பிரபல பிரெஞ்சு செருப்பு தயாரிக்கும் நிறுவனமான ‘மின்னெனி’ தனது ‘ஷூ’வில் ‘ஹிப்பி’ உருவத்தை வரைந்து சந்தைப்படுத்த முடிவு செய்தது. அதற்கு கற்பனையால் உருவாக்கப்பட்ட இந்துக் கடவுள் “இராமன்” படத்தைத் தேர்வு செய்து, ‘ஷூ’க்களில் அச்சிட்டது. இதற்கு, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வாழும் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரஞ்சு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருள்களை ‘இந்து’க்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏற்கனவே கிருஷ்ணன், சரசுவதி உருவங்களை உள்ளாடைகளில் அச்சிட்டு, சில நிறுவனங்கள் விற்பனை செய்ததற்கும், எதிர்ப்புகள் வந்தன. அந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைத் திரும்பப் பெற்றுவிட்டன.
செருப்பில் ‘ராமன்’ படத்தைப் போடுவதற்கு கொதித்தெழுந்த பார்ப்பனர்களுக்கு ஒரு கேள்வி! ‘ராமன்’ வனவாசம் போன 14 ஆண்டுகளும் “பாரத” நாட்டை, ராமனின் ‘செருப்பை’ ஆட்சி பீடத்தில் வைத்து பரதன் அரசாண்டதாக இராமாயணம் கூறுகிறதே! மக்களை ஆட்சி செய்ததே ஒரு செருப்பு தான்! மக்கள் அவ்வளவு இழிவுபடுத்தப்பட்டனர்! அந்த ராமாயணத்தை, மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்களே.
இது மட்டும் நியாயமா?