தேவையான பொருட்கள்

ஒரே அளவில் 2”×2” உள்ள சில துண்டு வெள்ளைத் தாள், மற்றும் ஒரு காலி டப்பா.

மேஜிக் செய்யும் முறை

மேஜிக் செய்யும் முன் பார்வையாளர் களை உற்சாகப்படுத்தி ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். “நாம் புத்தகத்தைப் பார்த்து படிப்பதே கடினம். இப்ப என் மேஜிக் திறமையால் உங்களிடம் தரப்பட உள்ள துண்டு தாளில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தலைவர் பெயர் அல்லது ஓரிரு வார்த்தைகள் எழுதி யாரிடமும் காட்டாமல் பேப்பரை சுருட்டி இந்த டப்பாவில் போடவும்” என கூறவும். ஆங்காங்கே உள்ள சுமார் 10 அல்லது 15 பேரிடம் துண்டு பேப்பரை கொடுத்து எழுதச் சொல்லவும். பின்னர் அவற்றை நண்பர் மூலம் காலி டப்பாவில் சுருட்டி போடச் சொல்லவும்.

சேகரித்த டப்பாவை மேஜை மீது வைத்து நன்கு குலுக்கவும். பின் டப்பாவில் இருந்து ஒரு சீட்டை எடுத்து பிரிக்காமல் காதருகே கொண்டு சென்று தலையை அசைத்து ஏதோ காதில் கேட்பது போல் செய்யவும். இதோ ஒருவர் “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு” என்று எழுதி இருக்கிறார். இப்ப நம் எல்லோருடைய தேவையும் அதுதான் என பேசிக் கொண்டே சீட்டை விரித்து பார்த்து கையில் வைத்துக் கொள்ளவும். அடுத்த சீட்டை எடுத்துப் பிரிக்காமல் மீண்டும் சொல்லவும். இப்படியே சில சீட்டுக்களை படித்துக்காட்டும் போது இது யாருங்க எழுதியது என கேட்டு அவர்கள் கையை உயர்த்த இதை பார்க்கும் அவ்வளவு பேரும் ஆச்சரியப்படுவார்கள்.

மேஜிக் இரகசியம்

முதலில் ஒரு சீட்டில் உள்ளதை காதருகே வைத்து கேட்பது போல் சொல்லி விட்டுப் பிரித்துப் படித்து மனதில் வைத்துக் கொள்ளவும்.

அடுத்த சீட்டை எடுத்துப் பிரிக்காமல் முதல் சீட்டில் எழுதி இருந்ததை சொல்லவும். இப்போது இந்த சீட்டைப் பிரித்து தெரிந்து கொண்டு அடுத்த சீட்டை எடுத்துப் பிரிக்காமல் இதற்கு முன் படித்ததைச் சொல்லவும். இப்படியே அனைவரையும் ஆச்சரியத்தில் அசத்துங்கள்.

Pin It