தேவையானவை:

பூசணிக்காய் துருவியது.................2 கப்
சீனி................................................2 கப்
கேசரி பொடி....................................கொஞ்சம்
உப்பு...............................................1 கல்/சிட்டிகை
ஏலம்...............................................3
முந்திரி...........................................10
உலர்ந்த திராட்சை...........................10
ஜாதிக்காய் பொடி( தேவையானால்).1 சிட்டிகை
நெய்.............................................25 மில்லி

செய்முறை:
 
ஏலம்,முந்திரி + உலர்ந்த திராட்சையை அரை தேக்கரண்டி நெய்விட்டு வறுக்கவும். ஏலத்தைப் பொடி செய்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, அதில் துருவிய பூசணிக்காயை போட்டு சிறு தீயில் நீர் வற்றும்வரை வதக்கவும். வதங்கிய பூசணியில், சீனி, சிட்டிகை உப்பு + கேசரி பொடி போடவும்.சீனி போட்டதும், பூசணியில் நீர்விடும். இதனை அடிபிடிக்காமல், நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.

நீர் நன்கு வற்றி, கொஞ்சம் நீர் நிற்கும் பதத்தில், இதில் பொடி செய்த ஏலம், ஜாதிக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை + நெய் ஊற்றி போட்டு நன்கு கிளறி இறக்கி விடவும்.

பூசணிக்காய் அல்வா செய்வது மிக, மிக எளிது. உப்பு ஒரு கல்/சிட்டிகை போடுவதால், இனிப்பு தூக்கலாக இருக்கும். தேவையானால், இதில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி ருசியும், வாசனையும் அதிகரித்துக் கொடுத்து, டாப், டக்கராய் இருக்கும்..! 1/2 மணி நேரத்தில் செய்யலாம். மேலும் இதற்கு நிறைய நெய் தேவை இல்லை.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It