‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின.

சென்னையிலிருந்து

சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர்.

dravian chennai 600தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன் வாங்கிப் படித்தனர். அனகாபுத்தூரில் பள்ளி மாணவர்கள் திரண்டு வந்து கருத் துரைகளைக் கேட்டனர்.  கழக வெளியீடு களும் முதல் நாள் நல்ல விற்பனையானதாக கழகப் பொறுப்பாளர்கள் கூறினர். 

மே 17 இயக்கத் தோழர்களின் பறை இசைக் குழு 25.8.2019 அன்று ஒரு நாள் முழுதும் சென்னைக் குழுவினரின் பரப்புரையில் பங்கேற்று பறை இசைத்தனர். எட்வின் பிரபாகரன், பெரியார் யுவராஜ், நோக்கத்தை விளக்கிப் பேசினர். நாத்திகன் கொள்கைப் பாடல்களைப் பாடினார். மாலை பரப்புரையை முடித்துக் கொண்டு தாம்பரம் பெரும்பாக்கம் சமூகநலக் கூடத்தில் அன்றுமாலை நடந்த கழகத் தோழர் சக்திவேல் இல்லத் திருமணத்துக்கு பயணக் குழுவினர் வந்தனர்.

சக்தி வேலு-செல்வி இணையரின் மகன் வெற்றிச் செல்வன்-அம்மு சுயமரியாதை மணவிழாவை  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார். மண விழாவை முடித்துக் கொண்டு பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘தமிழ்க் களத்தில்’ தோழர்கள் இரவு தங்கினர். பொழிலன் தோழர்களை வரவேற்று இரண்டாம் நாள் காலை உணவுக்கு ஏற்பாடு செய்தார்.

இரண்டாம் நாள்

சென்னைக் குழுவினரின் இரண்டாம் நாள் பயணம் காலை 10 மணியளவில் முடிச்சூரிலிருந்து தொடங்கியது. படப்பை, வாலாஜாபாத், காஞ்சிபுரத்தில் பரப்புரை நடக்கிறது. காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்கள்.

chennai 1 600இரவு காஞ்சி மக்கள் மன்றத்தில் தங்குகிறார்கள். சென்னைக் குழுவில் விரட்டுக் கலைக் குழுவினரின் வீதி நாடக கலை நிகழ்ச்சிகள் இரண்டாம் நாளிலிருந்து தொடங்கின. குழுவுக்கு இரா. உமாபதி பொறுப்பாளராக இருந்து செயல்படுகிறார்.

விழுப்புரம் குழு

விழுப்புரம் குழுவினரின் பரப்புரை ஆக. 25 காலை 10 மணியளவில் கடலூர் - மஞ்சைக் குப்பத்திலிருந்து  தொடங்கியது. செம்மண்டலம், தூக்கணாம் பக்கம் ஆகிய இடங்களில் பரப்புரையை முடித்து பாக்கம் பகுதியில் மாலை பரப்புரை செய்தனர். இரவு பாக்கத்தில் தங்கினர். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் குழுவுக்கு பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். 

கோபி குழு

gopiteam 600கோபி பரப்புரைக் குழு ஆக. 25, காலை கோபி பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கியது. பிரின்ஸ் கஜேந்திர பாபு (ஒருங்கிணைப்பாளர், மக்கள் கல்வி மேடை) பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

Pin It