தேவையான பொருட்கள்

விதையில்லாத பேரீச்சம் பழம் - 200 கிராம்
சீனி - 200 கிராம்
பால் - 100 மிலி
நெய் - 100 கிராம்
ஏலக்காய் பொடி அல்லது எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - சிறிது
 
செய்முறை

பேரீச்சம் பழத்தை பால் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சீனி கரையும் அளவு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பிசுக்குப் பதம் வரும் பொழுது அரைத்த பேரீச்சம் பழ விழுதைச் சேர்த்துக் கிளறவும். நடுவில் நெய் சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடி அல்லது ஏதாவது ஓரு எஸன்ஸ், முந்திரி சேர்த்து இறக்கவும்.

Pin It