கீற்றில் தேட...

ஜப்பானியர் மேலிருந்து கீழாகவும், இட, வலமாகவும் எழுதுகிறார்கள். சீனர்களும் மேலிருந்து கீழாகவும், வல இடமாகவும் எழுதுகிறார்கள். கிரேக்கர்கள் தொடக்கத்தில் முதல் வரி வலமிருந்து இடமாகவும், அடுத்த வரி இடமிருந்து வலமாகவும் எழுதினர். மெக்னீசியர்களோ கீழிருந்து மேலாக. உருது, பாரசீகம், துருக்கி, ஹீப்ரு ஆகிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுகின்றன. ஜப்பானில் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுதக் கற்றுக் கொடுக்கின்றனராம். நம்ம காந்தி இரண்டு கைகளால் எழுதக் கூடியவர் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.