றது, நாட்டின் மூலை முடுக்குகள்வரை அதன் அதிகாரம் பரவியிருக்கிறது. போக்குவரத்தும் தகவல் தொடர்பும் பெரிய அளவில் வளர்ச்சிபெற்றிருக் கிறது. சீனாவின் கிராமப்புறங்களில் தமக்கான சொந்தப் படைப்பிரிவுகளை வைத்திருந்த யுத்தப்பிரபுக்கள் இருந்தனர். இந்தியாவில் அது போன்ற நிலை இல்லை. கறாரான பார்ப்பனிய மதிப்பீடுகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட அருவருப்பான சாதிய அமைப்பே இங்குள்ள நிலப்பிரபுத்துவ அமைப்பின் முதுகெலும்பாக இருந்து அதைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக் கூறுகள் அனைத்திலும் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் ஒரு முக்கிய அம்சம். இந்திய ஆளும் வர்க்கங்கள் 60 ஆண்டு களாக ஒரு போலி ஜனநாயக ஆட்சியை நடத்திவருகின்றன. இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் அதைவிடப் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் வர்க்கமும் உள்ளன. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி யைக்கொண்ட பல்வேறு தேசிய இனங் கள் இந்தியாவில் இருக்கின்றன. இந்தி யாவில் சந்தர்ப்பவாதத்திற்கு நெடிய வரலாறு உண்டு. இன்றளவிலும் உழைக்கும் மக்களின் மீது செல்வாக்குச் செலுத்திவரும் சந்தர்ப்பவாதிகள் தமது சந்தர்ப்பவாதக் கொள்கைகளால் இப்போது தலைகுனிந்து நிற்கிறார்கள். இங்கே ராணுவத்தை உருவாக்குவதி லும் தளப் பிரதேசங்களைக் கட்டுவதி லும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி உரு வாக்கப்படுவதற்கு முன்பே ராணுவமும் தளப்பிரதேசங்களும் இருந்தன. அங்கே கோமின்டாங் தலைமையில் ஏகாதிபத்திய நிலப்பரபுத்துவ எதிர்ப்பு பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி நடை பெற்றுக்கொண்டிருந்தது.

தொடக்க நிலையில் எங்களிடம் தளப்பரதேசமோ ராணுவமோ இருந்திருக்கவில்லை. ஆயுதந்தாங்கிய சிறு குழு ஒன்றிலிருந்து தொடங்கி வளர்ந்திருப்பதுதான் இன் றைய மக்கள் விடுதலைக் கெரில்லா ராணுவம். ஆகவே எங்கள் போராட்டம் நீண்டதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கும். இந்தியாவின் பெரும்பகுதி சமவெளிகளைக் கொண்டது. காடுகள், மலைப் பிரதேசங்களில் கையாளும் போர்த்தந்திரங்களிலிருந்து வேறுபட்ட போர்த்தந்திர முறைகள் இங்கு தேவைப் படுகின்றன. நகர்ப்புறங்களில் பணிபுரிவதும் பெருமளவிலான உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதும் முக்கிய மான பணி. நான்கு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கியமுன் னணி ஒன்றை உருவாக்குவது தவிரப் பழங்குடிகள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், பல்வேறு தேசிய இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம்.

ஏ.எஸ்: இந்தியா உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாடு எனச் சொல்லப்படுகிறது. நீங் கள் அதைத் திட்டவட்டமாக மறுக்கிறீர்கள்.

கோபால்ஜி: இந்தியா ஒரு முதலாளித் துவ ஜனநாயக நாடுகூட அல்ல. உண் மையில் இது அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடு. இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு எவ்வித ஜனநாயக உரிமைகளும் இல்லை. பிரிட்டிஷாரிடமிருந்து 1947இல் கைமாற்றப் பட்ட அதிகாரம் இந்தியத் தரகு முத லாளிகளின் கைகளுக்கும் ஏகாதிபத்தி யத்தின் விசுவாசமான சேவகர்களான நிலப்பிரபுத்துவச் சக்திகளின் கைகளுக்கும் சென்றது. காலனியத்தின்போது இந்த இரண்டு வர்க்கங்களும்தாம் ஏகாத் தியபத்தியத்திற்குத் துணைநின்றவை. பெரும்பான்மை மக்கள் எந்த உரிமை யையும் பெறவில்லை. புதிய அரசு நிலச் சீர்திருத்தம் பற்றிப் பேசியது. ஆனால் உண்மையான விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்படவில்லை. கல்வி, மருத்துவ வசதிகள் சமமாக இல்லை, நாட்டின் வேலைவாய்ப்புகளில் அனைத்து மக்க ளுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வில்லை. இந்தியாவில் ஊழல் வாழ்க் கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இப் போது கோடிக்கணக்கான மக்கள் பசி யிலும் வறுமையிலும் உழன்றுகொண்டி ருக்கிறார்கள். அரசியல் சாசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் மக்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிடுவ தற்கும் அமைப்பாக ஒன்று திரள்வதற் கும் அனுமதிக்கப்படுவதில்லை.

காலனியத்தின் பெரும்பான்மையான சட் டங்களை ஏற்றுக்கொண்டு உருவாக்கப் பட்டதே நம் அரசியல் சாசனம். நேற்று வரை காலனிய அரசுக்குச் சேவை செய்துகொண்டிருந்த அதிகார வர்க்கம் எப்படி ஒரே இரவில் தன்னை ஜனநாய கத்தன்மை கொண்டதாக மாற்றிக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்யும் என எதிர்பார்க்க முடியும்? 1947இல் பெற்ற சுதந்திரம் பெரும்பான்மை மக்க ளுக்கானதல்ல. அவர்களுக்கு அதனால் எந்த உரிமையும் கிடைக்கவில்லை. இன் றைய இந்தியப் பாராளுமன்றம் அமெ ரிக்காவின் தரகர்களாகச் செயல்படும் உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி ஆகியவற்றின் ஆலோசனைகளுக்குப் பணிந்துபோய்க்கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தைப் பின்பற்றும் ஒரு மதச் சார்பற்ற ஜன நாயகக் குடியரசு எனச் சொல்லிவரு கிறது ஆளும் வர்க்கம். ஆனால் இந்தக் கூட்டாட்சித் தத்துவத்தின் லட்சணம் என்ன? காஷ்மீர் மக்கள் அரசியல் சாசனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி தமக்கான சுயாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தனிநாடு கோரிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு அவர்களை எவ்வளவு கொடூரமாக ஒடுக்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

மத்தியமாநில உறவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். மாநில அரசுகளுக்குப் பல அதிகாரங்களை வழங்கியிருப்பதாக இந்திய அரசு சொல்லிக்கொள்கிறது. உண்மையில் அதிகாரம் தில்லியிடம் குவிந்து கிடக் கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கிடை யேயான உறவுகள் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் கொண்டவையாகவே இருந்துவருகின்றன. மாநில அரசு களோடு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள் வதில், அதிகாரத்தைப் பரவலாக்குவ தில் மத்திய அரசு அக்கறை காட்டவே இல்லை. மூலதனம் ஏகபோக முதலாளி களிடம் குவிந்து வருகிறபோது அதி காரப் பரவலாக்கம் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்? மதசார்பற்ற தன்மையைப் பற்றிப் பேசுவதானால் கடந்த காலங்களில் அரசால் ஒருங்கிணைக்கப்பட்டுச் சிறுபான்மை மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் மதச் சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சிக் குடியரசுத் தத்துவம் மிகப்பெரிய மோசடி.

ஏ.எஸ்: ஜனநாயகம் என்பதை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?

கோபால்ஜி: ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியே எங்களுடைய உடனடிச் செயல்திட்டம். புதிய ஜனநாயக இந்தி யாவில் அதிகாரம் எந்தவொரு தனிப் பட்ட வர்க்கத்தின் கைகளிலும் இருக்கப் போவதில்லை.தொழிலாளர்கள், விவ சாயிகள், சிறு முதலாளிகள், தேசிய முத லாளிகள் ஆகியோர் அடங்கிய ஐக்கிய முன்னணியிடம் அதிகாரங்கள் இருக் கும். புதிய அரசு விவசாயிகளை நிலப் பிரபுத்துவத்திடமிருந்தும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தும் விடு தலை செய்யும், நிலப்பிரபுக்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யும், அந்நியக் கடன்களை ரத்து செய்யும். நிலப்பிரபுக்களிடமிருந்து உபரி நிலங் களைப் பறிமுதல் செய்து அவற்றை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங் கும். அரசியல், பொருளாதார, பண் பாட்டுக்கூறுகளிலிருந்து ஏகாதிபத்திய, நிலவுடமை அம்சங்களை நீக்கும். இப்படிப் புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் உதயமாகும் உண்மையான கூட் டாட்சி முறையிலமைந்த மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு தேசிய இனங் களின் சுய நிர்ணய உரிமையை அங்கீக ரிப்பதாக இருக்கும்.

புதிய ஜனநாயக அரசு எந்த ஒரு மதத்திற்கும் சார்பான தாக இருக்காது, மதம் என்பது தனிப் பட்ட விஷயமாக இருக்கும். மக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத் துவ வசதி கிடைக்கச் செய்வதோடு வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதற் கான நிலைமைகள் உருவாக்கப்படும். முன்குறிப்பிட்ட நான்கு வர்க்கங்களின் தலைமையிலான முன்னணி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மையப்படுத்தப் பட்ட அமைப்பான புரட்சிகர மக்கள் முன்னணியின் தலைமையின் கீழ் இயங்கும். அந்த அமைப்பு இந்தியா வின் பெரும்பான்மை மக்களின் உண் மையான பிபதிநிதிகளைக்கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக இருக்கும். எங்களுக்குச் செல்வாக்குள்ள தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஏற்கனவே அத்த கைய அமைப்பு செயல்பட்டு வருகிறது. கிராம அளவிலும் ஒன்றிய அளவிலும் சில பகுதிகளில் நகர்ப்புறங்களிலும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவை இன்னும் முழுமையாக வளர்ச்சி பெற்றவையல்ல.

ஏ.எஸ்: அரசின் வளர்ச்சித் திட்டங்களை நீங்கள் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

கோபால்ஜி: சாதாரண மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதில் இந்திய அரசு சிறிதளவே அக்கறை செலுத்துகிறது. அரசின் புள்ளிவிவரங் களின்படி பார்த்தால்கூட நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீதம் பேரின் வருவாய் நாளொன்றுக்கு வெறும் 20 ரூபாய் மட்டுமே. இதற்கு அர்த்தம் சுமார் 80 கோடிப் பேர் வறுமைக்கோட் டுக்குக் கீழ் மிக மோசமான வாழ்க் கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். 62 ஆண்டுகாலச் சுதந்திரத் தின் கதை இது. இன்னொரு பக்கத்தில் ஒரு சில இந்தியர்கள் கோடீஸ்வரர் களாக மாறியுள்ளனர். இந்திய அரசு அவர்களைத்தான் ஊக்குவித்துக்கொண் டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி பங்குச் சந்தையின் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டதல்ல. ஒரு சில பணக்காரர்களின் வளர்ச்சியை அரசு தேசத்தின் வளர்ச்சியாகப் பார்க் கிறது. சாதாரண மக்களின் பிரச்சினை களைத் தீர்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை.

உலக வங்கி, உலக வர்த்தக அமைப்புகளின் வழிகாட்டுதல்களின் படி இந்திய அரசு சந்தைப் பொருளா தாரத்தையும் உலகமயமாக்கத்தையும் ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது. அவர் கள் நம் இயற்கை வளங்களை, நம் நிலங்களை, நம் வனங்களை இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் அவர்களது எஜமானர்களான ஏகாதிபத்திய சக்தி களுக்கும் விற்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இயற்கை வளங்கள் அதிகமாக இருப் பது மாவோயிஸ்ட்கள் வலுவாக இருக் கும் சதீஷ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களாக இருப்பது ஒரு தற்செயல். இந்தியாவின் மொத்தக் கனிம வளங்களில் 80 சதவீதம் இந்தப் பகுதிகளில் உள்ளன. மாவோயிஸ்ட்களை ஒடுக்காமல், அவர்களை ஒழித்துக்கட்டாமல் இந்த வளங்களை யும், நிலங்களையும் தங்களுடைய ஏகா திபத்திய எஜமானர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஏ.எஸ்: சுரங்கத் தொழில் வளர்ச்சியை நீங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறீர்களா?

கோபால்ஜி: இல்லை, சுரங்கத் தொழி லுக்கோ, தொழிற்சாலைகளை உருவாக் குவதற்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தியப் பெரு முதலாளிகளும் அவர்களது ஏகாதிபத்திய எஜமானர் களும் தம் சுய லாபங்களுக்காக நம் தாய் நாட்டின் இயற்கை வளங்களைச் சூறை யாடுவதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்திய அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் ஈடுபாடு காட்டவில்லை. மக்கள் இப்பகுதிகளிலிருந்து வெளி யேறுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத் தப்படுவார்கள். ஏற்கனவே போடப் பட்டுள்ள பெரும் திட்டங்களை நிறை வேற்றுவதற்காகப் பெருமளவிலான மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். பொக்காராவிலிருந்தும் வேறு சில இடங்களிலிருந்தும் பெரும் திட்டங் களை நிறைவேற்றுவதற்காக அவர்கள் ஏராளமானவர்களை அவர்களது வாழி டங்களிலிருந்து அப்புறப்படுத்தினார்கள், யாருக்கும் உரிய இழப்பீடுகள் தரப் படவில்லை, யாருக்கும் நிலம் தரப்பட வில்லை, அவர்கள் உருவாக்கிய தொழிற்சாலைகளில் வேலை வழங்க வுமில்லை. பல்லாயிரக்கணக்கான பழங் குடியினரும் விவசாயிகளும் அப்புறப் படுத்தப்பட்டனர். மீண்டும் இது நடக் காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவேதான் நம் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராக, அவை கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக நாங்கள் மக்களைத் திரட்டிப் போராடு கிறோம்.

பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளிகளாலும் அவர்களது இந்தியக் கூட்டாளிகளாலும் நம் இயற்கை வளங் கள் சூறையாடப்படுவதை, கொள்ளை யடிக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. மாவோயிஸ்ட்களின் தலைமையில் அரசு அமைக்கப்படும்போது சுரங்கத் தொழில் சார்ந்தும் பெரும் தொழில் நிறு வனங்களை உருவாக்குவது சார்ந்தும் சில நெறிமுறைகள் கவனத்தில் கொள் ளப்படும். முதலாவதாக, இத்தகைய நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்டு அவை இப்போது போல் பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக அல்லாமல் நாட்டின் வளர்ச் சிக்காகப் பயன்படுத்தப்படும். இரண்டாவதாகச் சுரங்கத் தொழிலுக்காகவோ வேறு பெரிய திட்டங்களுக்காகவோ விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டா. ஒருவேளை அப்படிக் கையகப் படத்தப்பட வேண்டியது தவிர்க்கப்பட முடியாத நிலை உருவானால் அதனால் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும். அவர்களது வாழ்வாதாரம் சார்ந்து ஏற்படும் இழப்புகள் சரியான முறையில் ஈடுகட்டப்படுவதோடு வேலை வாய்ப்பும் அளிக்கப்படும், வீடுகளும் விவசாயம் செய்வதற்காகச் சிறிதளவு நிலமும் வழங்கப்படும். புதிய ஜனநாயக அரசு அப்புறப்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்கும். சுரங்கத் தொழிலும் சரி, தொழிற்திட்டங்களும் சரி அவை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவையாய் இருக்கும்.

மனிதகுல இருப்புக்கு அவசி யமான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினை களைக் கவனத்தில் கொள்ளாமல் பெரும் தொழில் திட்டங்களை நிறுவ முடியாது. ஐந்தாவதாக இத்தகைய திட்டங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதாய் இருக்க வேண்டும். அவர்கள் நிர்வாகத் துறை பணிகளில் அமர்த்தப் பட வேண்டும். ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவும்போது நாங்கள் இவற் றையெல்லாம் கவனத்தில் கொள்வோம்.

ஏ.எஸ்: நீங்கள் உங்களை ஊழலுக்கு எதிரா னவர்கள் எனச் சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால் உங்களுக்கான நிதியாதாரங்களை அரசின் வழியாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் காண்ட்ராக்டர்களின் கருப்புச் சந்தைகளிலிருந்து திரட்டிக்கொள்கிறீர்கள். இப்படி ஊழல் அமைப்பு என உங்களால் எதிர்க்கப்படும் ஒரு அமைப்பில் பங்கெடுத்துக் கொள்வதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

கோபால்ஜி: இது ஊழல் அல்ல. வரி விதிப்பு. எங்களுடைய போராட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பணி புரியும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப் பட்ட நிதியைக்கொண்டு தமது சொத்து களைப் பெருக்கிக்கொண்ட ஒப்பந்த தாரர்களிடமிருந்து நாங்கள் வரி வசூலிக்கிறோம். எங்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டவும் புரட்சிகர மக்கள் கமிட்டி யின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்காவும் நாங்கள் இந்த நிதியைப் பயன்படுத்திக்கொள் கிறோம். வரிவிதிப்பது தொடர்பாகச் சில விதிமுறைகளைப் பின்பற்றுகிறோம். சிறிய நிறுவனங்களைவிடப் பெரிய நிறுவனங்களிடமிருந்து அதிக வரி வசூ லிக்கப்படுகிறது. பள்ளிகள், மருத்துவ மனைகள், சிறிய நீர்த்தேக்கங்கள் போன்ற பணிகளை மேற்கொள்வோரிட மிருந்து நாங்கள் வரி வசூலிப்பதில்லை. வசூலிக்கப்பட்ட தொகையை எப்படிச் செலவிடுவது என்பதற்கு நாங்கள் திட்ட வட்டமான விதிமுறைகளையும் நெறி முறைகளையும் கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட ஆதாயங்களுக்காகப் பணம் வசூலிப்பது ஊழல். நாங்கள் உழைக் கும் மக்களின் வளர்ச்சிப்பணிகளுக்காக நிதி திரட்டுகிறோம்.

ஏ.எஸ்: ஊழலுக்கெதிராக, ஏற்றத்தாழ்வுக் கெதிராக, நிலவுடமைக்கெதிராக நீங்கள் நடத்தும் போராட்டங்கள் பல்வேறு மனித உரிமை அமைப்புகளாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருபவைதான். நீங்கள் உங்களை இவர்களிடமி ருந்து எப்படி வேறுபடுத்திப்பார்க்கிறீர்கள்?

கோபால்ஜி: சமூக, அரசியல், பண் பாட்டு மதிப்பீடுகள் பொருளாதார அமைப்பால் தீர்மானிக்கப்படுபவை. பொருளாதார அமைப்பை மாற்றாமல் அவற்றை மாற்றுவதைப் பற்றிப் பேசு வது பயனற்றது. தொண்டு நிறுவனங் களும் அரசு சார்பான மனித உரிமை இயக்கங்களும் தனிப்பட்ட பிரச்சினை களின் அடிப்படையில் போராடுகின்றன. இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வை எட்ட முடியும் எனக் கருதுகின்றன. ஏகா திபத்திய, நிலவுடமை, மதிப்பீடுகள் இந்த அமைப்பின் பகுதிகள். இத்தகைய அமைப்புகளை இந்த அமைப்பே ஊக்கு விக்கிறது. இந்த அமைப்பை மாற்றா மல், தூக்கியெறியாமல் மாற்று அமைப்புகளை நிறுவுவதோ மாற்று மதிப்பீடுகளை, ஜனநாயக நெறிமுறை களைக் கட்டமைப்பதோ சாத்திய மில்லை. சில தனிப்பட்ட ரீதியில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கெதிராகவோ அல் லது பெண்கள், தலித்துகள், பழங்குடி மக்களின் பிரச்சினைகளுக்காவோ போராடுவதன் மூலம் மட்டும் இந்த அமைப்பை மாற்றிவிட முடியாது. நீங்கள் முழு அமைப்பையும் மாற்ற வேண்டும். ஏகாதிபத்திய, நிலவுடமை மதிப்பீடுகளை ஒழித்துக்கட்ட வேண்டு மென்றால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். தொண்டு நிறுவ னங்களும் மனித உரிமை இயக்கங் களும் இந்தியாவின் உயர் வகுப்பின ரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத் திற்குட்பட்ட முறையில் போராடுவதில் திருப்தியடைகின்றன. பல தருணங் களில் தம் கௌரவத்தை, நம்பிக்கையை இழந்துவிட்ட அரசுக்கு safety valveகளாக இவை இருக்கின்றன. அவற்றின் செயல் பாடுகள் வறையறுக்கப்பட்டவை.

ஏ.எஸ்: கட்சி, ஜார்கண்டில் 20 ஆண்டு களுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது. உங்களின் குறிப்பான சாதனை என எதைச் சொல்வீர்கள்?

கோபால்ஜி: இந்தியாவில் உழைக்கும் மக்களும் நிலமற்ற கூலி விவசாயிகளும் ஏழை விவசாயிகளும் அரசியல்ரீதியிலும் ராணுவரீதியிலும் பெரும் சக்தியாக உரு வெடுத்திருப்பதைத்தான் முதலாவதும் முக்கியமானதுமான சாதனை என்று சொல்ல வேண்டும். எங்களுடைய போராட்டப் பகுதிகளில் நிலப்பிரபுத் துவ சக்திகளின் ஆதிக்கம் பெரிய அள வில் தகர்க்கப்பட்டிருக்கிறது. போரா டும் மக்கள் People’s Liberation Guerrilla Army என்னும் தங்களுக்கான கெரில்லா ராணுவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தலித்துகளும் பழங்குடி மக்களும் வரலாற்றுரீதியில் தம் மேல் சுமத்தப்பட்ட அவமானங்களிலிருந்தும் இழிவுகளிலிருந்தும் விடுபட்டுத் சமூகத்தில் தமக்கான இடங்களை உருவாக்கிக்கொண்டிருப்பது இரண்டாவது சாதனை. பெண்கள், தலித்துகள், பழங்குடி மக்களை இழிவுபடுத்துவது போன்ற தவறான நடைமுறைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. வனப்பகுதியில் உயர்சாதியினர், புறசக்தியினர் செலுத்திவந்த அதிகாரம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.

ஊழல் மலிந்த, செயல்படாத வனத் துறையினரிடமிருந்து காடுகள் காப்பாற் றப்பட்டிருப்பது மூன்றாவது சாதனை. வனத் துறையின் கடைநிலை ஊழியர் கள்கூட வனக்கொள்ளையர்களாலும் நிலவுடமையாளர்களாலும் கட்டுப் படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். காடுகள் இப்போது முழுமையாக விடுவிக்கப்பட்டு பழங்குடி மக்கள் அவற்றைத் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்த முடிகிறது. காடுகள் அழிக் கப்படுவதையுங்கூட நாங்கள் கட்டுப் படுத்தியிருக்கிறோம்.

நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங் கள் எங்களுடைய நான்காவது சாதனை. எங்களுடைய போராட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கிறார்கள். நிலப்பிரபுக்களிட மிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் களைப் பறிமுதல் செய்திருக்கிறோம், பல நிகழ்வுகளில் நிலப்பிரபுக்கள் கிரா மங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டி ருக்கிறார்கள். பல இடங்களில் நாங்கள் புரட்சிகரமான முறையில் நில உச்ச வரம்பை அமல்படுத்தியிருக்கிறோம். பறிமுதல் செய்யப்பட்ட உபரி நிலங் களை அவற்றில் விவசாயம் செய்துவந்த நிலமற்ற விவசாயிகளுக்கும் ஏழை மக்க ளுக்கும் பகிர்ந்து கொடுத்திருக்கிறோம்.

பீகாரிலும் ஜார்கண்ட்டிலும் கூலி மிகக் குறைவாக இருந்து வந்தது. பழங்குடி மக்கள் பெற்றுவந்த வனப் பொருட் களான விலையும் மிகமிகக் குறைவாக இருந்தது. ஆகையால் அவற்றுக்கு அதிக விலை கோரி நாங்கள் மக்களைத் திரட்டிப் போராடினோம். இப்போது ஒப்பீட்டளவில் நல்ல விலை கிடைக் கிறது. மக்களை வாட்டி வதைத்த கந்துவட்டி முறை பெரிய அளவில் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.

எங்கள் போராட்டப் பகுதிகளில் திருட் டையும் கொள்ளையையும் தடுத்திருக் கிறோம். இவற்றைத் தவிர இப்பகுதி களில் உள்ள கிணறுகள், ஆற்றுப்படுகைகள், சந்தைகள், சோலைகள் போன்ற வற்றை அரசு பெரிய காண்ட்ராக்டர் களிடம் ஏலத்துக்கு விட்டு வந்திருந்தது, இப்போது அவை தடுக்கப்பட்டு மக்கள் சுதந்திரமான முறையில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

எங்களுக்குச் செல்வாக்குள்ள பகுதி களில் மதக் கலவரங்கள் இல்லை. சங் பரிவாரங்களின் குண்டர்கள் அதற்குத் துணியமாட்டார்கள். சில இடங்களில் அவர்கள் அதற்குத் துணிந்தனர். அப்போது நாங்கள் அவர்களைத் தண்டிக்கிறோம், ஒரிசாவின் கந்தமால் பகுதியின் சுவாமி லக்ஷ்மானந்தைத் தண்டித்தது போல.

மற்றொரு முக்கியமான சாதனை எங் களால் இன்றுவரை மத்திய, மாநில அரசுகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்குமிடையே ஏற்பட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந் தங்களைப் பெரிய அளவில் செயல்பட விடாமல் தடுத்திருப்பதுதான். இதன் விளைவாக அவர்களால் அவர்கள் நினைத்தது போலச் சுலபமாக இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும் முடியவில்லை.

எங்களது வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை எங்களால் அவற்றை முழுமையான அளவில் நடைமுறைப் படுத்த முடியாது என்பதுதான் நிலை. இருந்தபோதிலும் எங்கெல்லாம் புரட்சி கர மக்கள் கமிட்டிகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க முயன்று வருகிறோம். உதாரணமாக, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் களுக்கான கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம் என்பதைக் குறிப்பிடலாம். இரண்டாவதாகப் பின் தங்கிய பகுதிகளில் விவசாயத்தை மேம் படுத்துவதற்காக ஸ்ரம்தான் என்னும் என்னும் திட்டத்தின் கீழ் தன் னார்வத் தொண்டர்களைக் கொண்டு கிணறுகள் கால்வாய்களை அமைத்திருக்கிறோம், பள்ளிகள், மருத்துவமனைகளை நிறுவியிருக்கி றோம். மருந்துப் பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்குகிறோம். எங்கெல்லாம் புரட்சிகர மக்கள் குழுக் களை அமைக்க முடிந்திருக்கிறதோ அங் கெல்லாம் இவற்றைச் செய்கிறோம். எனினும் இவை இன்னும் முழுமை யடையாதவையாக இருக்கின்றன. வன்முறை குறித்து

ஏ.எஸ்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஒரு பயங்கரவாத இயக்கம் என்கிறது அரசு. இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

கோபால்ஜி: முதலாவதாக இதுபோல முத்திரை குத்துவது அமெரிக்க ஏகாதி பத்தியம் கட்டவிழ்த்துவிட்ட ‘‘பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்னும் பிரச்சாரத்தின் ஒரு பகுதி. இந்திய ஆளும் வர்க்கத்தினர் தெற்கா சியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளைகளாக வேகமாக வளர்ந்து வருகின்றனர். அமெரிக்கப் பேரரசின், ஏகாதிபத்தியத்துவத்தின் நலன்களுக்கெதிரான எந்தவொரு இயக்கமும், அல்லது ஒருங்கிணைப்பும் அல்லது எதிர்ப்பு நடவடிக்கையும் ஏகாதிபத்திய சக்திகளால் பயங்கரவாதம் என்றே முத்திரை குத்தப்படும். இந்தப் பின்னணியில்தான் ஆசிய, ஆப் பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசுகள் அந்த நாடுகளின் தேசிய இயக் கங்களையும் உழைக்கும் மக்களின் இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றன. இந்தியக் கம்யூ னிஸ்ட்கட்சி (மாவோயிஸ்ட்) யை பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்துவதன் மூலம் காவல்துறைக்கு முற்போக்கான எந்தவொரு தனிநபரையும் அவர் கட்சியின் எந்தவொரு மக்கள் திரள் அமைப்போடும் தொடர்பு வைத் திருக்க வேண்டுமென்ற அவசியம்கூட இல்லைகைது செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது.

அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையைப் பற்றி, ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசும் எந்தவொரு தனிநபரையும் காவல் துறையினரால் கைதுசெய்ய முடியும். பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள், குடிமை உரிமைச் செயல்பாட்டாளர்கள் என எல்லோரும் இந்தப் பட்டியலில் அடக்கம். நாங்கள் இப்படி முத்திரை குத்துவதைக் கடுமை யாகக் கண்டிக்கிறோம். இரண்டாவதாக, பயங்கரவாதச் செயல் களில் ஈடுபடுவோருக்கும் எங்களுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகள் பொது வாக வரையறையற்ற படுகொலை களுக்குக் காரணமாக இருக்கின்றன, அப்பாவி மக்களும் இதில் அடக்கம். நாங்கள் இந்தப் படுகொலைகளை வன் மையாகக் கண்டிக்கிறோம். அப்பாவி மக்கள் பலியாக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள்.

ஒரு அப்பாவி கிராமவாசியைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையை யும் நாங்கள் ஆதரித்ததில்லை. எங்கே யாவது எங்களுடைய ஆயுதந்தாங்கிய குழுவினர் அப்படியொரு நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்தால் நாங்கள் அதற் காகச் சுய விமர்சனம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். தவிர நாங்கள் இந்தியச் சமூகத்தை ஆன்மீக நாடாக உருவாக்கப் போவதில்லை. மத அடிப்படைவாதிகள் எப்போதுமே பயங்கரவாதச் செயல் பாடுகளையுடைவர்களாக இருந்து வந் திருக்கிறார்கள். நாங்கள் அதற்கு முற்றி லும் எதிரானவர்கள். மார்க்சியம் லெனி னியம்மாவோயிசமே எங்களுடைய தத்துவம். நாங்கள் இந்தியாவை உண்மையான மதசார்பற்ற, ஜனநாயகக் கூட்டாட்சிக் குடியரசாக உருவாக்கப் போராடுகிறோம். இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்)யை பயங் கரவாதிகளாகச் சித்தரிப்பது தந்திரமான, விஷமத்தனமான பிரச்சாரம். இந்திய அரசு மக்களைப் பிரச்சாரங்களின் மூலம் முட்டாள்களாக்க முயல்கிறது. எங்களைப் பொறுத்தவரை பயங்கர வாத முத்திரை எங்களைப் பாதிக்கப் போவதில்லை. எங்கள் கட்சி தொடக் கத்திலிருந்தே தலைமறைவாகச் செயல் பட்டுவருகிற இயக்கம்தான். பயங்கர வாதிகள் என எங்களை முத்திரை குத்து வது காவல் துறையினர் பொதுமக்களைச் சித்ரவதை செய்வதற்கே துணைபுரியும், குறிப்பாக எங்களுக்குச் செல்வாக்குள்ள பகுதிகளில்.

ஏ.எஸ்: ஆயுதப் போராட்டப் பாதை பலரது மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. மாவோயிஸ்ட்கள் தொடர்புடைய வன் முறைகளில் வருடந்தோறும் 1000பேர் வரை மரணமடைவதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இவ்வளவு பேர்களின் மரணத்தை நீங்கள் எப்படி நியாயப் படுத்துவீர்கள்?

கோபால்ஜி: முதல் விஷயம் அவர்கள் கட்சியின் எதிரிகள் என்பதுதான். அழித் தொழிப்பு என்பது எங்களுடைய கடைசி வழி. நிலப்பிரபுக்கள், காவல்துறை ஏஜன்டுகள், அரசினால் உருவாக்கப் பட்ட குண்டர் படைகளின் உறுப்பினர்கள், மக்கள் நீதிமன்றத்தின் முன்பு சர ணடைய மறுக்கும் குற்றவாளிகள் முத லான சந்தர்ப்பவாத சக்திகளைத்தான் நாங்கள் அழித்தொழிக்கிறோம். அரசும் கார்ப்பரேட் மீடியாவும் மாவோயிஸ்ட் தொடர்புடைய வன்முறைகளில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்கின்றன. அவர்கள் சொல்வதுபோல் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவற்றில் ஒரு பகுதி பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரம்.

இரண்டாவது இந்தச் சித்திரத்தின் மறு பக்கத்தைப் பாருங்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு மாகாணங்களிலும் முகா மிட்டிருக்கும் ராணுவத்தினரும் துணை ராணுவப் படையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒவ்வொரு நாளும் இளைஞர்களைப் போலி மோதல் களில் அவர்கள் கொன்று குவிக்கிறார்கள். மாவோயிஸ்ட் பகுதிகளில் உள்ள துணைராணுவப் படையினரும் மாநிலப் போலீசாரும் என்ன செய்துகொண்டிருக் கிறார்கள்? அவர்கள் நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் கொன்று குவிக் கிறார்கள். 1984இல் சீக்கியர்களுக்கு எதி ராக நடத்தப்பட்ட கலவரம், ஒரிசாவில் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் கொல் லப்பட்டது, 2002இல் குஜராத் கலவரம் போன்ற சிறுபான்மை மக்களுக்கு எதி ரான ஆளும் வர்க்கங்களின் செயல் திட் டங்களை உங்களால் நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறதா? கொல்லப்பட்ட இந்துத்துவவாதிகள், போலீசாரின் எண் ணிக்கை எவ்வளவு? 1947இலிருந்து இந் துத்துவ அடிப்படைவாதிகளுடன் அரசுப் படைகள் கைகோத்திருக்கின்றன. அரசு ஆதரவுடன் நடைபெற்ற வன்முறை களில் எப் படிச் சிறுபான்மை மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட் டிருக்கிறார்கள் என்பதை, காஷ்மீரிலும் வடகிழக்கு மாகானங்களிலுமுள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தவர்கள் எப்படி ஒழித்துக் கட்டப்பட்டார்கள் என்பதை, சால்வா ஜூடும் போன்ற அமைப்புகளின் மூலம் அரசுப் படைகள் எப்படி மத்திய இந்தியாவில் போராடும் தலித்துகளையும் பழங்குடி மக்களையும் கொன்று குவிக்கின்றன என்பதையும் கார்ப்பரேட் மீடியாவும் செய்தியாளர் களும் அம்பலப்படுத்த வேண்டும்.

அரசின் மக்கள் விரோதப் பொருளா தாரக் கொள்கைகள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளில் ஐந்து லட்சம் விவ சாயிகள் தற்கொலை செய்துகொண்டது உங்களுக்குத் தெரியுமா? 200809இல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தினக் கூலிகளாக மாற்றப்பட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏராளமானோர் பட்டினியால் மடிந்துகொண்டிருக்கி றார்கள். உத்ஷா பட்நாயக் சொன்னது போல இந்தக் குடியரசு பசித்திருப்பவர்களின் குடியரசு. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு? இல்லாமையாலும் பசியாலும் பல்வேறு நோய்களாலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு? மக்களுக்கு வேறு வழியில்லை. யாரும் நீங்கள் சொல்வதைக் கவனிக்கப் போவ தில்லை. இந்த வன்முறை இந்திய மக்க ளின் மீது அரசால் திணிக்கப்பட்டது.

ஏ.எஸ்: எனினும் அரசின் ராணுவ நட வடிக்கைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின் றன, போர் தீவிரமடைகிறது. பல சாதாரண மனிதர்கள் இந்த யுத்தத்திற்கிடையே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகள் இருக்கின்றன, கன்னி வெடிகளும் 306 ரகத் துப்பாக்கிகளும் உங்களைப் பாதுகாக்கின்றன. அதே சமயத் தில் இந்தப் பிரச்சினை சாதாரண கிராம மக்கள் பலரை மரணத்துக்கு இட்டுச் செல்லும். இதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

கோபால்ஜி: மன்னியுங்கள், நீங்கள் இந்தக் கேள்வியை தவறான முறையில் முன்வைக்கிறீர்கள். இந்தப் போர் மாவோயிஸ்ட்களுக்கும் இந்திய அரசுக் குமிடையிலானதல்ல, மக்களுக்கும் இந்திய அரசுக்குமிடையிலான போர் இது. இ.க.க.(மாவோயிஸ்ட்) என்பது என்ன? PGLA என்பது என்ன? இவை அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட மக்கள் சக்தி என்பது தவிர வேறில்லை. மாவோயிஸ்ட்களின் தலைமையிலான PGLA மீதான தாக்குதல் என்பது உண்மையில் இந்த மக்கள் சக்தியின் மீதான தாக்குதல் என்றுதான் அர்த்தம். கட்சியின் மீதான எந்தப் போரும் தங்கள் மீதானது என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஏ.எஸ்: உங்களால் மாவோயிஸ்ட்களையும் மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாதது போலவே அரசையும் மக்களையும்கூடப் பிரித்துப் பார்க்க முடியாதல்லவா? உங்களுடைய முக்கியமான தாக்குதல் இலக்காக இருக்கும் காவல்துறையினரில் பலர் மக்களிலிருந்து வந்தவர்கள், நீங்கள் யாருக் காகப் போராடிக்கொண்டிருக்கிறீர்களோ, யார் உங்கள் ஆதரவாளர்களாகவும் தொண் டர்களாகவும் இருக்கிறார்களோ அவர்களி லிருந்து வந்தவர்கள். இந்தப் போரில் ஈடுபட்டிருக்கும் ஏழ்மையான கிராமப்புறப் பின்னணிகளைக்கொண்ட சாதாரணப் போலீஸ்காரர்களை ஏன் கொல்கிறீர்கள்?

கோபால்ஜி: தாக்குதல்களில் கொல்லப் படும் போலீசாரில் பலர் பொதுவாக ஏழ்மையான பின்னணிகளைக் கொண் டவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் ஆக்கிரப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும் தேடுதல் வேட்டை களில் ஈடுபடும்போதும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கும்போதும் தான் தாக்கப்படுகிறார்கள். நான் உங்க ளுக்குச் சில உதாரணங்களைத் தர முடி யும். பல போலீசாரும் ஆயுதப் படை யினரும் எங்கள் பகுதிகளில் வசித்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களது குடும்பத்தினர் எங்களுடைய ஆதரவாளர்களாக உள்ள னர். அவர்கள் விடுமுறையிலோ, திரு விழாக்களில் கலந்துகொள்வதற்காகவோ தம் வீடுகளுக்கு வரும்போது தாக்கப் பட்டதற்கு ஒரு உதாரணத்தைக்கூட உங் களால் காட்ட முடியாது. மூன்றாவதாக நாங்கள் மாவட்டக் காவல் துறை யினரை, குறிப்பாக எங்களுடைய பகுதி களிலிருந்து வந்தவர்கள் என்பதால் தாக்குவதைக் கட்டுப்படுத்திக்கொள் கிறோம். அவர்கள் எங்கள்மீது தாக்குதல் தொடுப்பவர்களாக வரும்போது, மக்க ளுடைய இயக்கங்களை ஒடுக்குபவர் களாக வரும்போது நாங்கள் அவர் களைத் தாக்குகிறோம். போரில் எதிரி, உங்களை ஒடுக்குவதற்கு உங்களுடைய சொந்த வர்க்கத்தினரைப் பயன்படுத்தும் போது அவர்கள் தாக்கப்படுவது தவிர்க் கப்பட முடியாதது. நீங்கள் பணிபுரியும் அரசாங்கம் உங்களுக்கானதல்ல. அவர்கள் யாருக்காகப் பணிபுரிகறார் களோ அந்த ஆளும் வர்க்கங்கள் அவர் களுடைய குடும்பத்தினரின் நலன் களுக்கு எதிரானவை. ஆகவே காவல் துறையினரையும் ராணுவத்தினரையும் அவர்கள் தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் பிற்போக்கான காவல் துறையிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் வெளியேறி மக்கள் கொரில்லா ராணுவத்தில் சேர்ந்து போராடுமாறு அழைக்கிறோம்.

(தமிழாக்கம்: தேவிபாரதி)

Pin It