books_286பழைய புத்தகங்களுக்கென்று தனியாக வாசனை இருக்கும். புத்தகப் புழு மனிதர்களுக்கு அந்த வாசனை மிகவும் பிடிக்கும். புத்தகம் எத்தனைக்கெத்தனை பழையதோ அத்தனைக்கத்தனை அதன் வாசம் அதிகமாக இருக்கும்.

கிட்டத்தட்ட 100 வகையான, காற்றில் கலக்கும் எண்ணெய்ப் பொருள்கள் காகதிதங்களில் உள்ளன. காகிதம் பைன் மரத்திலிருந்து செய்திருந்தால் அதிலுள்ள ரோசின் என்ற பொருள் மூலம் அதிக ஸ்ட்ராங்காக வாசனை வரும்.

புத்தக வாசனைக்கு கிட்டத்தட்ட 15 வாசனை எண்ணெய்கள் காரணம் என்று தெரிகிறது. தகுந்த கருவியின் மூலம் அவற்றின் அளவை அளந்து புத்தகம் எவ்வளவு பழையது, எவ்வளவு நைந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானியர் குழு கண்டுபிடித்திருக்கிறது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It