சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்மந்தமாய் திருவாங்கூர் ஹைகோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்க உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கு நாம் என்ன செய்யலாம். வம்புச்சண்டைக்கு போகாமல் இருக்கலாமே ஒழிய வலிய வரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத்திற்கு பணிவான எச்சரிக்கை செய்கின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.01.1931)