கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சேலம் மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானங்கள்

தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி தடை செய்யப்படாத நிலையில் இறைச்சிக்குப் பயன்படுத்தக் கூடிய மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் வணிகத்தை, நமது வணிகர்கள் நடத்தி வருகிறார்கள். வன்முறை வழியாக விற்பனைக்கு செல்லும் மாடுகளைத் தடுத்து பறிமுதல் செய்யப்படுகின்றன. விவசாயிகளால் வாங்கிச்செல்லப்படும் மாடுகளையும் பறிமுதல் செய்கிறார்கள்.

மதவெறி சக்திகள் மாணவர்கள் பெயரில் - சில வன்முறையாளர்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படும் இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்தாமல், காவல்துறை இந்த அடாவடிக்கு துணை போவதை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

இதனால் பாதிப்புக்குள்ளாகி வரும் வணிகர்களுக்கும் , விவசாயிகளுக்கும் தனது முழுமையான ஆதரவை திராவிடர் விடுதலைக் கழகம் தெரிவித்துக் கொள் கிறது; தேவைப்பட்டால் மாடுகளைப் பறிமுதல் செய்யும் வன்முறைகளைக் கண்டித்துப் போராடவும் தயாராக இருக்கிறது என்பதை அறிவித்துக் கொள்கிறது.

புறக்கணீப்பீர்!

கடவுள் நம்பிக்கை கொண்ட பார்ப்பன ரல்லாத மக்கள் மீது சுமத்தப் பட்ட ‘சூத்திர’ இழிவு ஒழிப்புக்காக தனது இறுதி மூச்சு அடங்கும் வரை போராடிய தலைவர் பெரியார் ஆவார். கோயில் களில் ஆகமங்களின் வழியாக நிலை நிறுத்தப்படும் ‘இழிவு’ மாற்ற முடியாதது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டதால், ஆகம கோயில்களுக்கு சென்று பார்ப்பன அர்ச்சகர்கள் வழியாக கடவுளை வழிபடுவதைப் புறக்கணித்து, தங்களின் சுயமரியாதை உணர்வை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்று – பார்ப்பனரல்லாத - கடவுள் நம்பிக்கை உள்ள நம்மின மக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது - என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டக் கழக முடிவுகள்

29-11-2015 அன்று தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சோமா விடுதியில் மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்றது.

இயக்க வளர்ச்சியைப் பற்றியும், அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தோழர்கள் தங்களது கருத்துகளை கூறினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தமிழ் நாடெங்கும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை” 2016 ஜனவரி மாதத்தில் தூத்துக்குடியில் சிறப்பாக நடத்து வது.

2. தூத்துக்குடி மாவட்ட கழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மாவட்ட தோழர்கள் அனைவரும் மாதம் ரூ.50ஐ சந்தாவாக கொடுப்பது.

3. புரட்சிப் பெரியார் முழக்க சந்தா வினை இந்த ஆண்டு (2016) அதிக அளவு உறுப்பினர்களை சேர்ப்பது..

4. 2016ம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் சந்தாவினை விரைவாக கொடுப்பது.

என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கலந்துரை யாடலில் மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட அமைப்பாளர் பால்.அறிவழகன், மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிர மணியன், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர் சூரங்குடி பிரபாகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் கலந்துகொண்டார்.