கேள்வி: நான் ஒரு சிறுவணிகன்.  வணிகம் தொடர்பான என்னுடைய கணக்குகளை எல்லாம் ஒவ்வொரு மாதமும் எக்செலில் தொகுத்து வருகிறேன்.  கடந்த நான்கு மாதங்களின் வரவு செலவுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று எக்செலைத் திறந்தேன். ஆனால் ஒவ்வொரு மாதக் கணக்கும் ஒரே எக்செல் கோப்பில் இருந்தாலும் ஒவ்வொரு செய்தாளில்(‘Worksheet’) இருப்பதால் ஒப்பிட்டுப் பார்க்க மிகவும் கடினமாக உள்ளது.  இதற்கு ஏதாவது வழி இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

விடை:  உங்களுடைய ‘எக்செல்’ கோப்பைத் திறந்து கொள்ளுங்கள்.  நீங்கள் ‘எக்செல் 2003’ஐப் பயன்படுத்துபவராக இருந்தால் ‘Windows’ என்பதைத் தேர்ந்து ‘New Window’ என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள்.  அதில் மீண்டும் ‘Window’ என்பதைத் தேர்ந்து,

வரும் மேல் மீட்புப்பெட்டியில் ‘Tiled’ என்னும் தேர்வுப் பெட்டியைச் சொடுக்குங்கள்.  நீங்கள் ‘எக்செல் 2007’ ஐப் பயன்படுத்துபவராக இருந்தால், ‘View’ என்னும் தேர்வின் கீழ், ‘Arrange All’ என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள்.

அப்போது இடப்பக்கம் உள்ளது போன்ற மேல் மீட்புப் பெட்டி வரும்.  அதில் ‘Tiled’ என்பதைச் சொடுக்கிக்கொள்ளலாம்.  ‘­Tiled’ என்னும் தேர்வுக்குப் பின்,

என்பது போல் நம்முடைய எக்செல் திரை இருக்கும்.  இதன் வழி நாம் எளிதாக நம்முடைய மாதக் கணக்குகளைப் பார்த்துக்கொள்ளலாம்.  இத்திரைகளில் ஒவ்வொரு திரையிலும் ஒவ்வொரு மாதத்தைத் தேர்ந்து கணக்குகளை ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

Pin It