நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ‘பகவான்’ களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டது.

கோயில் உண்டியல் காணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாம்! அவ்வள வும் 500, 1000 நோட்டுகளாம்.

திருப்பதி, பழனி, திரு வரங்கம், திருத்தணி கோயில் களில் உண்டியல் நவீன மய மாக்கப்பட்டுள்ளது, அதற்குப் பெயர் ‘ஈ உண்டியல்’. இனி பக்தர்கள் ரொக்கமாக காணிக்கை செலுத்த முடியாது. டெபிட், கிரடிட் கார்டுகள் வழியாகவே ‘பகவானுக்கு’ காணிக்கை செலுத்த முடியும்.

உண்டியல் காணிக்கை வங்கிக் கணக்குக்கு மாற்றப் பட்டு, பிறகு வங்கியிலிருந்து ‘பகவானுக்கு’ போய்ச் சேரும் போலும். ‘ரொக்கம்’ இல்லாத பணமாற்றத்துக்கு கடவுள்கள் தயார்படுத்தப்படுகிறார்கள்.

சிவன், பெருமாள் உள்ளிட்ட அனைத்து கடவுள்களையும் கறுப்புப் பணத்தையோ, செல்லாத நோட்டுகளையோ போட்டு பக்தர்கள் இனியும் ஏமாற்ற முடியாது.

“கடவுளுக்கே இப்படி கருப்புப் பணத்தை காணிக்கை யாக்குகிறோமே இது தெய்வக் குற்றமாகிவிடுமே” என்ற அச்சம், பயம் எல்லாம் பறந்து போய் வெகு நாளாச்சு! இது குறித்து முகநூலில் பல ‘கிண்டல்’கள் வலம் வருகின்றன. அவற்றில் சில:

“என்கிட்ட இருக்கிற ரெண்டு, மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்டுருவேன்.

பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல?”

---

ஒருத்தன் கேக்குறான்... “இன்னிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை திருப்பதி உண்டி யலில் போட்டா, அது பாவத் துல சேருமா... புண்ணியத்துல சேருமா?”

---

“1000 ரூபாய் கொடுத்து அய்ந்து நிமிடத்தில் கடவுளைப் பார்த்தவனையும், அய்ந்து மணி நேரம் கழித்து ‘ஏடிஎம்’மை பார்க்க வைத்த பெருமை மோடியையே சேரும்!”

கடவுள்களை எப்படியெல் லாம் கிண்டலடிக்கிறாங்கய்யா. ‘அய்யோ, இந்து கடவுள்களை அவமதிக்கலாமா?’ என்று ஆகாயத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறவங்க எங்கே போனாங்க? ஓ, நோட்டுகளை வாங்க ஏ.டி.எம். வாசலிலே நிக்குறாங்க போல.

இதுக்காகவாவது மோடியை பாராட்டணும்யா!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It