1936 ஆம் ஆண்டில் திராவிடர் இயக்க முன்னோடி களில் ஒருவரான மூவலூர் இராமமிர்தத்தம்மாள் எழுதிய நாவல் “தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்”. இந்நாவலுக்கு தன்னுரை எழுதிய இராமமிர்தத்தம்மாள் இவ்வாறு கூறுகிறார்:

 

“இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும். அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கை யில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதோடு, மனைவி மக்களையும் திண்டாடச் செய்யும் வாலிபர் களின் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும்” என்பதே, இந்நாவலின் குறிக்கோள். ‘தமிழ்க் குடிஅரசு’ பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.            

 

பக்: 320;   விலை: ரூ.150

வெளியீடு: தமிழ்க் குடிஅரசு பதிப்பகம், 14/12, மியான் முதல் தெரு, சேப்பாக்கம், சென்னை-600 005.

Pin It